Sunday 19 May 2013

காலம் எல்லாத்தையும் பாத்துக்கும்


அன்னகி  காலைல  8 மணி  இருக்கும்  அம்பத்தூர்  பஸ்  ஸ்டாப்  பக்கதுல  இருந்த  சந்துல  8 ஆட்டோங்க  வரிசையா  நின்னுகிட்டு  இருந்துச்சு .ரோட்டில்  செல்பவர்கள்  ஆட்டோக்களை  கடந்து  செல்லும்போது எங்க  சார் போகணும்  என்று  கேட்ட  படி  நானும்  வேறு  சில  ஆடோகாரர்களும்  பேசி  கொண்டு  இருந்தோம் .ஒரு  40 வயது  மதிக்க  ஒருவர்  தன்னுடைய  மனைவி  குழந்தைகளுடன்  எங்களை  நோக்கி  வந்தார் . ஆட்டோவா  சார்  எங்க  சார்  போகணும்  என்று  அவரை  பார்த்து  கேட்டேன் . இல்லபா  இந்த  addressku எப்டி  போகணும்  என்று  கேட்டு  ஒரு  பத்திரிகையை  நீட்டினார் . அதை  வாங்கி  பார்த்து  விட்டு  வழி  சொன்னேன் .Thanksபா  என்று  கூறிவிட்டு  அந்த  குடும்பம்  அங்கிருந்து  நடந்து  சென்றனர் . நான்  அங்கு  நின்ற  முதல்  ஆட்டோவில்  போய் அமர்ந்தேன் .. பக்கத்து ஆட்டோவில்  அமர்ந்து  news paper படித்து  கொண்டிருந்த  என்னோட  நண்பன்  என்னாச்சுடா  சவாரி  ஒன்னும்  வரலையா  என்றான் .. சவாரி  வந்தா  நா  ஏன்  இங்க  இருக்கேன் , முதல  addressku வழி சொல்றதுக்கு 10 ரூபாய்னு ஆட்டோல  bardu போடணும்டா , சவாரிகுதான்  வராங்கனு  நெனச்சா  நம்மகிட்ட  addressku ரூட்ட கேட்டுட்டு  வழில  வேற  எதாச்சு  ஆட்டோல  ஏறி  போய்டுறாங்க  காலைல  இருந்து  இதுவரைக்கும்  13 பேருக்கு  வழி  சொல்லி  இருக்கேன்  என்றேன் .. விட்ரா  மக்களெல்லாம்  முன்னாடி  மாதிரி  இல்லடா  , ரொம்ப  விவரமாகிடாங்க  நிக்கிற  ஆட்டோவ  கூப்டா  காசு  அதிகமா  கேட்பாங்கன்னு , அவங்க  போற  வழிலய  எங்கயாச்சு  சவாரி  முடுச்சுட்டு  அதே  வழில  வர  ஆடோகாரங்கள  கூப்டு  காசு  கம்மியா  கேக்குறாங்க , போற  வழிதான  சும்மா  போறதுக்கு  ஆளு ஏத்திட்டு  போனா  லாபம்னு  கம்மி  காசுக்கு  நம்மாளுங்களும்  ஒத்துக்குறாங்க  , வேற  என்ன  பண்றது ..

எல்லாம்  ஒரு  பொது  சேவைதான   என்றான் .. சரி  நீ  எந்துருச்சு  அந்த  பொது  சேவையை  பண்ணு  என்று  சொல்லி  விட்டு  அவன்  படித்து  கொண்டிருந்த  பேப்பரை  புடுங்கினேன் .. முதல்  பாகத்தை  படித்து  விட்டு .. அப்டி  போடு , teacheraye படிக்கிற  பையன்  போட்டு  தள்ளிதான்  போல , இந்த  காலத்து  புள்ளைங்கெல்லாம்  எமகாதனுன்களா  இருக்காங்க  நாம  எவளவோ  பரவா  இல்ல  போல  என்றேன் .. அவன்  சிரித்தபடி  டை  நீ  மட்டும்  ஒழுங்காகும்  இங்கிலீஷ்  வாத்தியாரோட  மண்டைய உடச்சனாலதான  உன்ன  schoola விட்டு  தொரதுனாங்க  என்றான் . பேசி  கொண்டிருக்கும்போது  ஒரு  வயதானவர்  எங்களிடம்  விஜயலக்ஷ்மிபுரம்ல  நேதாஜி  ஸ்ட்ரீட்டு  போணும்பா  என்றார் .. போலாம்  உட்காருங்க  சார்  என்று  கூறி  நியூஸ்  பேப்பரை  மற்றவனிடம்  குடுத்து  விட்டு  ஆட்டோவை  வெளியே  நகர்த்தினேன் .. எவ்ளோவ்பா ?..... 60 ருபாய்  சார் .. என்னபா  எப்பவும்  40 ரூபாய்தான  என்றார் .. போற  வழில  ரோட  பறுச்சு போட்ருக்காங்க  சார்  சுத்திகிட்டு  போனும்  அதான்  சார்  என்றேன் .. சரி  என்று  அவரும் ஏறி  உட்காந்து  கொண்டார் .. ஆட்டோவை  ஸ்டார்ட்  செய்து  கிளம்பினோம் .. பாதி  தூரம்  செல்லும்  வழியில்  ஆட்டோவில்  உட்காந்து  வந்தவரின்  போன்  ஒலித்தது .. எடுத்து  பேசியவர்  சொல்லுப்பா  எப்டி  இருக்க  என்றார் .. கொஞ்ச  நேரம் அமைதியாக  பேசி  கொண்டே  இருந்தார் .. திடீரென்று  கோவத்துடன்  ஆமாண்டா  நா  ஒர  வஞ்சவனயாதான்  பாக்குறேன் , கஷ்டப்பட்டு  சம்பாரிச்சு  சேர்த்து  வச்சதெல்லாம்  உங்க  ரெண்டு  பேருக்கும் குடுத்துட்டு  இப்ப  hospitaluku நா  தனியா  போயிடு  வரேன்  அத பத்தி  ஒரு  வார்த்த  எவனாச்சு  கேட்டிங்களா  போன் வைடா  நன்றி  கெட்டவனுங்களா .. நான்  ஆட்டோ  கண்ணாடி  வழியாக  அந்த  பெரியவரின் முகத்தை  பார்த்தபடியே  வண்டி  ஓட்டினேன் .. நான்  கண்ணாடியில்  அவரை  பார்பதை  உணர்ந்த  அந்த  பெரியவர்

பணம்  காசு  இல்லாதவன்  கூட  நிம்மாதியா  சேத்துரலாம்  ஆனா  கொஞ்சம்  பணமிருந்தாலும்  நாரி  போய்தான்  சாகனும்  என்றார் .. ஏன்  சார் ? என்றேன் .. ரெண்டு  பசங்கதான்  ரெண்டு  பெருகும்  சமமாதான்  சொத்த  பிரிச்சு  குடுத்தேன் .. இப்ப  மாசம்  மாசம்  பென்ஷன்  பணம்  வருது  அதா  சின்னவன்  கொஞ்சம்  கஷ்ட  பட்ராநேனு  அவனுக்கு  கொஞ்சம்  பணம்  குடுக்குறேன் , அவனுக்கு  மட்டும்  குடுக்குற  எனக்கும்  குடுன்னு  பெரியவன்  கேக்குறான் .. ரெண்டு  பேருதான்  இருக்கானுங்க  ஒருத்தனுக்கு  ஒருத்தன்  இவனுங்கதான்  உதவியா  இருக்கனும்  ஆனா  இவனுங்க  மத்தவங்க  பேச்ச  கேட்டுகிட்டு  கூட  பொறந்தவன்  கூடவே  சண்ட  போட்டுக்கிட்டு  பேசாம  இருக்கானுங்க .. இவனுங்க  ரெண்டு  பெருகும்  நடுவுல  மாட்டிகிட்டு  நாதான்  சாவுறேன் ..  என்ன  சார்  பண்றது  ஆட்டோ  ஒற்றவன்ல  ஆரம்பிச்சு  அம்பானி  வரைக்கும்  நாட்டுல  எல்லா  வீட்டுலயும்  இதே  பிரச்சனைதான் .. mmm காலம்  மாறி  போச்சுப்பா , என்னோட  அண்ணன்  சாகறதுக்கு  முன்னாடி  வரைக்கும்  நா  இல்லாம  அவர்  வீட்டுல  ஒரு  சின்ன  விசெஷம்கூட  நடக்காது ,அவர  இதுவரைக்கும்  ஒரு  முறை  கூட  எதுத்து  பேசுனதில்ல .. ஆட்டோ  காரர்  சிரித்தபடி  அதெல்லாம்  அந்த  காலம்  சார் .. என்னமோ  போ  பெத்தவங்கள  நிம்மாதியா  கண்ணா  மூட  விட  மாட்றானுங்க ,நா  சாகுரண்ணகி  என்ன  கூத்து  பண்ண  போறானுங்களோ  தெரியல , அங்க  பைக்  நிக்கிது  பாருப்பா  அங்க  நிருதிக்கபா  என்றார் .. mmm சரி  சார் .அந்த  பெரியவர்  இறங்கி  60 ருபாய்  குடுத்தார் .பணத்தை  வாங்கிகொண்டு   ஆட்டோ  ஸ்டான்டிர்கிற்கு  போகும்  வழியில்  அந்த  பெரியவர்  பேசியதை  நினைத்து  பார்த்தேன் .. மத்த  குடும்பத்துல  பணத்துக்காக  சண்ட  போட்டுகிட்டு  அண்ணன்  தம்பிங்க  பேசாம  இருப்பாங்க  ஆனா  என்னோட  அண்ணனுக்கும்  எனக்கும்  கேவலம்  பணத்துக்காக  பிரச்சன  வந்ததே இல்ல . .

என்னோட  அப்பா  நா  பொறந்து  சில  மாசங்கல்லையே  இறந்துட்டாரு .. என்னோட  அம்மாதான்  சித்தாள்  வேல  செஞ்சு  எங்கள  படிக்க  வச்சாங்க .. என்னோட  அண்ணன்  12th முடுச்சுட்டு  ஒரு  கம்பெனில  வேளைக்கு  சேந்தான்  நா  அப  8thdhaan படுசிடு  இருந்தேன் .. சின்ன  வயசுல  எல்லா  அண்ணன் தம்பிங்க  மாதிரிதான்  சண்ட  போட்டு  அடுசுகுவோம்  அபாரம்  ஒண்ணா  செந்துகுவோம் .. ஒரு  நாள்  எங்கம்மா  வேலை  செஞ்சுகிடிருகும்போது  சுவர்  இடிஞ்சு  அவங்க  மேல  விழுந்துடுச்சு ..உடனே  ஹோச்பிடல  சேத்தோம் ஆனா  ரெண்டு  நாள்  கழிச்சு  எங்கம்மா  இறந்துட்டாங்க .. என்னோட  வாழ்க்கைல  நா  பாத்த முதல்  இழப்பு  எங்கம்மாவோட  இறப்புதான் .. எங்கம்மா  இறந்த  பிறகு  என்னோட  அண்ணன்தான்  குடும்பத்த  கவனிச்சு  கிட்டான் .. கண்டிக்க  ஆள்  இல்லாதனால  மத்த  பசங்களோட  சேந்து  schooluku போகாம  சில  தப்பான  விஷயங்களுகுள்ள  போனேன் .. அது  என்னோட  அண்ணனுக்கு  தெரிஞ்சு  ஒரு  நாள்  ரோட்லே  வச்சு  என்ன  அடுச்சு  அசிங்க  படுத்துநாறு .. அதுகபுரம்  என்னோட  அண்ணன்  கூட  அதிகமா  பேசுறதே  இல்ல , எதாச்சு  கேட்டா  அதுக்கு  பதில்  மட்டும்  சொல்லுவேன் .. .....
பழசெல்லாம்  நெனசுகிடே  ஆட்டோல  வந்துகிட்டு  இருந்தப்ப  யாரோ  என்ன  கூப்டாங்க  திரும்பி  பார்த்தா  என்கூட ஸ்டாண்ட்ல  ஆட்டோ   ஒட்டுரவரு  ஆட்டோ  ஓரமா  நிறுத்தி  வச்சிருந்தாரு .. இறங்கி  என்னாச்சு  என்று  கேட்டேன் . தெரியலடா  clutch போய்டுச்சுன்னு  நெனைக்கிறேன்  சவாரி  egmore போகுது 300 பேசி  இருக்கேன்  போறியா  என்றான் .. Mmm சரிடா  நா  போயிட்டு  வரேன் , ஒரு  60 வயது  மதிக்கத்தக்க  முதியவரும்  அவருடைய  மனைவியும்  இறங்கி  என்னோட  ஆட்டோவில்  ஏறினர் .. அந்த  ஆட்டோ  காரர்  உங்களுக்கு  தெருஞ்சவராபா  நாங்க  அவருக்கு  காசு  குடுக்கல  நீ  குடுதுடுவியாபா ? என்று  கேட்டார் .. ஆமா  சார்  என்னோட  ஆட்டோ  ஸ்டான்ட்தான்  நா  குடுத்துடுவேன்  சார் ..

அப்ப சரிபா .. போற  வழில  பெட்ரோல்  மட்டும்  போட்டுட்டு  போய்டலாம்   சார் .. Hmmm சரிபா .. பெட்ரோல்  பனகல  பெட்ரோல்  போடுறதுக்காக  queula ஆட்டோவ  நிறுத்திட்டு  இறங்கி  நின்னேன் .. எனக்கு முன்னாடி  பைக்ல  பெட்ரோல்  போட்டுகிட்டு  இருந்தவரு  திடீர்னு  அந்த  பெட்ரோல்  போட்ரவரோட  சண்ட  போடா  ஆரம்பிச்சாரு .. அந்த  பெட்ரோல்  பனகல  இன்னொரு  இடத்துல  queue காலியா  இருந்தனால  ஆட்டோவ  தள்ளிகிட்டு  அங்க  போய் பெட்ரோல் போட்டுட்டு  கெளம்புனோம் .. பெட்ரோல்  பனகல  என்னபா  பிரச்சன ? என்றார் .. தெரியல  சார்  ஏதோ  மீட்டர்  ச்ற்றைக்ஹ்ட  50la இருந்து  ஒடுசுனு  அவரு  சொல்றாரு  இல்ல  நீங்க  பாக்கள சரோல  இருந்து  ஸ்டார்ட்  ஆச்சு , ச்டர்டிங்க்ள  மீட்டர்  பாஸ்டா  ஓடும்  அதா  நீங்க  பாகலன்னு  பெட்ரோல்  போடறவரு  சொல்றாரு  .. Oh யாருமேல  தப்பு ?.. தெரியல  சார் , அவன்  நிஜமாவே  யாமாதிஉம்  இருக்கலாம்  இல்ல  இவங்க  சரியா  கவனிக்காம  கூட  இருந்திருக்கலாம்  கடவுளுக்குதான்  வெளிச்சம் .. Mmmm நம்மாளுங்க  ஒரு  பொருள  கண்டு  புடிகரதுகு  முன்னாடி  அதுல  மோத  எப்டிலாம்  யாமாதுலாம்னு  கண்டு  புடிசிடுவாங்க  போல  என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டார் .. நானும்  அவரு  சொல்றது  சரின்குற  மாதிரி  தலை  அசைத்தேன் .. நியூ  ஆவடி  ரோடு  வழியா  போய்டலாம்  சார்  இல்லாட்டி  அண்ணா  நகர்ல  ரொம்ப  trafficaa இருக்கும்  சார்  என்றேன் .. Mmm . நா  40 வருஷத்துக்கு  முன்னாடி  சென்னைக்கு  வந்தப்ப  அன்ன  நகர்  arealaam காடு  மாதிரி  இருந்துச்சு  இப்ப  பாரு  எப்டி  இருக்குனு  என்றார் ..  அவருடைய  மனைவி  ஐயோ  போதும்ங்க  மறுபடியும்  உங்க  புராணத  ஆரம்பிகாந்திங்க  அந்த  தம்பிய  வண்டி  ஓட்ட  விடுங்க  என்று  சிறிது  கொண்டே  சொன்னாங்க .. நானும்  சிறிது  விட்டேன் .. 
ஒரு  retire ஆனவனுக்கு  தேவ என்ன  தெரியுமாப்பா  அவனுக்கு  பேச்சு  சுந்தந்திரம்  குடுத்து அந்த  கெழவன்  என்ன  சொல்றான்னு  கேட்டாலே  போதும்  அதா  விட  அவனுக்கு  முக்கியமானது  வேறு  எதுவும்  இல்ல . ஆனா  ஒரு  ஆம்பள  என்னிக்கு  retire ஆகுரானோ  அன்னிக்கே  அவனோட  பேச்ச  அந்த  வீட்டுல  யாருமே  கேக்குறதுக்கு ரெடி இல்ல  என்றார் .ஆமா  நீங்க  இங்க  வந்து  40 வருஷமாச்சு  இப்டி  பெசிஎதான்  ஒரு  வீடு  கூட  வாங்க  விடாம  மாசம்  மாசம்  கப்பம்  மாதிரி  வாடகை  குடுக்குறோம் , அப  வாங்க  சொன்னதுக்கு  அந்த  ஏரியா  சரி  இல்ல  இந்த  ஏரியா  சரி  இல்லன்னு  சொன்னிங்க  இப  கேட்டா  அவங்க  சொல்ற  விலைய  கேட்டே  மயக்கம்  வருது  என்று  அவருடைய  மனைவி  கூறினார் . நானும்  தேடிகிடுதான்  இருக்கேன்  ஆனா  எங்க  பாத்தாலும்  யாமாதுரானுங்க  நல்ல  புரோக்கர்  கெடைக்க  மாடிகிரானுங்கபா  அவனுங்க  commisionlaam எந்த  குறையும்  வைக்க  மாட்டேன்  ஆனா  enna ஏமாத்தாம  இருக்கனும்பா .. Hmmm நீங்க  தேடிகிடேதான்  இருபிங்க  என்றார்  அவருடைய  மனைவி .. ஆட்டோ  காரங்க  நரையா பேரு real estate வேலையும்  செய்வாங்களே  நீ  செய்யளயாபா என்றார் . இல்ல சார்  எனக்கு  அதெல்லாம்  தெரியாது , எனக்கு  தெரிஞ்ச   ஒருத்தர்   real estate பண்றாரு   வேணும்னா   அவரோட   no. தரேன்   பேசி  பாருங்கநு   சொன்னேன் .. Hmmm குடுப்பா   ஆனா  நம்பிகையான  ஆளா ?, நம்பி  போலாம்  சார் , அவர்  சும்மா  தெருஞ்சவங்குளுக்கு  மட்டும்தான்  பண்ணுவாரு  சார்  அவர்  brokerlaam இல்ல  சார்  அம்பத்தூர்  ஈஸ்டடேல  tvs கம்பெனில  வேலை  பாகுராருனு  சொன்னேன் .. Oh சரிபா  no. சொல்லுபான்னு  கேட்டாரு .. No.ra சொன்னேன் .. யாரு  குடுதாணு  கேட்டா  joseph குடுதாருனு  சொல்லுங்க  சார் .. நீ  christianaapaa ஆனா  முருகர்  போட்டோ  ஒட்டிருக்க.. என்  பேரு  துரை  சார்  முன்னாடி  ஒரு  ஆட்டோல  வந்திங்களா  அவர்  பேருதான்  joseph.. Oh உனக்கு  தெரியாதா  அவர ?..அது  என்னோட  அண்ணனோட  no.தான்  சார்  இப்ப  குடும்பத்துல  பிரச்சனை  அதனால  அவருக்கும்  எனக்கும்  பேச்சு  வார்த்தை  இல்ல

அதான்  சார் .. Oh அப்டியா  சரிபா நா பேசுறேன்னு சொன்னாரு .. Egmore ச்டடிஒன்ல  அவங்கள  இறக்கி  விட்டுட்டு  வர  வழில  ஒரு  foreignerum இன்னொரு  இந்தியரும்  ஆட்டோவை  நோக்கி  கை  அசைத்தனர் .. அவர்கள்  அருகில்  சென்று  ஆட்டோவை  நிறுத்தினேன் .. Anna square போகணும் , எவ்ளோவ்பா  என்றார் .. 60ருபாஇ  தாங்க  சார்  என்றேன் .. அவர்கள்  இருவரும்  ஏறி  கொண்டனர் .. அந்த  foreigner மீட்டர்  பத்தி  ஏதோ  கேட்டாரு , அதுக்கு  பக்கதுல  இருந்தவரு  englishla ஏதோ  சொல்லி  சிரிச்சாரு .. வர  வழி  முழுவதும்  சென்னையை  பற்றி  அந்த  foreigneridam சொல்லி  கொண்டே  வந்தார் .. Traffic signalil வேகமாக  செல்ல  முயன்ற  பைக்  ஒரு  காரை  இடித்து  அந்த  பைக்கில்  இருந்த  இருவரும்  கீழே  விழுந்தனர் .. அந்த  பைக்  ஒட்டி  வந்தவர்  அந்த  சார்  காரருடன்  சண்டை  போடா  தொடங்கினார் .. கூட்டம் கூடியது  Traffic அதிகமாகி  கொண்டே  போனது , அந்த  foreigner ஏதோ  கேட்க  பக்கத்தில்  இருந்தவர்  சொன்னதை  கேட்டு  அந்த  foreigner சிரிக்க  தொடங்கி  விட்டார் .. நான்  கண்ணாடியில்  பார்பதை  உணர்ந்த  அவர்  , என்னாச்சு  traffic constable எங்கனு  கேட்டாருப்பா , அவர்  பக்கதுல  இருக்க  போட்டி  கடைல  வசூல்  பண்ணிக்கிட்டு இருப்பாருன்னு  சொன்னேன்  அதான்  இப்டி  சிரிக்றாங்க  என்றார் .. அது  உண்மையாக  இருந்தாலும்  அதை  அந்த  foreineridam சொல்லி  சிரித்தது  எனக்கு  எரிச்சலாக  இருந்தது ..  எல்லாருக்கும்  சீக்கிரம்  போகணும்னு  ஆசைதான் , நம்மல்ல  ஒருத்தன்  traffic rulesa மீறுனா  போதும்  நாம  எல்லாரும்  அதே  மாதிரி  traffic rules மீரிடுவோம் .. Signal மாறி  ரெண்டு  seconddhaana ஆச்சுனு  நெனச்சு  அந்த  பைக்  காரன்  போனான் , சிக்னல்  மாறுறதுக்கு  இன்னும்  ரெண்டு  செகண்ட்தான  இருக்குனு  அந்த  சார்  காரன் எதிர்ல  வந்தான்  ரெண்டு  பேரும்  இடுசுடானுங்க .. இப்ப  அந்த  ரெண்டு  பேரோட  அவசுரதுல  நாம  எல்லாரும்  வெயிட்  பண்றோம் சார் , இதுல டிராபிக் constable.என்ன சார் பண்ணுவாரு

அதான்பா  traffic constable ஒழுங்கா  நின்னா  எல்லாரும்  ஒழுங்கா  போவாங்கள  என்றார் .. Hmmm கரெக்டுதான்  சார்  அவரும்  மனுஷந்தான  அடிக்கிற  வெயிலுக்கு  எவளோ  நேரம்தான்  சார்  நிக்க  முடியும் , பாத்ரூம்க்கு கூட  போய் இருக்கலாம்ல  சார்  என்றேன் .. ஒரு  ஆடோகாரர்  traffic constableku சப்போர்ட்  பண்றத  பாக்குறது  என்  வாழ்க்கைல  இதான்பா  முதல்  தடவ  என்றார் .. நான்  சிரித்தபடி  கொஞ்ச  நல்லவங்களும்  மீதி  இருக்காங்க  சார் .. அவரும்  சிரித்து  கொண்டே  அதுவும்  கரெக்டுதான்  என்றார் .. அந்த  foreigner ஆட்டோவில்  இருந்த  மீடரைகாடி  ஏதோ  கேட்க  அவர்  ஏதோ  சொல்லி  சிரித்தார் .. என்ன  சார்  ஏன்  மீட்டர்  போடலேனு  கேக்குறாரா  என்றேன் .. ஆமாப்பா .. எங்களுக்கு  கட்டுபடியாகாது  அதனாலதானு  சொல்லுங்க  சார் .. Traffic constable வந்து  trafficai சரி  செய்து கொண்டிருந்தார் .. அந்த  foreigner ஏதோ  கேட்க  அவர்  gujaratlalaam மீட்டர்  போட்டுதான்  ஒட்டுரன்களே  அது  எப்படி  ஒரு  நாட்டுல  அங்க  கட்டுபடியாகுது  இங்க  முடியாதுனு  கேக்குராருபா ? என்றார் .. சார்  அந்த  ஊர்ல  எத்தன  ஆட்டோ  சார்  ஓடுது  அங்க  விட  இங்க  ஆட்டோ  அதிகம்  சார் .. நம்ம  நாட்டுலதான்  ஒவ்வொரு  statelayvm ஒவ்வொரு  பெட்ரோல்  விலை  ஆச்சே  சார் .. நாங்க  மீட்டர்  போட்டு  வோட்டுனா  தற்கொலைதான்  சார்  பண்ணிக்கணும்  பெட்ரோல்  விலை  வேற  எரிகிடே  இருக்கு .. பெட்ரோல்  விளைய  விடுங்க  சார்  காய்  கரி விலையும் எருதே  சார் , நாங்களும்  காய்  கரிலாம்  வாங்கித்தான  சார்  சாபுடனும்  அப்ப நாங்க  காசு  அதிகமா  கேட்டா  மட்டும்  ஏன் சார்  எல்லாரும்  கோவ படறிங்க .. இது  இல்லாம  ஷேர்  ஆட்டோ  காரங்க , லஞ்சம் , குடும்ப  செலவு  எல்லாம்  எங்களுக்கும்  இருக்கு  சார் .. ஒரு  நாளைக்கு  ஒரு  long சவாரி , ரெண்டு  local சவாரியாசு  கிடைசாதன்  நாங்க  சாப்ட  முடியும் , இதுல  நம்மாளுங்க  எங்க  பாத்தாலும்  ரோட  தோண்டி  தோண்டி  போட்டுடறாங்க ,

அந்த  ரோடுங்கள  போனா  ஆடல  இருந்து  screwnga கீழ  விழுந்துடுது  இதுல  ஆடவ  சரி  பண்றதுக்கு  நாங்க  என்ன  சார்  பண்றது  இதலாம்  அவருக்கு நல்லா  எடுத்து  சொல்லுங்க  சார் , தமிழ்  நாட்டுல  இருக்க  ஆட்டோ  காரன்கலாம்  ஏதோ  கொள்ள  அடிகிரவங்கனு நெனச்சுக்க  போறாங்க  என்றேன் .. நான்  சொன்னதை  அவரிடம்  அவர்  இங்கிலிஷில்  சொன்னார் .. அந்த  foreigner ஆச்சர்யத்துடன்  ஏதோ  கேட்க .. பக்கத்தில்  இருந்தவர் , இப்டி  நீங்க  மீட்டர்  போடாம  வெளி  நாட்டுல  இருந்து  வர  எங்க  கிட்ட  ரொம்ப  அதிகமா  காசு  வாங்குறிங்க  அதனாலதான்  நாங்க  தனியா  இந்தியா  வரதுக்கே  பயபடுரோம்னு  சொல்றாங்கபா  என்றார் .. சார்  mahabalipurathuko, சென்னை  museaumko வெளி  நாடு  காரங்களுக்கு  ஒரு  விலை  நம்மாளுங்களுக்கு  வேற  விலைதான்  சார் .. அவங்க பாடன் முப்பாட்டன் எல்லாம் நம்ம பாட்டன் முப்பாட்டன் கிட்ட இருந்து இத விட கேவலமா தான காசடுசாங்க .... இருக்கவங்க கிட்டதான சார் கேட்க முடியும் ... Government பண்ணா  தப்பில்ல  எங்கள  மாதிரி  ஆளுங்க  பண்ணா  தப்பா சார் .. அது  எப்டி  சார்  தப்பு  கீழ  இருக்கவங்க  பண்ணா  அது  தப்பா  தெரியல , பெரியாளுங்க  governmentu பண்ணா  அது  தப்பா  தெரிய மாடிகிது .. நான்  சொல்வதை  அவர்  englishil சொல்லி  கொண்டிருக்கும்போதே  beachai அடைந்தோம் .. அந்த  foreigner தன்னுடைய  cameraavil என்னை  ஒரு  போட்டோ  எடுத்தார் . நான்  புரியாமல்  பகதிளிருந்தவரை  பார்த்தேன் , அவங்க  இந்தியாவ  பத்தி  எழுத  போறாங்களாம்  அதான்  தான்  சந்திச்சவன்களோட  போடோவலாம் அதுல  போடுவாங்க  அதான்பா  என்று  சொல்லியபடி  60rubaai குடுத்தார் .. நான்  ஆச்சர்யத்துடன்  அந்த  foreignerai பார்த்தேன்  அந்த  foreigner எனக்கு  கை  குடுத்துவிட்டு  நடந்து  சென்றார் .. ஆட்டோவை  திருப்பி  கொண்டு  வரும்  வழியில்  ஒரு  வயதான  அம்மா  ஆட்டோவை  நோக்கி  கை அசைத்தார் .. அருகில்  சென்று  நிறுத்தியதும்  new secreteriat buildingkitta போனும்  எவ்ளோன்னு  கேட்டாங்க ..

எப்டியும்  நா  அந்த  பக்கம்தான்  போகணும்  அதனால  கம்மியா  30 ரூபாய்தான்  கேட்டேன்  அவங்களும்  பேரம்  பேசாம  ஏறி  உட்காந்தாங்க .. கண்ணகி  சிலைகிட்ட  வரப்ப  டிராபிக்  அதிகமாகி  வண்டிங்கலாம் நின்னுகிட்டு  இருந்துச்சு ..என்னோட  ஆட்டோ  பக்கத்துல  ஒரு  ப்ளூ  கலர்  ஹீரோ  ஹோண்ட  splendor பைக்  வந்து  நின்னுச்சு .. அந்த  பைக்  எனக்கு  ரொம்ப  பழக்க  பட்ட  பைக்  நா  என்னோட  வாழ்க்கைல  முதல்  முறையா  ஓட்டுந  பைக்  அதுதான்  அதனால  அந்த  பைக்  நா  எந்த  பக்கம்  இருந்து  பாத்தாலும்  கண்டுபுடிசிடுவேன் .. என்னோட  அண்ணன்தான்  அதுல  உட்காந்திருந்தாறு , நா  அவர  பாக்குறத  உணர்ந்து  அவரும்  என்ன  பாத்தாரு  ஆனா  அவர்  முகத்துல  எந்த  வித்யாசமுமில்லாம  வேற  பக்கம்  திரும்பிடாறு , டிராபிக்  signal மாறுன  உடனே  என்ன  ஒரு  வாடி  பாத்தாரு  ஆனால்  எதுவும்  பேசாம  வேகமா பொஇடாரு .. மறுபடியும்  என்னோட  அண்ணன்  ஞாபகம்  வந்துச்சு , அண்ணன்  தம்பி  உறவு  அக்கா  தங்கச்சியோ , அக்கா  தம்பி  மாதிரி  ரொம்ப  வெளிய  அதிகம்  காட்ட  மாட்டாங்க .. சின்ன  வயசுல  tv ரிமொட்காக  சண்ட  போடா  ஆரம்பிசிருபாங்க  ஆனா  நாட்கள்  நகர  நகர  ரெண்டு  பேரும் விலகி  வேற வேற உலகத்துக்கு  போய்டுவாங்க .. நானும்  என்னோட  அண்ணனும்  கூட  அப்டிதான்  இருந்தோம் .. சின்ன  வயசுல  இருந்தே  நா  அவ்ளோவ் சீக்கிரம்  என்னோட  அண்ணன்  கிட்ட  பேச  மாட்டேன் .. என்னோட  அம்மா  செதபுரம் , ஒரு  முறை  என்னோட  அண்ணன்  என்ன  ரோட்ல  வச்சு  அடுசான்  அதுகபுரம்  என்னோட  அண்ணனே  பேசுனாதான்  நா  பேசுவேன் , நானா  பொஇலாம்  அவன்கிட்ட  பேசமாட்டேன் .. அவன்  அளவுக்கு  நா  அவன்கிட  வெளிபடயாவே  இல்ல .. என்னதான்  எங்க  ரெண்டு  பேருக்குள்ளையும்  பாசம்  இருந்தாலும்  நாங்க  அதா  வெளிய  காமுச்சதே  இல்ல .. 
இப்டி  போய் கிட்டு இருந்த  ஏன்  வாழ்க்கைல  காதல்  வந்துச்சு , என்னோட ஆட்டோ standukku பக்கத்து  வீட்டு பொண்ணு  அஞ்சலியா  love பன்ன ஆரம்பிச்சேன் , அவளும்  என்ன  லவ்  பண்ணா .. நா  சும்மா  சுத்திக்கிட்டு  இருந்தனால  என்னோட  அண்ணன்  ஒரு  சின்ன  கம்பெனில  வேலைக்கு சேத்து விட்டாரு .. ஆனா  எனக்கு  அந்த  வேலை  அவ்ளோவா  பிடிகள , என்னோட  friendungalaam ஆட்டோ  ஓட்டிகிட்டு  இருந்தாங்க  நானும்  ஆட்டோ  ஓடலாம்னு  முடிவு  பண்ணி  என்னோட  அண்ணன்  கிட்ட  கேட்டேன்  ஆனா  அவரு  அதெல்லாம்  சரி  வராது  ஒழுங்கா  கம்பெனி  வேலைக்கு  போக  சொன்னாரு .. ஆனா  நா  அவரோட  பேச்ச  கேட்காம  என்னோட்  friendunga மூலமா  ஒரு  வாடக  ஆட்டோ  ஓட்ட  ஆரம்பிச்சேன் .. காசு  கொஞ்ச  கைல  வந்ததும்  எனக்கு  கொஞ்சம்  திமிரு  அதிகமாஇடுசு , அஞ்சலியா  கூட்டிகிட்டு  ஆட்டோல  சுத்த  ஆரம்பிச்சேன் .. எங்க  விஷயம்  எங்க  ரெண்டு  பேரு  வீட்லயும்  தெருஞ்சுசு .. என்னோட  அண்ணன்  என்ன  ரொம்ப  திட்டுனாரு  அபாரம்  கடைசியா  நா  அவங்க  வீட்ல  கேட்டு  பாக்குறேன்  ஆனா  அவங்க  வீட்ல  ஒத்துகலேனா  நீ  எல்லாத்தையும்  மறந்துட்டு  ஒழுங்கா  இருக்கணும்னு  சொன்னாரு .. அவளோட  வீட்ல  நிச்சயம்  ஒத்துக்க  மாட்டாங்கனு  எனக்கு  தெரியும் .. நா  சேர்த்து  வச்சிருந்த  காசையும்  என்னோட  friends மூலமாவும்  லஞ்சம்  குடுத்து  ஒரு வாரத்துல  register marriage பண்ணுனோம் .. ஆனா  இந்த  விஷயம்   தெருஞ்சு  அஞ்சலியோட  வீட்ல  இருந்து  வந்து  எங்க  வீட்டுக்கு  போய்  என்னோட  அண்ணன்கூட  பெரிய  சண்டையே போடாங்க .. நானும்  அஞ்சலியும்  எங்க  வீட்டு  கதவ தட்டுனோம் .. என்னோட  அண்ணன்  கண்டிப்பா  கோவத்துல  இருப்பாருன்னு  தெரியும் , ஆனா  அவரு  கதவ  தறந்து எதுவும்  பேசாம  என்ன  கேவலமா  பாத்தாரு , அவரு  அப்டி  பாத்ததே  எனக்கு  செருப்பால  அடுச்ச  மாதிரி  இருந்தாச்சு .. இனிமே  இந்த  வீட்டு  பக்கம்  வந்த  வெட்டி  போற்றுவேன்  எங்கயாச்சு  போய்  சாவுடா  தெரு  பொருக்கி  நாயேன்னு  காத்திடு  கதவ  வேகமா  சாத்திட்டு  பொஇடாரு ..

அதுகபுரம்  வெளிய  எங்க  பாத்தாலும்  அவரு  என்ன ஒரு  மனுஷனாகூட  மதிகள .. இப்டியே  6 மாசமாஇடுசு  நானும்  கொஞ்ச  நாள்ல வந்து  பேசிடுவாறு எப்பவும்  வழக்கமா  சண்ட  போட்டாலும்  அவர்தான்  முதல  வந்து  பேசுவாரு  அதே  மாதிரி  வந்து  பேசுவாருன்னு  நெனச்சா  பேசாமையே  இருக்கார்னு  யோசிச்சேன் .. ரோடு ல பாக்குரவன்கலாம் அண்ணனுக்கு முன்னாடி உனகென்னடா கல்யாணத்துக்கு அவசரம்னு திட்டுனாங்க .. அஞ்சலியோட  வீட்ல  3 மாசத்துலயே  சமாதானமாகி  எங்கள  ஒதுகிடாங்க  ஆனா  இவர்தான்  என்ன  மறந்துடாரோனு  தோணுது ..new secreteriat buildingkitta வந்தப்ப  இங்கயே  நிருதிகிங்கனு  ஆடோகுள்ள  இருந்தவங்க  குரல்  கேட்டுச்சு  அவங்கள  இறக்கி  விட்டேன்  அங்க  பக்கதுல  இருந்த  தள்ளுவண்டில  நறைய ஆட்டோ  காரங்களும்  மக்களும்  பரோட்டா  சாப்டுகிட்டு  இருந்தாங்க .. மானிய  பாத்தேன்  2 மணியாகி  இருந்துச்சு , நானும்  ஆட்டோவ  ஓரமா  நிறுத்திட்டு  சாப்ட  போனேன் ..பரோடா சூடா போட்டு கிட்டு இருந்தான் .. அங்க  பரோட்டா  வாங்கி  சாப்டுகிட்டு  இருந்தேன் .. அங்க  இருந்த  பஸ்  ஸ்டாப்ல  கீழ  குடுச்சிடு  ஒருத்தன்  உட்காந்திருந்தான்  அவன  சுத்தி  கொஞ்ச  பேரு  நின்னுகிட்டு  அவன்கிட்ட  ஏதோ  பேசி  கிட்டு  இருந்தாங்க .. ஒரு  ஆட்டோ  காரர்  அவர  தூக்க  முயற்சி  பண்ணுனாரு  ஆனா  அவரால  தூக்க  முடியல .. ஏன்  பக்கத்துல  நின்னு  சாப்டு  கிட்டிருந்த  ஆட்டோ  காரன்  அந்த  ஆட்டோ  காரர  கூப்டு  ஏதோ  செய்க  செஞ்சாரு .. அந்த  ஆட்டோ  காரர்  அந்த  குடிகாரனோட  pantula இருந்த  pursa  எடுத்து  பாத்தான்  அந்த  குடிகாரன்  அவன்கிட்ட  இருந்து அவனோட  pursa புடுங்குனான் .. அந்த  ஆட்டோ  காரர்  சில  கேட்ட  வார்த்தைகளில்  அவனை  திட்டி  கொண்டே  எங்களை  நோக்கி  வந்தான் .. என்  பக்கத்திலிருந்த  ஆட்டோ  காரர்  என்னாசுயா  என்று  கேட்டார் , fulla  தண்ணி  மூணு  friendu கூட  வந்தான்  அவனுங்க  மூணு  பேறும் இவன இங்கயே  விட்டுட்டு  கிளம்பிடானுங்க , எங்க  வீடுன்னு  கேட்டேன்  வேலசெரின்னு  சொன்னான் .. Pursula பிச்சகாரபய  நூருபாதான்  வச்சிருக்கான்

அவ்ளோவ் போதைலையும் parsa மட்டும் உசாரா  புடுங்கி   கிட்டாம்பா .. 100 ரூபாய்க்கு  எங்க  கொண்டு  பொய்  வேளச்சேரில  விற்றது  அதான்  சனியன்  எப்டியோ  போய் சாகட்டும்னு  வந்துட்டேன்  என்றார் .. அந்த  குடி  காரனை  சுற்றி  மக்கள்  சினிமா  பார்பதுபோல்  நின்று  ரசித்து  கொண்டிருந்தனர் , கொஞ்ச  நேரத்தில்  அங்கு  நின்று  கொண்டிருந்தவர்களின்  பஸ்சுகள்  வர  கூட்டம் களைந்தது.. அந்த  குடிகாரன்  மட்டும்  தனியாக  அங்கு  படுத்து  கொண்டு  யாரையோ  கெட்ட வார்த்தைகளில்  திட்டி  கொண்டிருந்தான் .. அவருக்கு  help பண்ணலாம்னு  மனசுக்குள்ள  தோனுச்சு  காரணம்  எனக்கும்  குடி  பழக்கம் இருக்கு , ஒரு  முறை  நானும்  இந்த  மாதிரி  ரோட்ல  விழுந்து  அசிங்க  பட்டேன்  அப்ப இருந்து  குடிகாரத  fullaa நிருதலேனாலும்  அதிகமா  குடிகரதில்லன்னு  நானே  மனச  மாத்திகிட்டேன் , பாவம்  இவருக்கு  என்ன  பிரச்சனையோ , ஆனா  velacheryku 100 ருபாய்  எனக்கும்  கட்டு  படியாகாது .. சாப்டு  முடுச்சுட்டு  அந்த  குடிகாரன  ஒரு  வாட்டி  பாக்கலாம்னு  அவன்  கிட்ட  போனேன்  அப்ப  அவனோட  போன்  ringtone சத்தம்  கேட்டுச்சு  அவன்  அதை கஷ்டப்பட்டு  வெளிய  எடுக்கும்போது  கீழ  விழுந்திடுச்சு , அவனால  போன்  எடுக்க  முடியல  நா  அந்த  போன்  எடுத்து  பாத்தேன்  மணி  callingnu வந்துச்சு .. போன்  attend பண்ணி  அவரு  இங்க  குடிச்சு  கீழ  விழுந்து  கிடகாறு  சார்னு   சொன்னேன்  அவர்  நா அவனோட  அண்ணன்தான்  கரெக்டா  எங்க  இருக்கானு  கேட்டாரு .. நான்  இடத்த  சொன்னதும்  நீங்க  யாருன்னு  கேட்டாரு .. ஆட்டோ  drivernu சொன்னேன் , ripon buildingku அவன  கூட்டிட்டு  வரியாபானு  கேட்டாரு  நானும்  சரின்னு  சொல்லிடு  ஆட்டோவ  நகதிட்டு  வந்து  அந்த  குடிகாரன்  பக்கதுல  நிறுத்திட்டு  அவர  தூக்க  try பண்ணேன்  ஆனா  முடியல  பக்கதுல  இருந்த  ஒரு  வயசானவர்  வந்து  தூக்குனாறு , ரெண்டு  பேரும் சேந்து  அவன  ஆட்டோ  குள்ள  தூக்கி  போட்டோம் ..

அந்த  குடிகாரன்  என்னையும்  அந்த  தூக்க  help பண்ண  வயசானவரையும்  அசிங்க  அசிங்கமா  திட்டுனான் , அந்த  வயசானவர்  வீட்டுல  போய் குடுச்சிட்டு  எப்படி  வேணும்னா  வுளுந்து  கடக்க  வேண்டியதுதானடா , இப்டி  roadla குடுச்சுட்டு  ஏன்டா உங்க  குடும்பத்துல  இருக்கவங்க  மானதலாம்  வாங்குரிங்கனு  அவன  பாது   திட்டிட்டு  போனாரு .. ஆட்டோல  ripon buildingku போனேன் .. அங்க  ஒருத்தர்  வெள்ளை  சட்டில கண்ணாடி  போட்டுகிட்டு officer மாதிரி   இருந்தார் .. ஆட்டோவை  பார்த்ததும்  அருகில்  வந்து  தன்னுடைய  தம்பியை  பார்த்தார் .. அவருடைய  முகம்  கவலை  அடைந்தது , ரொம்ப  thanks பா  velachery போனும்  வரியாபானு  கேட்டாரு  நானும்  சரின்னு  சொன்னேன் .. ஆட்டோல  ஏறி  உட்காந்தாறு , ஆட்டோ  start பண்ணி  போனோம் .. அவர்  தன்னோட  தம்பிய  வெளியே  விழுந்து  விடாதபடி  பிடித்து  கொண்டபடி  அவனை  எழுப்பி  பார்த்தார் . அவன்  கண்ணை  திறந்து  பார்த்தான்  ஆனால்  அவனுக்கு  எந்த  நினைவும்  இல்லை  போதையில்  ஏதோ  உளறி  கொண்டே  இருந்தான் .. இவன்  மட்டும்  தனியா  இருந்தானா  இல்ல  இவனுங்க  friendungalum இருந்தானுன்களா ? என்றார் .. 3 பேரு  கூடதான்  வந்தாரு  அவங்க  3 பேரும்  பஸ்ல  ஏறி  போய்டாங்க  இவர்தான்  அதிகமா  குடிசிருபாறு  போல , நிக்க  mudiyaama  விழுந்துடாறு என்றேன் .. பொறம்போக்கு  நாய்ங்க  அவனுங்களா  friendunu அவன்ங்க  கூட  சுத்துறான் .. வீடு  சாவி  வச்சிருகியாடா என்று  அவருடைய  தம்பியை  கேட்டார் , ஆனால்  அவரது  தம்பியிடம்  இருந்து  எந்த  பதிலும்  வரவில்ல .. அவனுடைய  பாக்கெட்களில்  பார்த்தார்  pant பாக்கெட்டில்  சாவி  இருந்தது .. அவருடைய போன்  ஒலித்தது  எடுத்து  பேசியவர் , நா  இன்னிக்கு  ஆபீஸ்  half day லீவு  நீங்க  நாளைக்கு  வாங்க  சார்  என்று  அவர்  சொல்லிகொண்டிருகும்போதே ,

அவருடைய  தம்பி  போதையில்  கேட்ட  வார்த்தைகளில்  திட்ட  தொடங்கினான் .. நா  அபாரம்  பேசுறேன்  சார் என்று  சொல்லி  போனை  கட்  செய்தார் .. ஆட்டோ  trafficil நின்றபொழுது , அவன்  போதையில்  பேசும்  கேட்ட  வார்த்தைகளை  கேட்டு  பக்கத்தில்  வண்டியில்  இருந்தவர்கள்  அவனையே  பார்த்து  கொண்டிருந்தனர் .. Dai வாய  மூட்றா என்று  கோவமாக  அவருடைய  அண்ணன்  கத்தினார் , ஆனால்  அவன்  தொடர்ந்து  அசிங்கமாக  பேசியபடி  வந்தான் .. அவர்  கோவத்தில்  தலையில்  கை  வைத்தபடி  உட்காந்திருந்தார் .. மற்ற  வண்டியில்  போகுபவர்கள்  இவன i திரும்பி  திரும்பி  பார்த்தனர்  அவருக்கு  ரொம்ப  அவமானமாக இருந்தது  அவனுடைய  வாயை  கை  வைத்து  பொத்தினார் .. ஆனால்  அவன்  இன்னும்  அதிகமாக  காத்த  ஆரம்பிக்க  அவர்  கோவத்தில்  அவனை  கண்டபடி  அறைந்தார் , நான்  கண்ணாடியில்  அவரை  பார்த்தபோது  அவருடைய  கண்களில்  சிறியதாக  கண்ணீர்  துளி .. அவரை  பார்த்தபோது  எனக்கு பாவமாக  இருந்தது , அவரை  பார்க்கும்போது  ஏதோ  ஒரு  பெரிய  வேளையில்  இருபதுபோல்  தோன்றியது  ஆனால்  அவருடைய  தம்பி  ஏன்  இப்படி  என்று  கேட்க  வேண்டும்  என்று  தோன்றியது  ஆனால்  அவரிடம்  கேட்க  எனக்கு  தாயகமாக  இருந்தது .. பாதி தூரம்  கடந்த  நிலையில் , அவன்  போதையில்  வாந்தி  எடுக்க  தொடங்கினான் .. ஆட்டோவை  ஓரமாக  நிறுத்தினேன் .. அவர்  தன்னுடைய  தம்பியின்  தலையை  வெளியே  தள்ளி  பிடித்தார் , ரோட்டில்  வாந்தி  எடுத்தான் .. தண்ணி  இருகாபா  என்று  கேட்டாரு , ஆட்டோ  சீட்டின்  பின்னாடி  இருந்த  வாட்டர்  bottlelai எடுத்து  குடுத்தேன் .. ஆடோவிற்குள்  விழுந்த  சில  வாந்திகள  சுத்தம்  செய்தார் , பரவா  இல்ல  விடுங்க  நா  அப்றமா  சுத்தம்  பண்ணிக்கிறேன்  அவருக்கு  தண்ணி  குடுங்கநு  சொன்னேன் .. கொஞ்சம்  தண்ணியை  அவன்  முகத்தில்  தெளித்து  விட்டு  மீதியை  அவனுடைய  வாயில்  ஊற்றினார் ..

இப்பொழுது  அவன்  தூங்க  தொடங்கினான்  அவனுடைய  அண்ணன்  அமைதியாக  வெளியே  பார்த்தபடி  வந்தார் .. அவனுடைய  கை ஆட்டோகு  வெளியே  சென்றது , சார்  அவரோட  கைய  உள்ள  தள்ளுங்க  சார்  என்றேன் .. அவரும்  உள்ளே  தள்ளினார் .. Cha இப்டிலாம்  ஆவானு  நா  நெனச்சே  பாகலபா  , இவனோட  சனியம்  புடிச்ச  friendungalaala இப்ப  இந்த  நெலமைக்கு  வந்துடாம்பா .. ரோட்ல  பல  பேரு  இப்டி  படுத்துகடபவங்கள  ஏதோ  tv பாக்குற  மாதிரி  பாத்திருக்கேன்  ஆனா  இன்னிக்கு  என் தம்பிக்கு  நடக்கும்போதுதான்  வலிக்குது .. I.t. கம்பெனில  மாசம்  40000 ருபாய்  சம்பளத்துல  வேல  பாத்துகிட்டு  இருந்தான் .. அங்கயே  ஒருத்திய  லவ்  பண்ணி  கல்யாணமும்  பண்ணி  கிட்டான் .. 3 வருஷத்துக்கு  முன்னாடி  i.t. டோவ்ன்  ஆனப்ப  இவனுக்கும்  வேலை  போய்டுச்சு .. வேலை  போன  6 மாசத்துல  இவன்  பொண்டாட்டி  diverse பண்ணிட்டு  போய்டா .. எனக்கு  தெருஞ்ச  companyla வேலை  வாங்கி  தரேன்னு  சொன்னேன்  ஆனா  அவன்  இப்ப  ஒரு  3 friendungaloda பாத்தியே அவனுங்களோட  சேந்து  business பண்ண  போறதா  சொன்னான் .. அவன்  வாழ்க்கை  அவனுக்கு  பிடிச்ச  மாதிரி  வாழடும்னு நானும்  எதுவும்  சொல்லாம  அவனுக்கு  சொத்த  பிருச்சு  குடுத்தேன் .. ஆனா  buscinessla ஒன்னும்  இவனுங்களால  பெருசா  நிக்க  முடியல  ஒரு  வருஷத்துல  buscinessa நிறுத்திட்டு .. சும்மா  சுதிகிடிருகான் .. நா  அவன  அவன்  வழில  விற்று  இருந்திருக்க  கூடாது  அவன  என்கூடவே  கூட்டிட்டு  போய் வேற  வேலை  வாங்கி  குடுதிருகனும்  தப்பு  பண்ணிட்டேன் .. இப்ப  எந்த  நெலமைக்கு  வந்துடாம்பாறு . இனியும்  அவன  இப்டி  விடமாட்டேன் .. தினமும்  officela பல  பேருக்கு  நல்ல  வாழ்க்கைய  வாழ  வழி  காட்றேன் . . ஆனா  ஏன் சொந்த  தம்பிய  இந்த  மாதிரி  ஒரு  வாழ்க்கைய  வாழ  விட்டுட்டேன் .. 
பரவாஇல்ல  நாளைக்கே  இவன  என்னோட வீட்டுக்கு  கூட்டிட்டு  போய்டுறேன்  என்று  தனக்கு  தானே சமாதானம்  சொல்லி  கொண்டார் .. அவரை  பார்க்கும்போது  எனக்கு  என்னோட  அண்ணன்தான்  ஞாபகம்  வந்துச்சு .. Velacheryla அவர்  வீட்டுகிட்ட  போய் வண்டிய  நிறுத்தினேன் .. இருவரும் சேர்ந்து  அவருடைய  தம்பியை  தூக்கி  சென்று  வீட்டில்  விட்டோம் .. அவர்  300 ருபாய்  தந்து  ரொம்ப  thankspaa நீ  இல்லாட்டி  ரொம்ப  கஷ்ட  பட்டிருப்போம் என்றார் .. நான்  பணத்தை  வாங்கிகொண்டு  ஆட்டோவில்  ambathurai நோக்கி  வந்தேன் .. அந்த  குடிகாரனோட  அண்ணன்  பாவம்  எவ்ளோவ்  கவலப்றாரு  என்னோட  அண்ணன்  பேட்ச  கேட்காம  வீட்ட  விட்டு  ஓடி  வந்து  கல்யாணம்  செஞ்சப  அவர்  இத  விட  எவ்ளோவ்  கஷ்ட  படிருபாறு  தோனுச்சு .. என்னோட  அண்ணன்  பத்தி  நினைக்கும்போதெல்லாம்  அவர்  என்ன  திட்டுனதையும்  அடிச்சதுலாம்  மட்டும்தான்  எப்பவும்  என்  மனசுக்கு  ஞாபகம்  வரும்  ஆனா  இன்னிக்கு  அவர்  எனக்காக  எவ்ளோவ்  கஷ்ட  பட்டிருகாருன்றது  மட்டும்தான்  ஞாபகம்  வருது .. எப்பவும்  என்னோட  அண்ணன்தான்  முதல்  வந்து  சமாதானம்  பேசணும்னு  நெனப்பேன்  அது  சின்ன  வயசுல  இருந்தே  எனக்கிருந்த ஒரு  திமுரு , ஆனா  இன்னிக்கு  என்னமோ  அவர்கிட்ட  நேரா  போய்  பேசிடனும்னு  தோணுது , மிஞ்சிபோனா நாலடி  செருப்பால  அடிப்பாரு  வேறென்ன  பண்ணுவாரு  அவ்ளோவ்தான  நா  செஞ்சதுக்கு  என்ன  அவரு  அன்னிக்கே  அடிசிருகனும்  வீட்டுக்குள்ள  வச்சு  நாலடி  வாங்கிகிட்டா  போச்சு , இன்னிக்கு  எப்டியும்  அவர்கிட்ட  பேசியே  ஆகணும்னு  முடிவு  பண்ணி  ஆட்டோவ  நேரா  என்னோட  அண்ணன்  வீடுகிட  போனேன் ..

 தெய்ரியமா  வந்துட்டேன்  ஆனா  மனசுக்குள்ள  ஏதோ  தயகதுல  ஆட்டோலையே  உட்காந்திருந்தேன் .. கொஞ்ச  நேரம்  கழிச்சு  ஆட்டோல  இருந்து  இறங்கி  வீட்டு  கிட்ட  போனேன் .. கதவு  வெளி  பக்கமா  பூட்டி  இருந்துச்சு .. மணி 8 ஆச்சு இந்நேரத்துக்கு வந்திருபாறேனு  வாச  படியிலேயே  உட்காந்திருந்தேன் .. கடைசியா  நானும்  அஞ்சலியும்  கல்யாணம்  பண்ணிட்டு  வந்துடு  இந்த  வாசப்படில  நின்னதும் , என்னோட  அண்ணன்  கோவமா  கதவ  சாத்திட்டு  உள்ள  போனதெல்லாம்  மனசுக்குள்ள  ஓடிக்கிட்டு  இருந்துச்சு .. என்னோட  அண்ணன்  கொஞ்ச  நேரத்துல  கைல  ஏதோ  coverla வாங்கிகிட்டு  வந்தாரு .. அவர்  என்னையே  பாத்தாரு  ஆனா  எதுவும்  பேசல , நா  அவர  நிமிர்ந்து  பாத்தேன் .. அவர்  எதுவும்  பேசாம  கதவ  திறந்தாறு .. உள்ள  வா  நு  சொல்லிடு  உள்ள  போனாரு .. நானும்  உள்ள  போனேன் , எனக்கு  என்ன  சொல்றதுனே  தெரியல , ரோட்ல  போற  யார்கிடலாமோ  easy ya sorrynu ஒரு  வார்த்தை  சொல்லிடுறோம்  ஆனா  என்னோட  அண்ணன்  கிட்ட  sorrynu சொல்றதுக்கு  ரொம்ப  தயக்கமா  இருந்துச்சு .. எங்க  வீடு  எந்த  மாற்றமும்  இல்லாம  அப்டியே  இருந்துச்சு , அவர்  வீட்டுக்குள்ள  இருந்து  ரெண்டு  தட்ட  எடுத்துட்டு  வந்தாரு .. Coverkulla இருந்து  பொட்டலத  பிரிசுகிட்டே , தப்பு  பண்ணிட்டு  உனக்கு  மன்னிப்பு  கேட்கறதுக்கு  இதனை  மாசம்  ஆகுதுலன்னு  கேட்டாரு ?, நா  எதுவும்  பேசாம  தலை  குனிஞ்சு  நின்னேன் , மன்னிப்பு  கேட்கதான்  வந்தியா  இல்ல  சொத்த  பிரிச்சு  கேட்க  வந்தியா நா தான் தப்பா நெனசுடனோனு   கேட்டாரு .. நான்   சிரிச்சிட்டேன் .. அவரும் சிரிச்சிடாறு  சரி  உட்காரு  சாப்டுவோம்னு  சொல்லிடு  ஒரு  தட்ட  எடுத்து  என்கிட்டே  நீடுனாறு , நானும்  வாங்கிகிட்டு  கீழ  உட்காந்தேன் .. பரோட்டா  எடுத்து  சாப்ட  ஆரம்பிச்சேன் .. ஒரு  10 வயசுல  இருந்து  இந்த  கடைல  பரோட்டா  வாங்கி  சாப்டுட்டு  இருக்கோம்ல ? ஆனா  அந்த  குருமா  வாசன  இன்னும்  அப்டியே  இருகுலன்னு  சொன்னாரு .. நானும்  சிரித்தபடி  சாப்பிட  ஆரம்பிச்சேன் ., ஒவ்வொரு  மாசமும்  சம்பளம்  வாங்குரன்னிக்கு  என்னோட  அம்மா  இந்த  பரோட்டா   வாங்கிட்டு  வந்து  தருவாங்க , அதா சாபுட்ரதுக்கு  நானும்  என்கன்னனும்  அன்னிக்கு  fullaa ரொம்ப  ஆவலா  wait பண்ணிக்கிட்டு  இருப்போம் .. அதுகபுரம்  என்னோட  அண்ணன்  அப்ப அப்ப  வாங்கிட்டு  வந்து  தருவாரு .. இப்ப  ரொம்ப  நாள்  கழுச்சு சின்ன  வயசுல  உக்காந்து  சாப்ட  மாதிரியே  சாப்டு  கிட்டு  இருந்தோம் ..

எல்லா  வாட்டியும்  மதவன்களே  எறங்கி  வருவாங்கன்னு  நினைக்காத , தப்பு  உன்  மேல  இருந்தா  நீதான்  எறங்கி  வரணும்  இல்லாட்டி  வாழ்க்கைல  அபாரம்  உனக்காக  யாரும்  இருக்க  மாட்டாங்கநு சொன்னாரு .. சத்தியமா  அன்னிக்கு  உன்  மேல  கொலவெறில  இருந்தேன் , அன்னிக்கு  இன்னு  கொஞ்ச  நேரம்  நின்னுட்டு  இருந்திருந்தனா  ஒன்ன  கொன்றுபேன்.....  ஆனா  அபாரம்  நாள்  போக  போக  கொவம்லாம்  கோரஞ்சுருச்சு , நீயா  வந்து  என்னிக்கு  பேசுவனுதான் நானும்  பேசாமையே  இருந்தேன் .. நா  எதுவும்  பேசாம  சாப்டு  கிட்டே  இருந்தேன் .. வாடகை  எவ்ளோவ்னு  கேட்டாரு .. 2000 ரூபாய்னு  சொன்னேன் .. வீடு  காலி  பண்ணிட்டு  இங்கயே  வந்துரு  எனக்கும்  தனியா  இருகருதுகு  ரொம்ப  bore அடிக்குதுன்னு  சொன்னாரு .. ஒன்னும்  பிரச்சனை  இல்லலன்னு  கேட்டாரு .. நா  சரின்னு  தலை  ஆடுனேன் .. எங்க  அஞ்சலி  அவல  ஏன்  கூட்டிட்டு  வரலன்னு  கேட்டாரு .. அவளுக்கு  நா  இங்க  வந்தது  தெரியாதுன்னு  சொன்னேன் .. ஏன்  உன்ன  எப்டியும்  செருப்பால  அடுச்சு  தொரதிருவேணு  நெனசியானு  சொல்லி  சிரிச்சாரு .. நானும்  ஆமான்னு  தலை  ஆடியபடி  சிரித்தேன் .. இருவரும்  சில  நொடிகள்  சிரித்து கொண்டே  இருந்தோம் .. சாப்டு  முடித்தோம் .. நா  கெளம்புறேன்  நாளைக்கு  பொருள்லாம்  இங்க  எடுத்துட்டு  வந்துடறேன்னு  சொன்னேன் .. சரி  இந்த  சாவிய  நீ வச்சுக்க  நா  நாளைக்கு  officela இருந்து  லேட்டாதான்  வருவேன்னு  சொல்லிடு  சாவிய  குடுத்தாரு .. நானும்  வாங்கிகிட்டு  கெளம்புனேன் .. மணி  9.30 இருக்கும்  ஆட்டோவ  start பண்ணேன் , ஜில்லுனு  எதிர்  காத்து  வீசுச்சு , மனசுல  இருந்த  ஏதோ  பாரம்  போய் அப்டியே  லேசாகிடுச்சு .. நா  என்னலாமோ  நடக்கும்னு  யோசிச்சிட்டு   வந்தேன்  ஆனா  நா  நெனச்சு  கூட  பாக்காத  அளவுக்கு  சந்தோஷமா  கெளம்புறேன் , யோசிச்சு  பாதா  நா  கடைசி  வரைக்கும்  என்னோட  அண்ணன்கிட்ட மன்னிப்பு  கேட்கவே  இல்ல  அவரும்  என்ன  கேட்கவே  விடல .........................
இன்னிக்கு நா காலைல இருந்து பார்த்த எல்லாரையும் நெனச்சு பாத்தேன் வாழ்க்கைல எல்லாமே ஒரு  காரணத்தோடதான் நடக்குதோன்னு கூட தோணுது....
 இன்னிக்கு எவ்ளோ பெருசா தெரியிற பிரச்சனையும் நாலு நாள் கலுச்சு பாக்கும்போது வேற மாதிரி இருக்கும்...... காலம் எல்லாத்தையும் பாத்துக்கும் ................
                                                                   -கிஷோர் குமார் .