Monday 11 June 2012

பூக்கள் பூக்கும் தருணம்


"பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே........." ரிங் டோன் சத்தம் கேட்டதும் ஒரு வித சந்தோஷத்துடன் அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் மறுமுணயில் ஹலோ நா இன்னிக்கு office வரமாட்டேன், ஆபிஸ் பாய் கிட்ட என்னோட டேபிள்ல ஒரு புளு கலர் ஃபைல் இருக்கும் அத குடுதுட்றீங்களானு கேட்டா.. நா சரினு சொன்னேன்.. ஏன் வரலனு கேக்களானு மனசுக்குள்ள தோணுச்சு ஆனா கேட்க தெய்ரியம் இல்ல.. OK thanksnu சொல்லிட்டு அவ ஃபோன் கட் பண்ணிட்டா..

அவ office இன்னிக்கு வரமாட்டானு தெருஞ்சபுறம் எனக்கு ஆபீஸ் போறதுக்கான இண்டரெஸ்ட்டே போயிடுச்சு. இன்னிக்கு நாள் எனக்கு வாழ்க்கைல எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்ல.. ஒவ்வொரு முறை அவ ஃபோன் பண்ணும்போதும் அவ என்ன love பன்றேனு சொல்லுவானு நினைப்பேன் ஆனா அவ ஒரு நாலு வார்த்தை office பத்தி பேசிட்டு கட் பண்ணிடுவா..

officela அவ எனக்கு பக்கத்து சீட்தான், தினமும் காலைல பார்த்த உடனே சிரித்தபடி good morningnu சொல்லுவா நானும் பதிளுக்கு சிரித்தபடி good morningnu சொல்லுவேன் அந்த சில நொடிகள் எனக்குள்ள வர சந்தோஷத வார்தைல சொல்ல முடியாது.

officela சேர்ந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் பண்ணா அவளத்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன் .. நா அவள love பன்றேனு அவல தவிர officela இருக்க முக்கால்வாசி பேருக்கு தெரியும்.. எப்பாதான்டா அவ கிட்ட சொல்ல போரணு தினமும் என்னோட நண்பர்கள் கேட்டுகிட்டே இருப்பாங்க.. ஆனா அவ என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் கிட்ட பேசுற அளவுக்கு கூட பேச மாட்டிக்கிறா , இதுல நா எங்க லவ் பன்றேனு சொல்றது.. நா லவ் பன்றேன் சொல்லி அவ கோவம் வந்து மேனேஜர் கிட்ட சொல்லி என்ன வேலைய விட்டு தூக்கிட்டானா அதுக்கப்புறம் நா பிச்சதான் எடுக்கணும் இந்த வேலை எப்படியோ லக்குல கிடசிருச்சு, நா படிச்ச படிப்புக்கு வேற வேலைலாம் கிடைக்கும்னு எனக்கு துளி கூட நம்பிக்கை இல்ல..

officeku போகி வழக்கம்போல வேலைய பாத்துட்டு இருந்தேன்.. அன்னக்கி office boya மேனேஜர் வேற வேலைக்காக வெளிய அனுப்பி இருந்தனால அந்த file அவன்கிட்ட குடுக்க முடியல .. மதியம் ஒரு ரெண்டு மணிக்கு அவ கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு.. இந்த வாடியாசு அவ போன்ல லவ் பண்றேன்னு சொல்ல மாட்டாளான்னு எதிர்பார்புல அட்டென்ட் பண்ணேன் , எடுத்தவுடன் ஆபீஸ் பாய் இல்லாத விஷயத்த அவ கிட்ட சொன்னேன்.. அவ கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு OK byeநு சொல்லிட்டு கட் பண்ணிட்டா..

நா ஏமாற்றத்தோட மறுபடியும் என்னோட வேலைய பாத்துகிட்டு இருந்தேன்.. ஒரு மணி நேரம் கழித்து அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது.. அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் ,அவ உங்களுக்கு பிரச்சனை இல்லேனா கொஞ்சம் அம்பத்தூர் வரைக்கும் வந்து அந்த file குடுக்க முடியுமான்னு கேட்டா அடுத்த நொடியே நோ ப்ரோப்லேம் நிச்சயமா வரேன் எங்க வரணும்னு கேட்டேன்.. அம்பத்தூர் பஸ் ஸ்டோப்கு வந்துடுங்க நானும் வந்துடுறேன் என்றால்.. ஆபீஸ் முடிந்ததும் சந்தோஷமாக அந்த file எடுத்துகொண்டு கிளம்பினேன்..

ஆபீஸ் அருகில் இருந்த பஸ் ஸ்டோபிற்கு சென்ற உடன் அவளுக்கு போன் செய்து எந்த பஸ்ஸில் ஏறனும்னு கேட்டேன் அவ 47D நு சொன்னா , ஏற்கனவே அது எனக்கு தெரிந்த பதில்தான் இருந்தாலும் அவகிட்ட பேசுரத்துகாகவே போன் செய்து கேட்டேன். சரின்னு சொல்லிட்டு பஸ்ல ஏறி உட்காந்தேன்.. பஸ் புறப்பட்டது அவளை பார்க்க போகின்ற சந்தோஷத்தில் பல கனவுகள கண்டு கொண்டிருந்தேன்.

அவளை பார்த்தும் என்ன சொல்ல வேண்டும் என்றும் அவள் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தேன். அவளிடம் காதலை சொல்ல இதை விட நல்ல சந்தர்பம் கிடைக்காது எப்படியாச்சு சொல்லிடுடா என்று மன சாட்சி உள்ளே இருந்து சொல்லி கொண்டே இருந்தது.. அவளுக்கு போன் செய்து பஸ் ஏறிவிட்டேன் என்று சொன்னேன் , அவள் அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் போன் பண்ண சொன்னால் நானும் சரி என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.. மாலை நேரம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது..

அடுத்து வந்த ஸ்டாப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒரு கூடையை தூக்கி கொண்டு ஏறினாள்.. என் சீட்டில் அருகில் நின்றபடி அந்த கூடையில் இருந்த பூக்களை எடுத்து நூலில் கட்டி கொண்டே அவளுடன் ஏறிய இன்னொருவளுடன் பேசி கொண்டே இருந்தால்.. ரோட்டில் இருந்த மேடு பள்ளங்களை தாண்டி போகும்போதெல்லாம் அந்த கூடை என்னுடைய பந்தில் பட்டு கொண்டே இருந்தது, அந்த கூடையில் இருந்து என்னுடைய வெள்ளை நிற pantil கரை ஒட்டி கொண்டது.. அவர்கள் இருவரும் பேசி கண்டே பூ கட்டி கொண்டிருந்தனர்.

வண்டி ஆடி கொண்டே இருந்ததால் அந்த பெண்மணியால் பூ கட்ட முடியவில்லை , கூடையும் என் pantil பட்டு கொண்டே இருந்ததால் எழுந்துகொண்டே சீட்டில் அந்த பெண்மணியை உட்கார சொன்னேன்.. ரொம்ப நன்றி தம்பி என்று கூறிவிட்டு உட்காந்துகொண்டு கூடையை மடியில் எடுத்து வைத்து கொண்டு வேகமாக பூ கட்டினால்.. சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது .. எங்க வரிங்கன்னு கேட்டா ? நா வெளிய எதாச்சு கடைய பாத்து சொல்லலாம்னு பாத்தேன் ஆனா எந்த கடையும் இல்ல, நான் பார்பதை பார்த்து விட்டு அந்த பூ கட்டி கொண்டிருந்த பெண்மணி இது அண்ணா நகர் தம்பி என்றால்.. நானும் அண்ணா நகர்நு அவ கிட்ட சொன்னேன் . ok நு சொல்லிட்டு கட் பண்ணிட்டா .. நா அந்த பூ கட்டிகிட்டு இருந்தவங்கட thanksmaa என்றேன்.. அவங்க பதிலுக்கு சிரிச்சிட்டு என போகணும் தம்பின்னு கேட்டாங்க ,? அம்பதூர்னு சொன்னேன் .. இன்னும் அரை மணி நேராம் ஆகும்பா என்றார்.. கூட்டம் அதிகமாகி கொண்டே போனது .. அந்த பெண்மணி பேசிக்கொண்டே இரண்டு இரண்டு மல்லிகை பூவை எடுத்து நூலில் வைத்து கட்டிக்கொண்டு இருந்தார்..

நான் அவர்கள் கட்டுவதையே பார்த்து கொண்டு வந்தேன்.. அவர்கள் வேகமாக அத்தனை பூக்களை கட்டுவதை பார்க்கும்போது வியப்பாக இருந்தது , இன்னிக்கு கூட்டம் ஓவரா இருக்கு , நல்ல வேளைப்பா நீ மட்டும் இன்னிக்கு இடம் குடுகலேனா நா பூகட்டிருக்கவே முடியாது என்றால் , நான் எதுவும் சொல்லாமல் சிரித்தேன் .. அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது , எங்க இருகிங்கனு கேட்டா ? நா பூ கட்டிட்டு இருந்தவங்ககிட்ட எங்க இருக்கோம்னு கேட்டேன் , அம்பத்தூர் எஸ்டேட் வர போகுது தம்பி என்றார்.. நானும் அதையே அவளிடம் சொன்னேன். சரி நா அம்பத்தூர் O.T. பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன் வாங்கனு சொன்னா , ம்ம்ம் ok நு சொல்லிட்டு வச்சுட்டேன்..

அம்பத்தூர் O.T பஸ் ஸ்டாப் வந்தா சொல்லுங்கமா என்று பூ கட்டி கொண்டிருந்தவரிடம் சொன்னேன் .. சரி தம்பி.. கூடையில் இருந்த எல்லா பூக்களையும் கட்டி முடித்து விட்டார் .. பூவில் ஒரு முளத்தை கட் செய்து ஒரு பேப்பரில் சுற்றி என்னிடம் குடுத்தார்.. இல்ல வேணாம்மா என்றேன், பரவா இல்ல வாங்கிக்கப்பா நீ சீட்டு குடுகலேனா எனக்கு நஷ்டமாகி இருக்கும் வாங்கிக்கப்பா ஒரு முழம் freeyaa குடுத்தா எனக்கு பெருசா நஷ்டமாகிடாது என்றார்.. இல்லமா எனக்கு இன்னும் கல்யாணமாகல , இங்க தனியா ரூம்ல இருக்கேன் அதனால தேவை படாதுமா என்றேன்.. பரவா இல்ல பைக்குகாவது போடுப்பா என்கிட்டே பூ வாங்குனா சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகிடும் பாரு என்றால்..

நான் சிரித்து கொண்டே வாங்கி கொண்டேன்.. அடுத்த ஸ்டாப் அம்பத்தூர் O .T என்றார்.. நான் இறங்குவதற்கு வசதியாக கதவினருகில் சென்று நின்றேன்.. பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவளுக்கு போன் செய்தேன் .. அவள் போனை எடுத்த உடன் வந்துட்டேன் leftla திரும்பி பாருங்க நா உங்கள பாத்துட்டேன்னு சொன்னா.

அவ தூரத்துல மஞ்ச கலர் சுடிதார்ல என்ன பாத்து சிருச்சுகிட்டே ஸ்கூட்டர்ல வந்தா , நானும் அவள பாத்து சிருச்சேன் எப்பவும் பாக்குறத விட இன்னிக்கு அவ ரொம்ப அழகா இருந்தா.. திடீர்னு என் மனசுக்குள்ள ஒரு தெய்ரியம் இவள வாழ்க்கைல எதுக்காகவும் மிஸ் பண்ண கூடாதுன்னு மனசுக்குள்ள தோனுச்சு.. இன்னிக்கு நிச்சயம் அவ கிட்ட லவ் சொல்லிடணும்னு தோனுச்சு ..அவ கிட்ட வந்தா.. சிரித்தபடி ரொம்ப thanks , இந்த file ல சில modifications பண்ணி நாளைக்கு மேனேஜர் கிட்ட குடுக்கணும் அதனாலதான் உங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டேன் என்றால்..

அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்றேன்.. ஏன் officeku வரலேன்னு கேட்கலாம்னு தோனுச்சு ஆனா இருந்தாலும் மனசுல ஏதோ தயகத்துல கேட்கல , வாங்க கூல் ட்ரிங்க்ஸ் குடுச்சிட்டு போலாம்னு சொல்லிவிட்டு முன்னே நடந்து சென்றால் .. நானும் அவள் பின்னாலே சென்றேன்,, ஒரு கடைக்குள் சென்று உட்கார்ந்தோம்.. அவளோட இந்த மாதிரி தனியா ஹோடேல்கு போனும்னு எவ்ளோவோ நாட்கள் கனவு கண்டிருக்கேன் , எல்லாமே இன்னிக்குதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போல, உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்னு கேட்டா , ஆரஞ்சு ஜூஸ்நு சொன்னேன் , அவ ரெண்டு ஆரஞ்சு ஜூஸ் நு ஆர்டர் பண்ணா , எனக்கும் ஆரஞ்சு தான் பிடிக்கும்னு சொன்னா , அவளுக்கும் ஆரஞ்சு ஜூஸ்தான் பிடிக்கும்னு தெரிஞ்சதும் எனக்கு இன்னும் சந்தோஷாகிடுச்சு ..

இப்ப கொஞ்சம் தெய்ரியம் வந்து ஏன் officeku வரலேன்னு கேட்டேன் .. வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருந்தாங்க அதான் வர முடியலன்னு சொன்னா சிறிய வெட்கத்துடன் சொன்னா .. இது வரைக்கும் என்னோட மனசுக்குள்ளா இருந்த சந்தோஷம் எல்லாம் ஒரு செகண்ட்ல காணாபோகிடுச்சு.. நா அதுக்கப்புறம் அவக்கிட்ட எதுவும் பேசாம ஆரஞ்சு ஜூஸ் குடுச்சிட்டு கிளம்புறேன்னு சொன்னேன்.. அவ எதிர்பக்கம் இருக்க பஸ் ஸ்டாப்ல 47D போகணும்னு சொன்னா, ம்ம் சரின்னு சொல்லிட்டு கிளம்புனேன் .. file குடுக்கவே இல்லையேன்னு கேட்டா, சாரி மறந்துட்டேனு சொல்லிட்டு bagla இருந்து file எடுத்து குடுத்தேன் .

அவ ஸ்கூட்டில அந்த file எங்க வைக்கிறதுனு பாத்தா , கவர் எடுத்துட்டு வர மறந்துட்டேனு சொன்னா , உங்ககிட்ட எதாச்சு கவர் இருக்கானு கேட்டா , எனக்கு எப்ப இந்த இடத்தைவிட்டு போவோம்னு இருந்துச்சு , இவ்ளோவ்னால் பைதியகாரதனமா அவளும் என்ன லவ் பண்ணுவான்னு நெனச்சிட்டு இருந்தோமேன்னு வெறுப்பா இருந்துச்சு, என்னோட bagல இருந்த கவரை எடுத்து குடுத்தேன்.. வாங்கி கொண்டு OK bye and thank you nu சிருச்சுகிடே சொன்னா எப்பவும் அவ அப்படி சிரிக்கும்போது எனக்கு வாழ்க்கை முழுசா இப்படியே இருந்தடலாம்னு இருக்கும் ஆனா இன்னிக்கு அந்த ஒவ்வொரு நொடியும் நரகமாதிரி இருக்கு, ஸ்கூட்டர்லே ஏறி போய்ட்டா.....

நா பஸ் ஏறி என்னோட ரூம்க்கு வந்தேன் , மனசு வலிகிறத அன்னிக்குதான் உணர்ந்தேன் .. படத்துல இந்த மாதிரி சீன் வந்த இவ இல்லனா இன்னொருதினு தோணும் ஆனா உண்மையா ஒருத்திய நமக்கு நெனச்சது இப்ப வேற ஒருதனுகுனு நினைக்கும்போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்துச்சு , இவ்ளோவ் நாள் லூசு மாதிரி இருந்திருகொமேனு நெனச்சேன்.. நா அவல லவ் பண்றேன்னு office
முக்கால்வாசி பேருக்கு புருஞ்சிரிச்சு ஆனா இவளுக்கு மட்டும் எப்படி புரியாம போச்சு.. என்ன செய்வது என்று புரியாமல் ரூமில் உட்காந்திருந்தேன்.. பூக்கள் பூக்கும் தருணம் என்று ring tone கேட்டது , அவ தான் போன் செய்திருந்தா .. எப்பவும் அவ போன் பண்ணா சந்தோஷமா இருக்கும் ஆனா இன்னிக்கு அவ எதுக்கு போன் பண்ணான்னு தோனுச்சு.. எடுத்த உடன் ஹலோ என்றேன்..

உங்களுக்கு இத சொல்றதுக்கு இவ்ளோவ் நாள் ஆச்சா , ஆனா பரவா இல்லை நீங்க கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டிங்கனு நெனச்சேன் என்றால்.. எனக்கு எதுவும் புரியவில்லை ,புரியலங்க என்னதுநு கேட்டேன்.. நீங்க என்ன நிஜமாவே லவ் பன்றின்களா இல்லையான்னு கேட்டா , எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு ஆமான்னு மெல்லமா சொன்னேன் .. நானும் உங்கள லவ் பண்றேன்னு சொன்னா.. என்னால கொஞ்சம்கூட நம்ப முடியல.. வேற யாராச்சு கலைகராங்கலோனு கூட தோனுச்சு ஆனா அது அவ குரல்தான்நு என்னோட உள் மனசு சொல்லுச்சு.. உனக்கு எப்படி தெருஞ்சுச்சுனு கேட்டேன்.. அதான் தெளிவா எழுதி இருந்துச்சே.. இருந்தாலும் பூ சுத்தி இருந்த கவர்ல i love u நு எழுதி இருக்கறத நா பாக்காம விட்டிருந்தா என்ன பன்னிருப்பனு கேட்டா .. எனக்கு அப்பதான் அந்த பெண்மணி பேப்பரில் சுற்றி குடுத்த பூ ஞாபகத்துக்கு வந்தது அதை அந்த கவர்ல இருந்து எடுக்காம file நா அதுல வச்சு குடுத்ததும் அப்பதான் புரிந்தது .. என்னதான் பூ குடுத்து லவ் சொல்றது பழைய காலத்து ஸ்டைலாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சுன்னு சொன்னா.. நானும் நான் வேணுமென்று செய்ததுபோல் உனக்கு பிடிக்கும்னு தெரியும் அதான் அப்படி குடுத்தேன் என்று சொல்லி சமாளித்தேன்..

உன்ன இன்னிக்கு பொண்ணு பாக்க வந்தாங்கனு சொன்னயேநு கேட்டேன் .. அப்படி சொன்னாவாச்சு நீ லவ் பண்றேன்னு சொல்லுவியானுதான் அப்படி சொன்னேன் என்றால், ஆனா நீ அப்பவும் எதுவும் சொல்லல, லவ் பண்றத சொல்றதுக்கே தெய்ரியம் இல்லாதவனா போய் எப்படி கல்யாணம் பண்ணிகிறது பேசாம வேற யாராச்சையும் கல்யாணம் பண்ணிகலாம்னுதான் இருந்தேன் வீட்டுக்கு வந்தப்புறம்தான் அந்த பூவ பாத்தேன்னு சொன்னா, நீ என்ன லவ் பண்றேன்னு நீ வேலைக்கு சேர்ந்த முதல் மாசமே எனக்கு தெரியும் நீ எப்ப சொல்லுவேனுதான் வெயிட் பண்ணேன் என்றால் . எனக்கு சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தோணவில்லை.. சரி என்னோட அப்பா வந்துட்டாரு நாளைக்கு officeல பாக்கலாம்னு சொல்லிட்டு போன் வச்சுட்டா........

அவள் போனை வைத்த பிறகுதான் அவளிடம் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது .. ஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டமேனு தோனுச்சு .. மறுபடியும் அவளுக்கு போன் செய்தேன் , ஆனால் அவள் எடுக்கவில்லை .. இத்தன மாசம் காத்துகிட்டு இருந்த நாளைக்கு காலைல வரைக்கும் வெயிட் பண்ண முடியாதான்னு மெசேஜ் அமுட்சா , நான் பதிலுக்கு ஏற்கனவே பல மாசம் வேஸ்ட் பண்ணிட்டேன் இனிமே ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேனு மெசேஜ் செய்தேன் . அப்படியே நைட் முழுவதும் மெசேஜ் அமுச்சிகிட்டே இருந்தோம் ....

வாழ்கை எவ்ளோவ் சுவாரசியமா இருக்குனு தோனுச்சு .. அன்னிக்கு அந்த பூ விற்கும் பெண்மணி மட்டும் எனக்கு அந்த ஒரு முழம் மல்லிகை பூவை குடுக்காமல் இருந்திருந்தால் , அவள் சுற்றி குடுத்த அந்த பேப்பரில் ஏதோ ஒரு காதலன் யாருக்கோ எழுதிய அந்த i love u என்று எழுதி இருந்த பேப்பரை எனக்கு சுற்றி குடுக்காமல் இருந்திருந்தால், அந்த பூவை நா மறக்காமல் என்னுடனே எடுத்து வந்திருந்தால் என்னோட வாழ்க்கை இவ்ளோவ் சந்தோஷமா மாறி இருக்குமான்னு எனக்கு தெரியல ... என்னோட வாழ்க்கைல அந்த ஒரு முழம் மல்லிக பூவ மட்டும் என்னால மறக்கவே முடியாது ...

-கிஷோர் குமார்.