Monday 15 October 2012

“வாழ்க்கை – ஒரு முறைதான் ”



  
                               அன்று  சனி  கிழமை  சாயந்திரம்  6 மணி  இருக்கும் , marina  beachla எங்க  பாத்தாலும்  மக்கள்  கூட்டம். வயசு  வித்யாசம்  இல்லாமல்  அங்க  இருந்த  மக்கள்  அனைவரின்  முகத்திலும்  உண்மையான  சந்தோஷம் .சனி  கிழமை  சாயந்திரம்  எப்பவுமே  எல்லார்  மனசுக்குள்ளயும்  ஒரு  சின்ன  சந்தோஷத  வரவைக்கும் . அந்த  குடும்பம்  ஒவ்வொரு  வாரமும்  அந்த  பீச்சுக்கு வருவாங்க .சென்னைல  வாழ்ற  ஒரு  மிடில்  கிளாஸ்  குடும்பம் .. அந்த  குடும்ப  தலைவர்  மெட்ராஸ்  universityla தமிழ்  lectureraa இருகாரு .. அவருக்கு  ஒரு  மகன்  ஒரு  மகள் .. அவரோட  பைய்யன்  வினோத்  10th படிக்கிறான்  அந்த  வயதுக்கு  உண்டான  அணைத்து  விதமான  கனவுகளையும்  மனதிற்குள்  கொண்டவன் .. ஒவ்வொரு  வாரமும்  அங்க  வரனால  இந்த  பீச்  அவனுக்கு  ரொம்பவும்  போர்  அடிக்க  ஆரம்பிச்சிருச்சு  அதுக்கு  காரணம்  அவனோட  அப்பாதான்  அவர்  கொஞ்சம்  இல்ல  ரொம்பவே  ஸ்ட்ரிக்ட் .. அவனோட  அம்மா  அவனோட  அப்பா  அளவுக்கு  ஸ்ட்ரிக்ட்  இல்ல , ஆனா  அவர  எதிர்த்து  பேச  அவங்களுக்கும்  தெய்ரியம்  இல்ல .. அவனோட  தங்கச்சி  ரொம்பவே  சந்தோஷமா  அங்க  இருந்த  பலூன்  ஷூடிங்க  பாத்துகிட்டு  இருந்தா .அப்பா  பல்லூன்  ஷூடிங்க்னு  கேட்டா  சரின்னு  சொல்லி  அவரும்  permission குடுத்தாரு ,5 புல்லேட்ல  ரெண்டு  தரவ  மட்டும்தான்  பல்லூன  சுட்டா .வினோத்  நீயும்  சுட்ரியானு  கேட்டார் .அவன்  எதுவும்  பேசாமல்  கோவத்துடன்  அமைதியாக  வேறு  பக்கம்  நடந்து  சென்றான் .இப்ப  எதுக்கு  அவன்  அப்படி  போறான்  என்று  தன்னுடைய  மனைவிய  எரிச்சலுடன்  கேட்டார் .அவன்  10th படிக்கிறாங்க  அவன  போய்  பல்லூன்  சுட்ரியானு  கேட்டா  அவனுக்கு  கோவம்  வராதா . அதற்குள்  அப்பா  ஐஸ்  கிரீம்  என்று  அவருடைய  மகள்  கேட்க , சரி  அங்க  போய்  உட்காருங்க  நா  வந்தப்புறம்தான்  தண்ணி  கிட்ட  போகணும்  நா  போய்  ஐஸ்  கிரீம்  வாங்கிட்டு  வரேன்  என்று  சொல்லிவிட்டு  நகர்ந்தார் ..
                           இரண்டு  ஐஸ்  கிரீம்  வாங்கி  கொண்டு  ஒன்றை  வினோத்திடம்  நீட்டினார்  அவனும்  வாங்கிகொண்டு  அமைதியாக  சாப்பிட  தொடங்கினான் . இன்னொன்றை  அவருடைய  மகள்  பாய்ந்து  பிடுங்கி  சாப்பிட  தொடங்கினால் .. சாபிட்டு  முடித்த  உடன்  நான்கு  பெரும்  எழுந்து  கடலை  நோக்கி  நடந்தனர் .. ஒரு  கையில்  மகனையும்  இன்னொரு  கையில்  மகளையும்  பிடித்துகொண்டு  அலை  வருவதற்காக  நின்று  காத்து  கொண்டிருந்தனர் .. கைய  விடுப்பா  அலைதான்  வரலையே , நாம  நிக்கிற  இடத்துக்கு  தண்ணி  முட்டி  அளவுக்கு  கூட  வராது  அங்க  பாருங்க  சின்ன  பசங்கலாம்  எவ்ளோவ்  தூரம்  போறாங்கப்பா , எல்லாரும்  என்ன  பாது  சிரிகிராங்கபா  என்று  வினோத்  அவனுடைய  அப்பாவிடம்  கூறி  கையை  அவர்  பிடியில்  இருந்து  விடுவிதுகொண்டான் .. டை  அவங்களுக்கு  நீச்சல்  தெரியும்    உனக்கு  தெரியுமா ?. கடல்  எவ்ளோவ்  ஆபத்துன்னு  உனக்கு  புரியல  என்று  அவர்  தினமும்  கல்லூரியில்  நடத்துவது  போல்  இங்கும்  பாடம்  நடத்த  ஆரம்பித்தார் .அலை  கிட்ட  வந்ததும்  மறுபடியும்  தன்னுடைய மகனின்  கையை  பிடித்து  கொண்டார் .சிறிது  நேரம்  கழித்து போதும்  கெளம்பலாம்னு  சொன்னதும்  அவருடைய  மகள்  இன்னும்  கொஞ்ச  நேரம்  இருக்கலாம்னு  அடம்  பிடித்தால் .சிறிது  நேரம்  இருந்துவிட்டு  பீச்சில்  இருந்து  கிளம்பினர் .அங்கு  நாலாபக்கமும்  ஓடி  கொண்டிருந்த  குதிரைகளை  பார்த்து  விட்டு  அதில்  போக  வேண்டும்  என்று  கேட்டால் .வினோத்  சிரிப்புடன்  அவளிடம்  அதுகெல்லாம்  வாய்ப்பே  இல்ல  இதனை  வருஷமா  எத்தன  வாட்டி நா  கேட்டிருப்பேன்  அப்பாக்கு  குதிரைனா  பயம் , ஒழுங்கா  வாயமூடிகிட்டு  வா  என்று  சொல்லிவிட்டு  சிரித்தான்  அதை  கேட்ட  அவனுடைய அம்மாவும்  சிரித்துவிட்டார் . இதை  கேட்ட  அவனுடைய  அப்பா  சீக்கிரம்  நடங்க  லடே  ஆக ஆக பஸ்  கூடமைடும்  பேசாம  நடங்க  என்று  அவர்களை  பார்த்து  கூறிவிட்டு  தன்னுடைய  மகளை  தூக்கி  கொண்டு  வேகமாக   நடக்க  தொடங்கினார் .
                          பிறகு  ஒரு  நாள்  ரோட்டில்  வினோத்தும்  செல்வாவும்  ஷட்டல்  கார்க்  விளையாடி  கொண்டிருந்தனர் .. செல்வா  வினோத்தின்  நெருங்கிய  நண்பன்  வினோத் வீட்டிற்கு  பக்கத்துக்கு  வீடுதான்  செல்வாவின்  வீடு .. சிறு  வயதில்  இருந்து  ஒன்றாகவே  வளந்தார்கள் .. அப்ப அப்ப சண்ட  போட்டுக்குவாங்க  அப்றம் கொஞ்ச  நாள்ல  மறுபடியும்  அவங்களே  ஒன்னு  செந்துகுவாங்க .. டே 10thla 80% மேல  வாங்குனா  எங்க  அப்பா  பைக்  வாங்கி  தரேன்னு  சொல்லி  இருக்காருடா  நீ  உங்க  வீட்ல  கேட்டியா  என்று  ஷட்டல்  விளையாடி  கொண்டே  செல்வா  வினோத்திடம்  கேட்டான் .. இல்ல  டா  இனிமேல்தான்  கேட்கணும்  ஆனா  அவரு  எப்டியும்  வாங்கி  தர  மாட்டாரு  என்றான்  வினோத்  .. ம்ம்ம் டேய்  ப்ரியா  வாராடா டக்குனு  திரும்பி  பாக்காத  என்றான்  செல்வா .. சரி  சரி  நீ  கார்க எனக்கு  பின்னாடி  தூரமா  அடிடா என்றான்  வினோத் .. செல்வாவும்  அதே  போல்  வினோத்திற்கு  பின்னால்  தூரமாக  அடிதான்  கார்கை எடுப்பது  போல்  திரும்பி  வினோத்தும்  அவளை  பார்த்தான் .. செல்வாவை  பார்த்து  சிறிது  விட்டு  கார்கை  செல்வா  விடம்  அடிதான்  வினோத் .. அவள்  கிட்ட  வந்தவுடன்  மச்சான்  நல்லா  இருக்கியா  என்று  சத்தமாக  வினோத்திடம்   கேட்பது  போல் சத்தமாக  கேட்டான்  செல்வா .. செமையா  இருக்கேன்  மச்சி  பாத்தா தெரியலையா  நீ  எப்டி  இருக்க  மச்சி  என்று  வினோத்தும்  சத்தமாக  செல்வாவிடம்  கேட்டான் .. ப்ரியா  இவர்குலடந்தான்  ஸ்கூலில்  படிக்கிறாள் , அவளை  பார்க்கும்  போதெல்லாம்  இப்படி  இவர்கள்  ஜாடை  பேசுவது  வழக்கமான   ஒன்று  அதற்காக  சில  முறை  தங்களுடைய  அப்பாகளிடமும்  ச்சூளிலும்  அடிகளும்  வாங்கி  யுள்ளனர் .. இவர்கள்  பேசுவது  கேட்காததுபோல்  அவளும்  நடந்து  சென்றால் .. அவள்  அந்த  தெரு  முனையை  தாண்டும்  வரை  ஜாடை  பேசி  கொண்டே  இருந்தனர் .. சிறிது  நேரம்  விளையாடி  விட்டு  தெரு  கடைசியில்  இருந்த  சூப்  கடைக்கு  சூப்  குடிக்க  சென்றனர் ...
             பிறகு  ஒரு  நாள்  வினோத்  அவன்  வீட்டின்  பக்கத்துக்கு  தெருவில்  இருந்த  முடி  வெட்டும்  கடையில்  முடி  வெட்ட  சென்றான் . உள்ளே  சென்றதும்  அந்த  முடி  வெட்டுபவர்  வா  பா  உட்காரு  இவருக்கு  ஷேவிங் தான்  முடுச்சுட்டு  வந்துடறேன் என்றார் .சரினா  என்று  சொல்லி  விட்டு  அங்கிருந்த  தின  தந்திய  எடுத்து  புரட்டினான் .. அப்பா  எப்படிப்பா  இருகாரு  பாத்து ரொம்ப  நாளாச்சு  என்று  வினோத்தை  பார்த்து  கேட்டபடி ஷேவிங் செய்து கொண்டிருந்தார் .. ம்ம்ம்  நல்லா  இருக்கார்னா  என்றான்  வினோத் .. கிருதா நல்லா ஷார்ப்பா கத்தி மாதிரி   விட்ருங்க  என்று  முடி  வெட்டி  கொண்டிருந்த  சிறுவன்  கூறியதை  கேட்டு  வினோத்  ஆச்சர்யத்துடன்  அவனை  பார்த்தான் .என்ன  விட  சின்ன  பயன்  அவன்லாம்  funku விடறான் கிருதா இவ்ளோவ் கீழ வக்கிறான்   நா   இன்னும்  ஓட்ட  முடி  வெட்டிக்கிட்டு  இருக்கேன் .அந்த  சிறுவனுக்கு  முடி  வெட்டி  முடித்ததும்  வினோத்  சென்று  அமர்ந்தான் .எதுவும்  கேட்காமல்  அந்த  கடைகாரரும்  முடி  வெட்ட  தொடங்கினார் .வினோத்  அவனுடைய  5 வயதிலிருந்து  இந்த  கடையில்தான்  முடி  வெட்டி  கொண்டிருக்கிறான் , அதனால்  அவர்  எதுவும்  கேட்காமல்  வழக்கம்போல்  முடி  வெட்ட  தொடங்கினார் .வினோத்  சிறு  தயக்கத்துடன்  முன்னாடி  மட்டும்  கொஞ்சம்  முடி  அதிகமா  விற்றுங்கனா  பின்னாடிலாம்  எப்பவும்  போல  பண்ணிடுங்கனா என்றான் .அந்த  கடை  காரர்  சிறிய  புன்னகையுடன்  சரிபா  என்று  சொன்னார் .. இப்ப  நீ  10thla?.. ஆமா  என்று  தலை  அசைத்தேன் .. அடுத்து  கிருதாவை  சரி  செய்ய  ப்ளேடை  பொருத்தினார் .. அண்ணா  கிருதா  கொஞ்சம்  சார்பா  கீழ  இறங்குற  மாதிரி  விடுங்கனா  என்றான்  வினோத் .. சிறு  வயதில்  ப்ளேடை  பொருத்தி  கிருதாவை  சரி  செய்ய  வரும்போது  வேணாம்  என்று  அழுது  ஓடியவன்  இப்பொழுது  இப்படி  பேசுவதை  கேட்டு  அவருக்கு  சிரிப்புதான்  வந்தது .பசங்க  ரொம்ப  சீக்கிரம்   வளந்துடுறாங்க  என்று  மனதிற்குள்  நினைத்தார் .முடிவெட்டி  முடித்தவுடன்  50rubaai தந்தான் .சரிபா  அப்பாவ  கேட்டேன்னு  சொல்லு .சரினா  என்று  கூறிவிட்டு  சென்றான் .
                   வினோத்தின்  தந்தை  ஹாலில்  உட்காந்து  tv பார்த்து  கொண்டிருந்தார் .. வினோத்  தலையை  குனிந்து  கொண்டு  அம்மா  துண்டு  எங்க   இருக்கு  என்றான் .. ஹால்ல  cupboardla இருக்கு  பாரு    என்று  அவனுடைய  அம்மா  கிட்செனில்  இருந்து  சொன்னார் .. தலையை  குனிந்து  கொண்டே  துண்டை  எடுக்க  கப்  போர்டை  திறந்தான் .. கப்போர்ட்ல இல்லேமா  என்று  கத்தினான் .. டேய்  இந்தா  துண்டு  என்று  தன்னுடைய  தோளில் இருந்த  துண்டை  நீட்டினார்  வினோத்தின்  தந்தை ..ச்ச   செத்தேன்  என்று  நினைத்து  கொண்டு   தலையை  குனிந்து  கொண்டே  அவரிடம்  துண்டை  வாங்க  சென்றான்  வினோத் .. டை  என்னடா  முன்னாடி  இவ்ளோவ் முடி  விட்டுருக்க  எந்த  கடைக்கு  முடி  வெட்ட  போன ? தலைய  நிமிந்து  பாரு  டா என்று  கத்தினார் .. வினோத்  துண்டை  வாங்கி  கொண்டு  தலையை  நிமிர்த்தாமல்  மொட்டையே  அடுச்சுட்டு வந்தாலும்  உங்களுக்கு  முடி  அதிகமா  இருக்க  மாதிரிதான் உனக்கு  தெரியும்பா   என்று  பாத்  ரூமை  நோக்கி  நடந்து  கொண்டே  சொன்னான்  வினோத் .. அவன்  வைத்திருந்த  கிருதாவை  பார்த்த  உடன்  அவருக்கு  இன்னும்  கோபம்  வந்து  விட்டது .. படிக்கிற  புள்ள  மாதிரியா  இருக்கான்  ரவுடி  மாதிரி  கிருதா  விட்டிருக்கான் .. அவர்  சொல்வது  கேட்காததுபோல்  பத்ரூம்குள்  குளிக்க  சென்றான் வினோத் .. அவன்  வெளியே  வந்ததும்  அந்த  கிருதாவை  சரி  செய்யாமல்  விட  மாட்டேன்  என்று  தன்னுடைய  ஷேவிங்  சேட்டை  எடுத்து  மாடி  கொண்டிருந்தார் வினோத்தின் தந்தை .. இவனுக்கே  இவ்ளோவ்  திமிர்  இருந்த  எனக்கெல்லாம்  எவ்ளோவ்  இருக்கும்  என்று  கதிகொண்டிருகும்போதே  வீட்டின்  calling bell சத்தம் கேட்டது .. வினோத்தின்  தந்தை  கதவை  திறந்தார் .. வினோத்தின்  பெரியப்பா  வந்திருந்தார் .. வாங்கணா  என்று  உள்ளே  அழைத்தார்  வினோத்தின்  தந்தை .. கிட்செனில்  இருந்து  வெளியே  வந்து  வினோத்தின்  அம்மாவும்  வரவேற்றார் .. தான்  வாங்கி  வந்த  பழங்களை  குடுத்து  விட்டு  சோபாவில்  அமர்ந்தார்  வினோத்தின்  பெரியப்பா ..
                  என்னடா  ஆச்சு  சத்தம்  தெரு  முனைக்கு   வரைக்கும்  கேக்குது ?.. அதெல்லாம்  ஒண்ணுமில்லணா  சும்மாதான்  என்றார்  வினோத்தின்  தந்தை .. எப்பவும்  போலதான்  வினோத்தோட சண்ட  போடலேன  இவருக்கு  தூக்கம்  வராது  என்றார்  வினோத்தின்  அம்மா .. வினோத்  சரியாக  பாத்ரூம்  கதவை  திறந்து  கொண்டு  வெளியே  வந்தான் .. பெரியப்பாவை  பார்த்து  ஆச்சர்யம்  கலந்த  சிரிப்புடன்  பெரியம்மா  அக்காலாம்  வரலயான்னு ? கேட்டான் .. அவளுக்கு  உடம்பு  சரி  இல்ல  அக்காக்கு  எக்ஸாம்  என்று  கூறி  விட்டு  பாக்கெட்டிலிருந்து  இரண்டு  5 star சாச்க்ளடை  எடுத்து  குடுத்தார் .. ரம்யா  எங்க  என்று  கேட்டார் ? அவ  இன்னும்  தூங்கிடுதன்  இருக்கா  என்றான்  வினோத் .. வினோத்தின்  அப்பாவும்  பெரியப்பாவும்  பூர்வீக  நிலத்தை  பற்றி  பேச  தொடங்கினர் .. வினோத்  அந்த  சாச்க்ளடை  பிரித்து  கொண்டே  ,நல்லவேள  பெரியப்பா  வந்து  நம்மள  காபாதிடாறு  என்று  நினைத்து  கொண்டு  உள்ளே  சென்றான் .. 
               அடுத்த  நாள்  ஸ்கூல்ல  history period நடந்து  கிட்டு  இருந்தது .. Louis 14 பற்றி  நடத்திக்கிட்டு  இருந்தாங்க .. கிளாசில்  ஒரு  மயான  அமைதி  பாதி  பேரு  அரை  தூக்கத்தில்  பகல்  கனவு  கண்டு  கொண்டு  இருந்தாங்க , மீதி  இருந்த  சிலர்  கவனிப்பது  போல்  நடித்து  கொண்டிருந்தனர் .. Teachera பாத்துகிட்டே , வீட்ல  பைக்க  பத்தி  கேட்டியாட  என்றான்  செல்வா .. இல்லடா  நா  இப்டி  கிருதா  விட்டதுகே  அவரு  சாமியாடிடாறு  பைகேல்லாம்  கேட்டா என்ன  வீட்ட  விட்டே  தொரதிடுவாறுடா .. சரி  ஒரு  வாட்டி  கேட்டு  பாரு  என்னதான்  சொல்றாருன்னு  பாப்போம்  என்றான்  செல்வா .. ம்ம்ம்  அதுவும்  கரெக்ட்தான்  கேட்டு  பாக்குறேன்டா  என்று  அவன்  சொல்லி  முடித்த  அடுத்த  நொடி  chock piece வினோத்தின்  நெற்றியில்  பட்டது .. செல்வாவும்  வினோத்தும்  teacherai பார்த்தனர் .. செல்வா  வினோத்  "both get out of my class for one week ".. Sorry miss என்றார்கள்  வினோத்தும்  செல்வாவும் .. வெளிய  போறிங்களா  இல்ல  பிரின்சிபால  பாகுரின்களா ? என்றார்  history டீச்சர் ..
                 செல்வாவும்  வினோத்தும்  பேசாமல்  எழுந்து  வெளியே  சென்று  நின்றனர் .. டேய்  நாயே  missa  பாதுகிடேதாண்ட  பேச  சொன்னேன்  உன்னால  பாரு  இப்ப  அந்த  ஒட்டகம்  நம்மள  வெளிய  அமுசிடா  என்றான்  செல்வா .. சரி  சரி  விடு  இதுக்கு  முன்னாடி  நீ  வெளிய  நின்னதே  இல்லையாகும்  என்றான்  வினோத் .. சரி  சரி  ஒட்டகம்  பாக்குது  கம்முனு  இரு  என்றான்  செல்வா .. 
               அன்று  இரவு  ஹாலில்  உட்காந்து  அனைவரும்  tv பார்த்து  கொண்டிருந்தனர் .. அப்பா  10thla 80%ku மேல  எடுத்தா  செல்வாவோட  அப்பா  அவனுக்கு  பைக்  வாங்கி  தரதா  சொல்லி  இருகாரு  என்று  அவன்  சொல்லி  முடிக்கும்  முன்  நா  இப்ப  உனக்கு  பைக்  வாங்கி  தருவேன்னு  கனவுல  கூட  நெனச்சு  பாதுராத  என்றார்  வினோத்தின்  தந்தை .. வினோத்  கோவத்துடன்  எழுந்து  உள்ளே  சென்றான் .. உனக்கு  எப்ப  பைக்  வாங்கி  தரணும்னு  எனக்கு  தெரியும்  15 வயசுல  பைக்  கேக்குதா .. உன்னோட  அம்மாவ  ஐஸ்  வச்சு  பைக்  வாங்கிடலாம்னு  கனவுல  கூட  நெனச்சுராத .. நீ  காலேஜ்  முடுச்சபுரம்தான்  பைக்லாம் .. இவர்  சொல்வதை  கேட்டு  வினோத்  போர்வையை  போத்தி கொண்டு  கோவத்துடன்  படுத்திருந்தான் .. 
            அடுத்த  நாள்  பள்ளியில்  நேத்து  nightu பைக்  வேணும்னு  கேட்டுட  போல  இருக்கே ? என்றான்  செல்வா .. ஆமா  ஆமா  உனக்கு  எப்டி  தெரியும்  என்றான்  வினோத் .. உங்கப்பா  கத்துன  காத்துதான்  தெருவுக்கே  கேட்டுதே .. என்ன  பண்றது  டா  உங்க  வீட்ல  எவ்ளவோ  பரவா இல்லடா  எங்க  வீட்ல  சாவடிகிறாங்க  என்றான் .. ம்ம்  விட்ரா  பாத்துக்கலாம்  திட்டு  மட்டும்தான  இல்ல  பெல்ட்  ஏதும்  எடுத்து  விலாசுனார  என்று  சிறிது  கொண்டே  கேட்டான்  செல்வா .. நாதாரி  மூட்றா என்று  வினோத்  சொல்வதற்கும்  chock piece அவனோட  நெத்தில  அடிகரதுகும்  சரியா  இருந்துச்சு .. வெளிய  நிக்கும்போதும்  பேசுறிங்களா  நாளைக்கு  வரப்ப  இந்த  questiona 10 வாட்டி  எழுதிட்டு  வரணும் .இதுக்குமேலயும்  பெசுநிங்கனா  50vaati எழுத  வைப்பேன்  என்றார்  history டீச்சர் .. அது  எப்டி  டா  உன்ன  மட்டும்  கரெக்டா  குறி  பாத்து நெத்தில  அடிக்கிறாங்க ? என்று  நக்கலாக  கேட்டான்  செல்வா . . வாய  மூட்றா  சனியனே  எல்லாம்  உன்னாலதான்  என்று  சொல்லி  விட்டு  தள்ளி  நின்றான்  வினோத் .. 
             நாட்கள்  நகர்ந்தன .. 10th public examum முடிந்தது .. 10th ரிசல்ட்  வருவதற்கு  முன்னாடி  நாள்  இரவு .. வினோத்  அவனது  அப்பாவிடம்  பைக்  வாங்கித்தாங்க  என்றான் .. அவனது  அப்பா  அவனை  ஒரு  முறை  முறைத்து  பார்த்து  விட்டு  எதுவும்  பேசாமல்  tv பார்த்து  கொண்டிருந்தார் .. அவன்  கடுப்பில்  மனசுக்குள்ள  அவனோட  அப்பாவ  திட்டி  கொண்டே  பெட்டில் பொய்  படுத்தான் .. அடுத்த  நாள்  10th ரிசல்ட்  வந்தது  இருவரும்  சென்று  ஸ்கூலில்  ரிசுல்டை   பார்த்தனர் .. வினோத்  82% செல்வா  87% வாங்கி  இருந்தார்கள் .. சாயந்திரம்  பைக்  வாங்கிடுவேன்  ரெடியா  இரு  மச்சான்  ரெண்டு  பெரும்  வெளிய  போறோம்  என்றான்  செல்வா .. சரி  டா  என்று  சிறிய  புன்னகயுடம்  சொன்னான்  வினோத் .. வினோத்தின்  அம்மா  அவனுக்கு  ஸ்வீட்  செய்து  கொடுத்தால்  ஆனால்  அவனுக்கு  அதில்  சந்தோஷமில்லை .. யாரிடமும்  பேசாமல்  அமைதியாக  படுத்திருந்தான் .. மாலை  5 மணியளவில்  horn சத்தம்  கேட்டு  கொண்டே  இருந்தது .. வினோத்  வெளியே  வந்து  பார்த்தான்  hero honda splenderil செல்வா  முகம்  முழுக்க  மகிழ்ச்சியுடன்  சீக்கிரம்  வாடா  வெளிய  போயிடு  வரலாம் .. வினோத்தும்  அவனுடன்  பைக்கில்  ஏறி  கொண்டான் .. இருவரும்  பைக்கில்  அங்கிருந்த  தெருக்களை  சுற்றி  சுற்றி  வந்தனர் .. வண்டி  எவ்ளோவ்  டா  என்றான்  வினோத் .. Second handdhaanda ஆனா  வாங்கி  ஒரு  வருஷந்தான்  ஆகுது , நல்ல  கொந்டிதிஒந்ல  இருக்கு  20000 என்றான்  செல்வா .. Oh நல்லா  இருக்குடா  second hand மாதிரியே  தெரியலடா  என்றான்  வினோத் ..
                   வண்டியை  நிறுத்தி  விட்டு  இந்தாடா  நீ  ஓட்டி பாரு  என்று  செல்வா  இறங்கி  வினோத்திடம்  வண்டியை  குடுத்து  விட்டு  பின்  சீட்டில்  அமர்ந்தான்  செல்வா .. வினோத்  வண்டியை  வேகமாக  ஓட்டினேன்  எதிர்  காற்று  அவர்கள்  இருவர்  முகத்தையும்  உரசி  கொண்டு  போனது .. வினோத்திற்கு  வண்டி  ஓட்டுவதற்கு  ரொம்பவும்  பிடித்திருந்தது .. இருவரும்  ஓஒஹ்  என்று  கத்தி கொண்டே  அந்த  தெருக்களில்  வேகமாக  சென்றனர் .. பிறகு இருவரும்  வீட்டுக்கு  சென்றனர் .. நாளைக்கு  பைக்ல  பீச்சுக்கு போலாம்டா  என்றான்  செல்வா .. ம்ம்ம்  போலாம்டா  என்று  சொல்லிவிட்டு  வினோத்  அவனுடைய  வீட்டின்  கேட்டை திறந்து  உள்ளே  சென்றான் .. வினோத்  சந்தோஷமாக  வீட்டிற்குள்  நுழைந்தான் .. அவனுடைய  அப்பா  ஹாலில்  உட்காந்து  tv பார்த்து  கொண்டிருந்தார் , எங்கடா போய் சுத்திட்டு  வர .? என்றார் .. செல்வா  வீட்ல  அவனுக்கு  10thla 83% எடுத்ததுக்கு  பைக்  வாங்கி  குடுத்திருக்காங்க  அதான்  அவன்கூட  பைக்ல  போயிடு  வந்தேன்னு  சொன்னான் .. வினோத்தின்  தந்தை  எதுவும்  பேசாமல்  tv பார்த்து  கொண்டே  இருந்தார் .. அவங்க  வீட்ல  நம்ம  வீடு  மாதிரி  இல்ல  என்றான்  வினோத் .. கொவமடைந்த  வினோத்தின்  தந்தை  என்னடா  வாய்  நீளுது , இப்ப  என்ன  உனக்கும்  பைக்  வேணுமா ?.. உனக்கு  எப்ப  என்ன  வாங்கி  தரணும்னு  எனக்கு  தெரியும்  இன்னிக்கு  நல்ல  மூட்ல  இருக்கேன்  அடி  வாங்காம  போய்டு  என்றார் .. இந்த  வயசுல  பைக்  வாங்காம  வேற  எந்த  வயசுல  வாங்கிதருவிங்க  என்னோட  எல்லா  friend வீட்லயும்  வாங்கி  தந்துடாங்க ? என்று  அவன்  சொல்லி  முடிக்கும்  முன்  பளார்  என்று  அவன்  கன்னத்தில்  அரை  விழுந்தது ,என்னடா  நானும்  பாத்துகிட்டே  இருக்கேன்  ஓவரா  பேசுற  வெட்டி  போற்றுவேன்  போடா  உள்ள  என்றார் .. கிட்செனில்  இருந்து  வந்த  வினோத்தின்  அம்மா  டை  வினோத்  அப்பா  உனக்காக  கம்ப்யூட்டர்  வாங்கி  வசிருகாருடா  பொய்  உள்ள  ரூம்ல  பாரு  என்றால் ..
                   வினோத்  அழுது  கொண்டே  எல்லாத்தயும் நீங்களே வச்சுகங்க எனக்கு  ஒரு  மண்ணும்  வேணாம்  எல்லாத்தையும்  நீங்களே  வச்சுக்கங்க என்று  கூறி  விட்டு  போய்  பெட்டில் படுத்தான் .. இன்று  அவன்  பைக்  ஓட்டும்போது  அவனுக்குள்  ஏற்பட்ட  அந்த  சந்தோஷம்  அவனை  எப்படியாச்சு  பைக்  வாங்கியே  ஆகணும்  என்று  தூண்டியது .. அடுத்து  இரண்டு  நாட்கள்  அவன்  அந்த  கம்பியுடரை  தொடவில்லை .. அவனுடைய  தங்கை  அடிகடி  கம்ப்யூட்டர்  கேம்  விளையாடினால் .. அதை  பார்க்கும்போது  அவனுக்கும்  ஆசை  வந்தது   ஆனால்  இருந்தாலும்  தன்னுடைய  அப்பாவை  பழி  வாங்க  வேண்டும்  என்பதற்காக  கம்பியுடரை  தொடாமல்  இருந்தான் .. இரண்டு  நாட்கள்  கழித்து  அவனுடைய  அப்பா  இல்லாதபோது  கம்பியுடேரை  போட்டு  விளையாடினான் .. பிறகு  தினமும்  அவனுடைய  அப்பா  ஆபீஸ்  போனதும்  கம்பியுட்டரில்  விளையாடுவான் .. இரண்டு  வாரம்  கழித்து ஒரு  நாள்  வினோத்தின்  தங்கை  கம்பியுடேரை  on செய்து  கேம்  போட்டு  தரும்படி  தன்னுடைய  தந்தையிடம்  கேட்டால் .. டேய்  வினோத்  அந்த  கம்ப்யூட்டர்  கேம்  இவளுக்கு  வச்சு  குடு  என்றார்  வினோத்தின்  அப்பா .. நா  அந்த  கம்பியுடேரை  இந்த  ஜென்மத்துல  தொட  மாட்டேன்  என்றான்  வினோத் .. நா  ஆபீஸ்  போனப்புறம்  நீ  கம்பியுடேர்ல  விளையாடுறேன்னு  உங்கம்மா  என்கிட்டே  எப்பயோ  சொல்லிட்டா  போ  போய் on பண்ணி  குடு  என்றார் .. வினோத்  தலை  குனிந்தபடி  அமைதியாக  எழுந்து  போய்  கம்பியுடேரை  on செய்தான் .. அதற்கு  பிறகு  வினோத்  அவனுடைய  அப்பா  இருக்கும்போதும்  கம்பியுட்டரில் விளையாட  தொடங்கினான் .. விடுமுறை  முடிந்தது  செல்வாவும்  வினோத்தும்  ஒரே  பள்ளியில்  சேர்ந்தனர் .. வினோத்தின்  மனதிற்குள்  பைக்  வாங்க  வேண்டும்  என்ற  ஆசை  அதிகரித்து  கொண்டே  இருந்தது .. அடிகடி  பைக்  வாங்கி  தர  சொல்லி  வீட்ல  கேட்டு  திட்டு  வாங்கி  கொண்டிருந்தான்  வினோத் .. படிப்பில்  கவனம்  குறைய  ஆரம்பித்தது .. quarterly exaamla  mathsil பெயில் ஆகினான் ..
               இந்த  மாதம்  வினோத்தின்  பிறந்த  நாள்  16 வயசு  முடிந்து  17 ஆரம்பிகிறது .. வினோத்  அவனது  அப்பாவிடம்  இந்த  birthdayku பைக்  வாங்கி  தாங்கப்பா  என்றான் .. வினோத்தின்  அப்பா  அவன்  சொல்வது  கேட்காதது  போல்  tv பார்த்து  கொண்டே  இருந்தார் .. அப்பா  govermente 18 வயசுல  லைசென்ஸ் எடுக்கலாம்னு  சொல்றாங்க , நீங்க  இப்ப  வாங்கி  குடுதிங்கனாதான்  நல்லா  ஓட்ட  பழகிபேன், அடுத்த  வருஷம்  லைசென்ஸ்  எடுகரத்துக்கு கரெக்டா  இருக்கும்  என்றான் .. இந்த  பேச்செல்லாம்  நல்லா வக்கனையா  பேசு  படிப்புல  ஒண்ணுத்தையும்  காணோம்  வேற  ஏதாவது  பேசுனா  பேசு  பைக்  பத்தி  இன்னொருவாட்டி  பேசுன்னு  பாரு  என்ன  நடக்குதுன்னு , போய்  இந்த  வாட்டியாச்சு mathsla பாஸ்  ஆகுற  வழிய  பாரு  என்றார்  வினோத்தின்  தந்தை .. வினோத்  கோபத்துடன்  வீட்டின்  கதவை  வேகமாக  சாத்திவிட்டு  வெளியே  சென்றான் ... 
             பிறகு  ஒரு  நாள் மாலை  செல்வாவும்  வினோத்தும்  தெரு  முனையில்  இருந்த  சூப்  கடையில்  நின்று  சூப்  குடித்து  கொண்டிருந்தனர் .. நேத்து  just missu daa, கடைக்கு  போயிடு  வரேன்  traffic constable பைக்க  நிறுத்த  சொல்லி  கை  காட்னான்   என்றான்  செல்வா .. அபாரம்  எப்படிடா  தப்புச்ச ? என்றான்  வினோத் .. வண்டிய  slow பண்ற  மாதிரி indicator போட்டு அவன் கிட்ட  போனேன்  அவன்  கொஞ்சம்  அசால்டா  நின்னான்  டக்குனு  acclerator குடுத்து  கட்  அடுச்சு  வேகமா  வந்துட்டேன்டா   என்றான்  செல்வா .. Oh கெத்து போ  வண்டில  pick up சரி  இல்லையே  எப்படிடா ? என்றான்  வினோத் .. வண்டிய  first gearku கொண்டு  வந்து  டக்குனு  ரிசே  பண்ணேன்டா , அங்க  பாரு  மச்சி  ப்ரியா  வரா  எப்டி  தப்புசென்னு  நேராவே  காட்டுறேன்  வா  என்றான்  செல்வா .. இருவரும்  வண்டியில்  ஏறி  உட்கான்தனர் .. அவள்  இவர்கள்  பைக்கில்  வருவதை  பார்த்து  விட்டு  பார்க்காததுபோல்  ஓரமாக  நடந்து  வந்தால் .. செல்வா  வேகமாக  அவளை  நோக்கி  வண்டியை  ஓட்டினான் ..
             அவர்கள்  வேகமாக  அவளை  நோக்கி  வருவதை  கவனித்து  அங்கேயே  நின்றால் .. அவள்  அருகில்  இடிப்பது  போல்  சென்று  கட்  அடித்து  வேறு  பக்கம்  சென்றனர் .. பயத்தில்  ப்ரியா  அம்மா  என்று  அலறினாள் .. செல்வாவும்  வினோத்தும்  ஓஹ்  என்று  கத்திகொண்டே  அவளை  திரும்பி  பார்த்து  சிரித்து விட்டு  வேகமாக  சென்றனர் .. அடுத்தநாள்  வினோத்தும்  செல்வாவும்  சூப்  கடைக்கு  சென்றனர்  இருவர்  முகமும்  வீங்கி  இருந்தது .. அந்த  சனியன்  புடிச்சவ  எங்க  வீட்ல  வந்து  சொல்லிடாட  என்றான்  வினோத் .. தெரியும்டா  எங்க  வீட்ல  சொல்லிட்டுதான்  உங்க  வீட்டுக்கு  போனாளாம்  என்றான்  செல்வா .. உங்க  வீட்ல  என்ன  மச்சி  பெல்டா  தொடபகட்டையா ? என்றான்  வினோத் .. வழக்கம்போல  தொடபகட்டதான்  உங்க  வீட்ல ?.. எங்கப்பா  பெல்டுடா  என்றான்  வினோத் .. அடுத்தவாட்டி  அவல  பாதா  வண்டில  கடலாம்  அடிக்க  கூடாதுடா  நேரா  ஏத்திரனும் என்றான்  வினோத் .. ம்ம்ம்  கவலைபடாத  மச்சான்  சீக்கிரமே  ஏதிரலாம் என்று  சிரித்து  கொண்டே  சொன்னான்  செல்வா .. 
           ஒரு  வாரம்  கழித்து ஒரு  நாள்  செல்வா  வினோத்தின்  வீட்டுக்கு  வந்தான் .. இருவரும்  வினோத்  வீட்டின்  மாடிக்கு  சென்றனர் .. செல்வா  தன்னுடைய  பாக்கெட்டில்  இருந்து  ஒரு  புத்தம்  புதிய  samsung போனை  எடுத்து  காட்டினான் .. டேய்  எப்டிடா  உங்க  வீட்ல  வாங்கி  தந்தாங்களா ? எவ்ளோவ்  ருபாய்  என்று  கேட்டு  கொண்டே  அந்த  mobilai வாங்கி பார்த்தான்  வினோத் .. எங்க  வீட்ல  கிழிச்சாங்க  ஏற்கனவே  ஏன்  பைக்க வாங்கி  தந்தோம்ணு  யோசிச்சிக்கிட்டு  இருக்காங்க , என்னோட  cousin ஒருத்தன்  பைக்  race பத்தி  சொன்னான்னு  சொல்லி  இருந்தேன்ல , நேத்து  அந்த  பைக்  racela 3rd வந்தேன்  மச்சி  5000 கேடசுசு  அதுலதான்  வாங்குனேன்  என்றான் .. ஓஹ் செமையா  இருக்குடா  என்றான்  வினோத் .. இருவரும்  மாறி  மாறி  போனில்  போட்டோ  எடுத்து  கொண்டனர் .. போன்ல  songs ஏதலையா என்றான்  வினோத் .. இல்லடா  என்றான்  செல்வா .. சரி  வா  என்னோட  கம்பியுடேர்ல  இருக்க  பாட்டுங்கள  போனுக்கு  copy பண்ணி  கேட்டு  பாக்கலாம்  என்று  கூறி  செல்வாவை  அழைத்து  கொண்டு  சென்றான்  வினோத் .. 
                அன்று  இரவு  வினோத்  ரொம்ப  நேரம்  தூங்காம  யோசித்து  கொண்டே  இருந்தான் .. எப்படியாச்சு  பைக்  வாங்கணும் அதா  வாங்கிட்டா  போன்லாம்  நானே  வாங்கிடலாம்  என்று  நினைத்தான் , நாளைக்கு  கடைசியாக  ஒரு முறை  அப்பாவிடம்  வாங்கி  தருவிங்களா  மாடிங்கலானு  கேட்கணும்  என்று  முடிவு  செய்தான் .. அடுத்த  நாள்  சனி  கிழமை  மாலை  வினோத்  குடும்பத்துடன்  பீச்சுக்கு வந்திருந்தான் .. அலை  வருவதற்காக  நான்குபேரும் நின்று  கொண்டே  இருந்தனர் .. அலை  வந்ததும்  தன்னுடைய  மகனின்  கையை  இருக்க   பிடித்து  கொண்டார் .. வினோத்  அவனுடைய  அப்பாவை  பார்த்தான்  அவர்  சந்தோஷமாக  அடுத்த அலைகாக  காத்து  கொண்டிருந்தார் .. அப்பா  கடைசியா  கேக்குறேன்  எனக்கு  எப்ப  பைக்  வாங்கி  தருவிங்க  என்று  கேட்டான் .. எப்பனு  எனக்கு  தெர்யும  நீ  கவலைபடாத  என்றார்  வினோத்தின்  தந்தை .. எனக்கு  இந்த  birthdayku வேணும் வாங்கித்தாங்க  என்றான்  வினோத் .. வந்த  இடத்துல  உத  வாங்காம  வாய  மூடிகிட்டு  இரு  என்றார்  வினோத்தின்  தந்தை .. அதெல்லாம்  எனக்கு  தெரியாதுபா  எனக்கு  இந்த  birthdayku வாங்கி  தருவிங்களா  மாடிங்களா  சொல்லுங்க  என்று  கோபத்துடன்  கேட்டான்  வினோத் .. இப்ப  எதுக்குடா  பைக்  ரோட்ல  போற  வர  பொண்ணுங்கள  இடிகிரதுகா  என்றார் .. வினோத்  எதுவும்  பேசாமல்  நின்றான் .. நீ  சொல்றதுகுலாம்  நா  ஆட  முடியாது  எனக்கு  எப்ப  வாங்கி  தரணும்னு  தெரியும்  ஒழுங்கா  நில்லு  என்றார் , அலை  அவர்கள்  மீது  பாய்ந்தது  வினோத்தின்  தந்தை  வினோத்தின்  கையை  பிடித்து  கொண்டார் ..
              வினோத்  கோபத்துடன்  கையை  உதறிவிட்டு  அழுது  கொண்டே  திரும்பி  கரையை  நோக்கி  நடக்க  தொடங்கினான் .. அவனுடைய  அம்மா  டேய்  வினோத்  இங்க  வாடா  என்று  கத்தினால்  ஆனால்  வினோத்  கோவத்துடன்  அழுது  கொண்டே  கரைய  நோக்கி  நடந்து  சென்றான் .. அன்று  இரவு  அவன்  எதுவும்  சாப்பிடவில்லை , அவனோட  அப்பா  பேசினால்  காது  கேட்காததுபோல்  அவன்  வேலையே  பார்த்து  கொண்டிருந்தான் .. ரெண்டு  நாள்  ஆனா  சரியாகிடுவான்  என்று  வினோத்தின்  தந்தையும்  பெரிதாக  எடுத்து  கொள்ளவில்லை .. 
           அடுத்தநாள்  ஸ்கூலில்  maths period நடந்தது .. என்னாச்சு  மச்சான்  சரியா  பேச  மாடிகிர  உங்கப்பா  பெல்ட்  எடுத்து  விளயாடிடாரா ? என்றான்  செல்வா .. இல்லடா  நா  என்னோட  அப்பா  கிட்ட  பேசுறதில்லடா , எத்தனவாட்டி  கேட்டாலும்  பைக்  வாங்கியே  தர  மாடிகிராறு  மச்சி  அதான்  கடுப்பா  இருக்கு .. தம்பி  சாப்டாம  இருக்குறது , பேசாம  இருகுரதுலாம்  m.g.r. காலத்து  style இப்பலாம்  நீ  இப்டி  பண்ணா சாப்பாடு மிச்சம்னு நெனச்சு விட்ருவாங்க  எதுவும்  வாங்கி  தரமாட்டாங்க  மச்சி  என்றான்  செல்வா .. நானே  வேறுபுல  இருக்கேன்  மச்சான்  கடுபெதாதடா  என்றான்  வினோத் .. அவனை  இப்படி  பார்பதற்கு  செல்வாவுக்கு  கஷ்டமாக  இருந்தது .. இப்ப  என்னடா  உனக்கு  பைக்தாண்டா  வாங்கணும்  இன்னும்  கொஞ்ச  நாள்ல  பைக்  race வரும்  first வரவனுக்கு  15000 செகண்ட்  வரவனுக்கு  10000 da.. entryku 1000 கட்டனும்  அத நா  பாத்துக்குறேன்  நீ   கவலைபடாத ,என்னோட  மாமா  வண்டிய  ஒரு  நாளைக்கு  வாங்கிக்கலாம்  நம்ம  ரெண்டு  பெரும்  first ரெண்டு  prize வாங்கிடோம்னு  வச்சுக்கோ  25000  கிடைக்கும் ,நா  எப்பவும்  வண்டிய  serviceku விடுவனே  அவர்கிட்ட  ஒரு  பல்சர்  saleku இருக்கு  மச்சி  அத  வாங்கிடலாம்  என்றான்  செல்வா .. இதை  கேட்ட  வினோத்  முகம்  முழுக்க  மகிழ்ச்சி  easy ya ஜெய்ச்சிடலாமா  மச்சான் ? என்றான்  வினோத் ..
                கொஞ்சம்  கஷ்டம்தான்  மச்சி , வா  பாத்துக்கலாம்  எவ்ளோவோ  பண்றோம் இத  பண்ண  மாட்டோமா  என்றான்  செல்வா .. வினோத்  சத்தமாக  சிறிது  விட்டான் .. வினோத்  tell the next step? என்றார்  maths சார் .. வினோத்  அப்போலோதுதான்  போர்டையே  பார்த்தான் .. Get out of the class என்றார்  maths சார் .. வினோத்  சந்தோஷமாக வெளியே  சென்று  நின்றான் .. 
            இரண்டு  வாரங்கள்  கடந்தன  ஆனால்  வினோத்  அவனுடைய  அப்பாவிடம்  மட்டும்  பேசாமலே  இருந்தான் .. ஏதோ  இரண்டு  நாளில்  சரியாகிடுவானு  நெனச்சேன்  ஆனா  இப்ப  ரெண்டு  வாரமாச்சு  ஆனா  அவன்  ஏன் என்  கூட  பேசவே  மாடிகிறானே  என்று  நினைத்தார்  வினோத்தின்  தந்தை .. 
            மச்சி  நாளைக்கு  raceடா  evening 5 மணிக்கு  ரெடியா  இரு  என்றான்  செல்வா .. ம்ம்ம்  ok da என்றான்  வினோத் .. அன்று  இரவு  வினோத்தின்  தந்தைக்கு  வெகு  நேரம்  தூக்கம்  வரவே  இல்லை .. இவன்  நல்லதுக்குதான  பண்றோம்  அதா  ஏன்  இவன்  புருஞ்சுகவே  மாடிகிறான் .. ஏற்கனவே  இவனுக்கு  படிப்புல  கவனம்  கொறஞ்சு  போச்சு  இதுல  பைக்  வேற  வாங்கி  குடுத்தா  அவன்  வாழ்க்கையே  வீனாகிடுமே .. தன்னுடைய  மகன்  வாழ்நாள்  முழுவதும்  தன்னோடு  பேசாமையே  போயிடுவானோ  என்று  நினைத்தார் .. என்ன  பண்றதுன்னு  புரியாம  இரவு  முழுவதும்  fanai பார்த்து  யோசித்து  கொண்டே  இருந்தார் .. 
           நாளைக்கு  race என்று  நினைத்து  சந்தோஷத்தில்  வினோத்துக்கு  தூக்கமே  வரவில்லை .. எப்படியாச்சு  first prize வாங்கணும் , வண்டிய  செம  வேகமா  ஓட்டனும்  படத்துல  வர  மாதிரி  பைக்கில்  பறக்க  வேண்டும்  என்றெல்லாம்  மனதிற்குள்  நினைத்து  பார்த்து  கொண்டே  இருந்தான் .. அடுத்தநாள்  மாலை  செல்வா  வினோத்தை  கூடி  கொண்டு  தன்னுடைய  மாமாவின்  பைக்கை  கடன்  வாங்க  சென்றனர் .. மாமாவின்  பைக்கை  வாங்கிகொண்டு  வினோத்தும்  செல்வாவும்  சென்றனர் .. 
                 எப்டியாச்சு  win பண்றோம்  மச்சான் .. நாளைக்கு  உன்னோட  birthdayla. அந்த  பல்சர்  பைகேதான்  மச்சான்  உனக்கு  என்னோட  gift என்றான்  செல்வா .. மனம்  முழுக்க  சந்தோஷத்துடன்  Thanks da என்றான்  வினோத் .. அந்த  raceku இருபது  பேருக்கு  மேல்  வந்திருந்தனர் .. செல்வா  அவர்களை  பார்த்து  விட்டு  போன  வாடி  first prize வாங்குனவன்  வரலடா  நாம  easyyaa வின்  பண்ணலாம்  நீ  முன்னாடி faastaa போ  நா  உனக்கு  பின்னாடியே  நம்மள  யாரும்  முந்தரதுகு  வழி விடாம  வரேன்  என்றான்  செல்வா .. ம்ம்  சரிடா  என்றான்  வினோத் .. அனைவரும்  போட்டிக்கு  தயாராக  நின்றனர் .. செல்வா  தன்னுடைய  போனில்  பாட்டை  on செய்து  வண்டியின்  தனக்  சீட்  கவரில்  வைத்தான் .. இது  எதுக்குடா  என்றான் வினோத் .. பாட்டு  கேட்டுகிட்டே  ஒட்டுனாதான்டா  நா  faastaa ஓட்டுவேன்  என்றான்  செல்வா .. போட்டி  ஆரம்பித்தது  வினோத்  வேகமாக  முன்னாடி  போயகொண்டிருந்தான் . செல்வா  அவனை  பின்  தொடர்ந்து  வந்தான் .. Traffic constable vinothai  பார்த்து  நிற்கும்படி  கை  அசைத்தார் .. வினோத்  வண்டிய  slow செய்தான்  traffic constable கிட்ட  போன  உடனே  வண்டியை  வேகமா  ஓட்டிட்டு  போனான்  வினோத் .. அந்த  traffic constable அவனை  சில  கேட்ட  வார்த்தைகளில்  திட்டிவிட்டு  இதெல்லாம்  போற  வேகத்துக்கு  எங்கயாச்சு  அடிபட்டு  அல்பாயிசுல  போக  போகுது  அப்பவும்  எங்களுக்குதான் தலைவலி  என்றார்  traffic constable.. செல்வா  traffic constabulai பார்த்ததும்  இடது  பக்கம்  இருந்த  சந்துக்குள்  போய் அடுத்த  சந்தில்  மறுபடியும்  மெயின்  ரோட்கு  வந்திடலாம்  என்று  நினைத்து  சந்துக்குள்  திரும்பினான் .. வினோத்  பின்னாடி  திரும்பி  பார்த்தான்  பின்னாடி  போட்டில  கலந்துகிட்ட  யாருமே  வரல .. எப்படியும்  நாமதான்  firstu என்று  மனதிற்குள்  நினைத்து  சந்தோஷமாக  வண்டியை  மேலும்  வேகமாக  ஓட்டினான் .. செல்வா  எங்க  போனான்  அவனையும்  காணமே  என்று  திரும்பி  பார்த்தான் ..
               திரும்பி  பார்த்து  விட்டு  முன்னே  திரும்பினான்  எதிரில்  ambulance ஒன்று  வேகமாக  அவனை மோத வந்தது ................................ 
          வினோத்தின்  வீட்டில்  போன்  அடித்தது  கிட்செனில்  இருந்து  வந்து  வினோத்தின்  அம்மா  போனை  எடுத்தால் , ஹலோ  என்றால்  அடுத்த  சில  நொடிகளில்  கதறி  அழுதபடி  கீழே  விழுந்தால் .. 
          அந்த  அம்புலன்சை  சுற்றி  மக்கள்  நின்று  கொண்டிருந்தனர் .. சனியம்  புடுச்சவனுங்க  எத்தன  வாட்டி  சொன்னாலும்  கேட்கமாட்டாங்க  இப்ப ரெண்டு  காலும்  போச்சு  திரும்ப  வருமா  என்று  புலம்பினார்  traffic constable.. அட  இவனங்குளுக்கு  இதெல்லாம்  பத்தாது  சார்  மனசுல  சூப்பர்  மேன்னு நெனப்பு , பாவம்  இவன  பெதவங்கதான்  உயிரோட  சாவாங்க  என்றார்  இன்னொரு  traffic constable.. 
வினோத்தின் அம்மா அழுதபடி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தால்... 
          வினோத்  முதல்  ஆளாக  வந்து  போட்டியை  வென்றான்  .. எப்படியும்  பைக்  வாங்கிடலாம்னு  மனதுக்குள்  கனவுகளுடன்  நின்று  கொண்டிருந்தான் .. என்னடா  நீ  மட்டும்தான்  வந்திருக்கு  மதவன்கலாம்  எங்க  என்று  போட்டியை  நடத்தியவர்  கேட்டார் .. எல்லாரும்  பின்னாடி  வராங்க just missnaa ambulancela அடி  பட்டு  இருப்பேன்  நல்லவேள  ambulancekaaran பிரேக்  அடுசான்  என்றான்  வினோத் .. அப்பொழுது  போட்டியை  நடத்துபவருக்கு  போன்  வந்தது , எடுத்து  பேசினார் .. அவர்  பதற்றத்துடன்  சரி  நீங்கலாம்  அங்க  இருந்து  கிளம்பிடுங்க  என்றார் .. வினோத்  எதுவும்  புரியாமல்  அவரையே  பார்த்தான் .. தம்பி  racela வந்தவன்ல  ஒருத்தனுக்கு  accident ஆகிடுசான்  சீக்கிரம்  இங்க  இருந்து  கிளம்பு , போலீஸ்  கேட்டா  race பத்தி  வாய  திறக்காத  என்று  சொல்லிவிட்டு  அவருடைய  வண்டியை  எடுத்து  கொண்டு  கிளம்பினார் .. ஒரு  வேள  செல்வாக்குதான்  accident ஆகி  இருக்குமோ  என்று  நினைத்தான் .. வினோத்  மனம்  முழுக்க  பயம்  பற்றி  கொண்டது .. வண்டியை  எடுத்து  கொண்டு  வந்த  வழியில்  மறுபடியும்  சென்றான் ..
               வினோத்  கைகள்  நடுங்கின .. கண்களில்  மரண  பயம்  இதயம்  வேகமாக  துடித்தது  வண்டியை  ஓட்ட  முடியாத  அளவுக்கு  உடம்பில்  நடுக்கம் .. ஒரு  நான்கு  வழி பாதையில்  வினோத்  கட்  அடித்து  வந்த  traffic constabulam வேறு  சில  constablesum நின்று  கொண்டிருந்தனர் .. வினோத்  பயத்தில்  அருகில்  செல்லாமல்  தூரத்தில்  நின்று  பார்த்தான் .. இரண்டு  பைக்குள்  உடைத்து  நொறுங்கிய  நிலையில்  ஓரமாக  படுக்க  வைத்திருந்தனர் .. ஒரு  பைக்கில்  no.platil no எதுவும்   இல்லாத புதிய வண்டி .. இன்னொன்று  செல்வாவின்  வண்டி  no. வினோத்தின்  கண்களில்  பயம்  கலந்த  அழுகை .. அந்த  traffic constable வண்டியில்  இருந்த  tank கவரில்  இருந்த  போனை  எடுத்து  பார்த்து  கொண்டிருந்தார் .. அருகில்  செல்ல  தெய்ரியம்  இல்லாமல்  அங்கிருந்த  போட்டி  கடையில்  போய் இங்க  accident ஆச்சாணா என்று  அழுகையை  மறைத்து  கொண்டு  கேட்டான் .. ஆமா  ஒரு  பையன்  வேகமா  வந்து  இன்னொரு  வண்டில  இடுசிடான் , ரெண்டு  பெருகும்  செம  அடி  போலைகாதுபா  பாகத்து  தெருல  இருக்க  s.k. ஹோச்பிடல்குதான்  தூக்கிட்டு  போய்  இருக்காங்க  என்றார் .. வினோத்  அடக்க  முடியாமல்  அழுது  கொண்டே  வண்டியில்  அந்த  hospitalai நோக்கி  சென்றான் .. செல்வா  வீட்டிற்கு  எப்படி  சொல்வது .. செல்வாக்கு  எதுவும்  ஆகா  கூடாது  என்று  நினைத்து  அழுது  கொண்டே  hospitalai அடைந்தான் .. அங்கிருந்த  receptionil இப்ப  ரோடு  accidentla ஒருத்தர  இங்க  கூட்டிட்டு  வந்தாங்களா  என்றான் .. ரெண்டு  பெற  admit பண்ணி  இருக்காங்க  ஒருத்தர்  first floorla icu la இருகாரு  இன்னொருத்தர்  இறந்துட்டார்  என்றால் .. வினோத்  வேகமாக  படியில்  ஏறி  first floorku சென்றான் .. Icu vil எட்டி  பார்த்தான்  செல்வா  தலை  முழுவதும்  கட்டு  போடிருந்தது .. Doctors nursegal அவனை  சுற்றி  நின்று  அவனுக்கு  treatement செய்து  கொண்டிருந்தனர் .. வினோத்துக்கு  அப்பொழுதுதான்  உயிர்  வந்தது ..
              உள்ளே  இருந்து   ஒரு  nurse வெளியே  வந்தார் .. அவனுக்கு  எப்படி  இருக்கு  என்று  கேட்டான் .. ஒரு  காலும்  ஒரு  கையும்  போய்டுச்சுபா .. உயிருக்கு  எந்த  பிரச்சனையும்  இல்ல  என்றார் .. போயடுசுனா  சரி  பண்ண  முடியாதா  என்று  கேட்டான் .. ரொம்ப  கஷ்டம்  மாதிரிதான்  தெரியுது  என்று  சொல்லி  விட்டு  சென்றால் .. வினோத்  என்ன  செய்வது  என்று  புரியாமல்  அங்கேயே  நின்று  கொண்டிருந்தான் .. செல்வாவின்  வீட்டிற்கு  போன்  பண்ணலாம்  என்று  நினைத்து  படிக்கட்டில்  கீழே  இறங்கினான்  வினோத் .. இறங்கி  நடந்த  வினோத்தின்  இடது  பக்கத்தில்  இருந்த  ரூமில்  சிலர்  அழுவதை  உணர்ந்தான்  வினோத் .. அது  அவனுடைய  அம்மாவின்  குரல் .. அது  உண்மையாக  இருக்க  கூடாது  என்று  நினைத்தபடி  திரும்பி  அந்த  ரூமை  பார்த்தான் , hospital அலறும்படி  கதறி  அழுதபடி  ரூமினுள்ளே  ஓடினான் .., வினோத்தின்  தந்தை  இறந்து  கிடந்தார்  அவனுடைய  அம்மாவும்  தங்கையும்  அழுது  கொண்டு  இருந்தனர் .. இவனை  பார்த்ததும்  வினோத்தின்  அம்மா  அவனை  பார்த்து  கதறி  அழுதால் .. அந்த  ரூமின்  மூலையில்  அமர்ந்த  படி  தன  அப்பாவை  பார்த்து  அழுது  கொண்டே  இருந்தான்  , அவனால்  தான்  காணும்  காட்சியை  உண்மை  என்று  நம்ப  முடியவில்லை . அழுதபடியே  மயக்கம்  போட்டு  விழுந்தான் .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
           மூன்று  மாதங்களுக்கு  பிறகு .. அன்று  சனி  கிழமை  வினோத்  பல்சர்  பைக்கை  எடுத்து  கொண்டு  பீச்சிற்கு  சென்றான் .. 
        மூன்று  மாதங்களுக்கு  முன்பு  வினோத்தின்  பிறந்த  நாளுக்கு  முன்னாடி  நாள்  இரவு  அவனுடைய  birthdayvuku giftaaga குடுக்கலாம்  என்று  நினைத்து  பல்சர்  பைக்  வாங்கி  கொண்டு  வீட்டிற்கு  வர  வழியில்தான்  அந்த  நாள்  வலி  பாதையில்  செல்வா  வேகமாக  வந்து  இடித்ததில் வினோத்தின் தந்தை  உயிர்  இழந்தார் .. பிறகு  அவருடைய  ஞாபகமாக  அதே  பைக்கை  சரி  செய்து  ஞாபகார்த்தமாக  வைத்திருக்கிறான் . . 
                 பீச்சில்  உட்காந்து  அலைகளையே  பார்த்து  கொண்டிருந்தான் .. .........................................
                  சனிக்கிழமைகளில்  பீச்சுக்கு வரதுக்கு  என்னோட  அப்பாக்கு  ரொம்ப  பிடிக்கும் ..இன்னமும்  நல்லா  ஞாபகம்  இருக்கு  நா  கடைசியா  பிசுக்கு  வந்தப்ப  அவர்  கூட  சண்ட  போட்டு கிட்டு  இனிமேல்  அவர்  கூட  பேசவே  கூடாதுன்னு  நெனச்சேன் .. நெனச்சமாதிரியே  கடைசி  வரைக்கும்  அவர்கூட  என்னால  பேச  முடியாமையே  போய்டுச்சு .. அவர்  இருந்தப்ப  என்னோட  வாழ்க்கைய  சந்தோஷமா  வாழ  விடமாடிகிராறேனு  தோனுச்சு  இப்ப  அவர்  இல்லாம  எனக்கு  வாழ்க்கை  இருக்கானே  தெரியல .. அந்த  ஒரு  நாள்ல  எல்லாமே  மாறி  போச்சு .. அவர்  இருந்தப்ப  எவ்ளோவ்  சொந்த  காரங்க  சுத்தி  சுத்தி  வந்தாங்க  ஆனா  இந்த  மூணு  மாசத்துல  ஒருத்தன்  கூட  எங்க  வீட்ட  திரும்பி  பாக்கள.. 
       
                இனி  இந்த  உலகத்துல  என்ன  அதிசயம்  நடந்தாலும்  என்னோட  அப்பா  திரும்பி  வரமாடாறு .. அவர்  இருந்தப்ப  அவர  விட  எனக்கு  பைகேதான்  பெருசா  தெருஞ்சுசுச்சு  ஆனா  அவர்  இப்ப  இல்ல  அவர்  வாங்கி  குடுத்த  பைக்  இருக்கு  ஆனா  மனசுள்  ஒரு  துளி  சந்தோஷம்கூட  இல்ல .. இந்த  உலகம்  எவ்ளோவ்  கேவலமானதுனு  இந்த  3 மாசத்துலயே  தெருஞ்சுகிட்டேன் .. அவர்  இல்லாம  ஒவ்வொரு  நொடியும்  பயத்துல  வாழ்றேன்  அவர்  இருந்தப்ப  என்னோட  வாழ்க்கை  அழகா  இருக்கணும்னு  நெனச்சு இதே  மாதிரிதான்  அவரும்  பயந்தாரு .. 
              இதலாம்  விட  இனி  அவர்  கூட  என்னால  பேச  முடியுமா ?, அவர  தொட  முடியுமா ?, அப்பா  நீங்க  எனக்கு  எவ்ளோவ்  முக்கியம்னு  உங்ககிட்ட  சொல்லனும்னு  நெனைக்கிறேன்  ஆனா  இதெல்லாம்  இனி  முடியாது .. அவன்  கண்களில்  இருந்து  தானாக  கண்ணீர்  வந்தது .. இனிமேல  நா  யார்கிட்ட  போய் உரிமையோட  இது  வேணும்னு அது வேணும்னு  கேட்க  முடியும் , இல்ல  நா  செய்தால்  ஆனந்த  கண்ணீருடன்  என்னோட  தோள்ல தட்ட  யார்  இருக்கா .?.. அன்னகி  உன்னோட  கைய  உதறிட்டு  கோவமா  நடந்து  போனேன் .. நா  உன்னோட  பேசாம  இருந்த  அந்த  சில  வாரங்கள்  நீ  எவ்ளோவ்  கஷ்டபடிருபனு  எனக்கு  இப்பதான்  புரியுது ..
                நீ  உயிரைவிடும்  சில  வினாடிகளுக்கு  முன்னாள்  கூட  என்னை  பற்றிதான்  கவலை  படிருபாய் .. கடைசி  வரைக்கும்  நா  உன்ன  நிம்மதியாவே  வாழ  விடலையேபா.. அன்னகி  பீச்ல  மத்தவங்க  பாகுறப்பா  நீ  என்னோட  கைய  பிடிகிறத  அவமானமா  நெனச்சேன்  ஆனா  இன்னிக்கு  நீ  என்னோட  கைய  ஒரு  வாட்டியாவது  பிடிகவரமாடியானு  தவிக்கிறேன் ... ஆனால்  இன்னொரு  முறை  நீ  என்னோட  கைய  பிடிக்கிற  சந்தர்பம்  கிடைச்சா  என்  வாழ்நாள்  முழுவதும்  உன்னோட  கை  பிடில  இருந்து  நா  என்னோட  கைய  எடுக்கவே  மாட்டேன்பா .. அது  என்னமோ  தெரியல  ஒருத்தர்  உயிரோட  இருக்கும்  வரை  நமக்கு  அவங்கள  எவ்ளோவ்  பிடிக்கும்னு  நாம  காடவேமாடோம்  ஆனா  அவங்க  செதபுரம்  அவர்  கூட இன்னும்  அன்போட  வாழ்ந்து  இருக்கலாம்னு  தோணும் .. அங்கு  பீச்சில்  நடந்து  சென்ற  சிலர்  இவன்  அழுவதை  பார்த்து  விட்டு  அவனையே  திரும்பி  திரும்பி  பார்த்தனர் .. இவன்  தன்னுடைய  இரு  கண்களையும்  துடைத்து  கொண்டு  பிச்சை  விட்டு  எழுந்து  வீட்டுக்கு  சென்றான் .. 
            மூன்று  மாதம்  களைத்து  hospitalil இருந்து  discharge ஆகி  இருந்த  செல்வா  வினோத்தின்  வீட்டின்  முன்னாள்  wheeling chairil அமர்ந்திருந்தான் .. செல்வாவின்  ஒரு  காலும்  ஒரு  கையும்  உடைந்திருந்தது .. வினோத்தை  பார்த்ததும்  செல்வாவின்  இரு  கண்களிலும்  நீர்  தேங்கியுது .. வினோத்  அவனையே  பார்த்து  கொண்டிருந்தான் .. செல்வா  வினோத்தை  பார்க்க  முடியாமல்  தலை  குனிந்தான் .. வினோத்  அவன்  பக்கத்தில்  சென்று  நின்றான் .. சாரி  மச்சான்  என்று அழுதுகொண்டே   தலை  குனிந்தபடி  சொன்னான்  செல்வா .. வினோத்தின்  கண்களிலும்  கண்ணீர் .. வினோத்  செல்வாவின்  தலையில்  கை  வைத்து அவன் முகத்தை தூக்கி பார்த்தான் .. எனக்கு  தெரியாமையே  நடந்துடுசுடா  என்று  அழுதுகொண்டே  முகத்தை  நிமிர்த்து  வினோத்தை  பார்த்து  சொன்னான்  செல்வா .. வினோத்  அழுது  கொண்டே  அதா  பத்தி  பேச  வேண்டாம்  மச்சான்  வா  வீடுக்குள்ள  போலாம்  என்று  சொல்லி  செல்வாவை  வீட்டிற்குள்  wheeling chairai தள்ளி  கொண்டு  சென்றான்  வினோத் ...........................................................................................................
       "வாழ்க்கை  ஒரு  முறைதான்,  நமக்காக  இல்லாட்டியும்  நம்முடைய  நேச  உறவுகளுக்காகவும் எதிரில் வருபவனுக்கும் நம்மை போல் ஒரு குடும்பம் இருகின்றது அவர்களுக்கு அவன் தேவை என்பதையும்  உணர்ந்து  வண்டியில்  செல்லும்போது  மெதுவாகவும் பாதுகாப்புடனும்  செல்வோம் "....
                                                                             -கிஷோர் குமார் .