Saturday 10 September 2011

நான் கேட்ட கதை


அன்னகி திங்கள் கிழமை வழக்கம்போல எந்துருச்சு தூக்க கலக்கத்துலையே கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு பைக்ல போனேன் . பைக cycle ஸ்டாண்ட்ல வச்சுட்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போகும்போது திடீர்னு இன்னிக்கு காலேஜ்க்கு போகனுமானு தோனுச்சு , சனி ஞாயிறு லீவ்ல நல்லா வீட்ல தூங்கிட்டு இருந்துட்டு Monday காலேஜ்க்கு போறது பெரிய கொடுமை … அது மட்டுமில்லாமல் 30 ரூபா செலவு பண்ணி காலேஜ்க்கு போய் தூங்குறத விட 30 ருபாய் டிக்கேட வாங்கிட்டு வேற எங்கயாவது போகலாம்னு தோனுச்சு ... என்னோட நண்பர்களுக்கு வெளிய போகலாம்னு மெசேஜ் செஞ்சேன் வழக்கம்போல வேணாம்னு ஒரு காரனத்த சொன்னானுங்க .. சரி காலேஜுக்கே போகலாம்னு முடிவு பண்ணி பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணுனேன் .. 62 வந்துச்சு கும்ப்ள இருந்துச்சு அதனால ஏரள .. அந்த நேரத்துல எப்பவுமே 62 கூட்டமாதான் வரும் அது எனக்கும் தெரியும் இருந்தாலும் gaaliya பஸ் வருமான்னு பாத்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன் .. 70A trailer பஸ் வந்துச்சு நிறைய பேரு இறங்குனாங்க .அது வண்டலூர் ஜூகு போற பஸ் .. ஒரு முறை என்னோட நன்பன என்னை ஜூகு கூப்டான் ஆனா அப்ப எனக்கு போக விருபமில்லாதனால நா போகல .. ஆனா இப்ப கொஞ்ச நாளா ஜூகு போகணும்னு தோனுச்சு அப்ப அந்த frienda கூப்டப்ப, நா கூப்டப்ப வரலைல அதனால இப்ப நா வரமாட்டேனு சொன்னான் .. நியாயமான கோபம்தான் .. நிச்சயமா ஜூனு சொன்னா மத்த friendsum வரமாட்டாங்க அதனால இன்னிக்கு தனியா போகலாம்னு முடிவு பண்ணி பஸ்ல ஏறி உட்காந்து 30 ருபாய் டிக்கெட் வாங்குனேன் . திருபீச்னால ரெண்டு மணி நேரம் பயணம் headseta மாட்டிகிட்டு பாட்டு கேட்டுகிட்டே வந்தேன் . ஜூதான் கடைசி ஸ்டாப் பஸ்ல இருந்து இறங்கி ஜூகு நடந்து போனேன் .Entry fees 20 ரூபாய்னு போட்டு இருந்துச்சு .. ஒரு வேல ஜூ நல்ல இல்லேன்னா என்ன பண்றது பேசாம சத்யம் தியேட்டர்ல 10rubai டிக்கெட்ல படமாச்சு பாக்கலாம்னு யோசிச்சேன் .. அனால் இப்ப கெளம்பி போனாலும் டிக்கெட் கிடைக்காது அதனால வேற வழி இல்லாம 20rs கட்டுனேன்...
மணி 10 இருக்கும் ஜூல கூட்டமே இல்ல சில காதல் ஜோடிகளும் சில குடும்பம் மட்டும்தான் வந்திருந்தாங்க .. அங்க இருந்த ஹோட்டல்ல இருந்து செமயா வாசன அடுசுச்சு .. ஒரு செகண்ட் சாப்பிடலாம்னு தோனுச்சு ஆனா என்கிட்ட அவளா காசு இல்ல .. ஹோடல திரும்பி பாத்துட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன் .. ரெண்டு பக்கமும் மரங்க நடுவுல தார் ரோடு .. மரங்களோட நிழல் ரோட்ல விழுந்திருந்தது அதனால நடக்கும்போது வெயில் அதிகமா தெரியல .. ரோடின் இரு பக்கமும் உட்காரதுக்கு வசதியா செமேன்ட்லையே சோபா மாதிரி செஞ்சிருந்தாங்க .. அதுல உட்காந்து தூரத்துல இருந்த விளங்குகள சிலர் பாத்துகிட்டு இருந்தாங்க .. 30 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூரத்தில் எதையோ பார்த்துவிட்டு அவருடைய டைரில ஏதோ எழுதிட்டு இருந்தாரு ... நேரம் ஆக ஆக காதல் ஜோடிகளின் கூடம் அதிகரித்துக்கொண்டே போனது அங்கங்கு செமேண்டல் அமைத்திருந்த சோபாக்கள் அனைத்தையும் காதல் ஜோடிகளே ஆக்கிரமித்திருந்தனர் .. வெளி ஊர்களிலிருந்து சென்னையை சுற்றி பார்க்க வருபவர்கள் மட்டும் ஆர்வத்துடன் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்துகொண்டிருந்தனர் .. காதல் ஜோடிகள் அவர்குலடைய எதிர் காலத்தை பற்றி பேசுவதற்கும் , சிலர் நிம்மதியாக தூங்குவதற்கு மட்டுமே வந்திருந்தனர் .. சிலர் சைக்கிளகளிலும், பள்ளிகளில் இருந்து வந்துள்ள சிறுவர்கள் battery காரிலும் சத்தம் போட்டுகொண்டே சுற்றி பார்த்து கொண்டிருந்தனர் . ஜூவில் நடந்தே முக்கால் வாசி விலங்குகளை பார்த்தேன் வெயில் அதிகமானது , பசியும் எடுக்க ஆரம்பித்தது , பார்த்த வரைக்கும் போதுமென்று வந்த வழியில் திரும்பினேன் ... காலையில் உட்கார்ந்திருந்த இடத்திலே அவர் இப்போலோதும் உட்கார்ந்திருந்தார் ,டைரியில் ஏதோ கவிதை எழுதுவது போன்று தோன்றியது ..
அவருக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு சோபாவில் உட்காந்து டிபன் boxai திறந்து சாப்பிட தொடங்கினேன் .. நான் அவரை பார்பதை உணர்ந்த அவர் என்னை திரும்பி பார்த்தார் நான் வேறு பக்கம் பார்த்துவிட்டு சாபிட்டு கொண்டிருந்தேன் .. அவர் எதிரில் நிறைய மரங்களும் , தரையில் காய்ந்த குசிகள் மட்டுமே இருந்தன .. அதை பார்த்து விட்டு தன்னுடைய டைரியில் ஏதோ எழுதினார் .. நான் சாப்பிட்டு முடித்து விட்டு வாட்டர் bottilai எடுத்தேன் , அவர் என்னிடம் பாஸ் கொஞ்சம் தண்ணி தரிங்கலானு கேட்டாரு நானும் இந்தாங்க என்று அவரிடம் குடுத்தேன் அவர் என் அருகில் வந்து அமர்ந்தார் .. என்ன எழுதுறிங்க என்று கேட்கலாமென்று தோன்றியது அனால் அவர் மூஞ்சில அடுச்சமதிரி எதாவது சொல்லிடுவாரோனு நெனச்சு silenta இருந்துட்டேன் .. படிச்சிட்டு இருகிங்கலன்னு கேட்டாரு ? ஆமா final year ece nu சொன்னேன் .. இங்க எப்டி கொள்ளேக கட் ah?நு கேட்டாரு .. நா சிரிச்சேன் .. ஏன்நு கேட்டாரு ?. சும்மா போர் அடிச்சிச்சு அதான் .. கஷ்டப்பட்டு வீட்ல பணம் கட்டி, சமைச்சு காலேசுக்கு போக சொன்ன நீங்க இங்க வந்து சாப்டுட்டு வேடிக்க பாத்து கிட்டு இருகிங்கனு தூரத்தில் இருந்த மரத்தை பார்த்தவாறே கேட்டார் .. நான் எதுவும் சொல்ல முடியாமல் தூரத்தில் இருந்த மரத்தை பார்த்து சிரித்தேன் .. என்னப்பா anna universitya விட ரொம்ப கஷ்டமான கேள்விலாம் கேகுரனொன்னு கேட்டாரு ?. ஒன்னும் சொல்லமுடியாம தூரத்தில் இருந்த மரங்களை பார்த்து கொண்டே சிரித்தேன் . . நானும் என்கிநீரிங்க்தான் படுசேன் கம்ப்யூட்டர் sciencenu சொன்னாரு .. அறியர் இருக்கானு கேட்டாரு ? இல்லன்னு சொன்னேன் .. பரவா இல்லையே 10 15nu சொல்லுவேன்னு எதிர் பாத்தேன் என்றார் . காலேஜ்ல ரொம்ப போர் அடிக்குது அதான் இங்க வந்தேன்னு சொன்னேன் ...
போர் அடிச்சா இங்கயாப்ப வருவ .. இங்க வரவங்க ஒன்னு friendungaloda வருவாங்க இல்ல அங்க பாருன்னு பக்கதுல உட்காந்திருந்த காதல் ஜோடிய காட்டி அந்த மாதிரி வருவாங்க நீ என்னப்பா தனியா வந்திருகணு கேட்டாரு ? சின்ன வயசுல வந்தது அதுகபுரம் இப்பதான் இங்க வரேன் , புதுசா ரிலீஸ் ஆனா எல்லா படத்தையும் பாத்துட்டேன் அதான் வேற வழி இல்லாம இங்க வந்தேன்னு சொன்னேன் .. இப்ப கொஞ்சம் தெய்ரியம் வந்திடுச்சு என்ன சார் கவிதை எழுதிரின்களா காலைல இருந்து ஏதோ டைரில எழுதிரிங்கனு கேட்டேன் .. அவர் என்ன பாது எதுவும் சொல்லாம சிரிச்சாரு .. அது என்ன சார் தூரத்துல இருக்க அந்த மரங்கள பாத்துட்டு பாத்துட்டு எழுதுரிங்கனு கேட்டேன் .. இப்ப அவர் என்ன மாதிரியே மரங்கள பாத்து சிரிச்சாரு என்ன சார் இப்ப நா ரொம்ப கஷ்டமான கேள்விய கேட்டேன் போலன்னு கேட்டேன் .. அவர் சிரிசிகிடே இந்த சிரிப்பு மட்டும் இல்லைனா நாம எல்லாம் பல questionku என்ன பதில் சொல்லுவோம்னு யோசிக்கவே முடியலன்னு சொன்னார் ..அதுவும் கரெக்டுதான் என்றேன் .பக்கத்தில் இருந்த காதல் ஜோடிகள் சத்தமாக சிறிது பெசிகொண்டிருன்தனர் அதை கேட்டு அந்த பக்கம் திரும்பி பார்த்தேன் .இவங்கல்லாம் பாதா என்னப்பா தோனுதுனு கேட்டாரு ?. கடுப்பா இருக்கு சார் , இங்க குடும்பத்தோட வருபவர்களோட கூட்டம் கம்மியானதுகு இவங்கதான் முக்கியமான காரணம் என்றேன் .. எதுக்குப்பா இவ்ளோவ் காண்டு love failure ah? Lighta தாடி கூட வச்சிருக என்றார் .. அதெல்லாம் ஒண்ணுமில்ல சார் உங்களுக்கு இதெல்லாம் பாத்தா என்ன சார் தோணுது .. நானும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அப்படித்தான்பா உட்காந்திருந்தேன் ..Oh அப்படியா சரி அத விடுங்க அங்க தூரத்துல என்ன சார் பாகுரிங்க ,உண்மையா சொல்லனும்ன இந்த இடம் அவ்ளோவ் அழகா கூட இல்லையே என்ன அந்த டைரில எழுதுரிங்கனு கேட்டேன் .
இந்த இடம் அழகா இல்லன்னு உனக்கு தோணுது ஆனா எனக்கு இது ரொம்ப அழகா தெரியுது , சிலருக்கு அசின புடிக்கும் சிலருக்கு த்ரிஷாவ புடிக்கும் அந்த மதிரிதாம்ப ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு feelings.. அவர் சொன்ன dialogue ரொம்ப மொக்கையா இருந்துச்சு இதுல Sms படத்தோட dialogue வேறனு எனக்கு தோனுச்சு .. Work பன்றிங்கலானு கேட்டேன் ? ஆமா பக்கதுல பெருங்கலதுர்ல ஒரு software companyla வொர்க் பண்றதா சொன்னாரு .. சரி அப்படி என்னதான் சார் பாகுரிங்கனு கேட்டேன் . அத விடுப்பா அதெல்லாம் சொன்ன உனக்கு ரொம்ப மொக்கையா இருக்கும் அப்றம் உனக்கு collegeke போய் இருக்கலாம்னு தோணும்னு சொன்னாரு .. சும்மா சொல்லுங்க சார் எனக்கு time passa இருக்கும்ல ?. உன்னோட போதைக்கு நா ஊர்காவனு சொல்லி சிருசிட்டு ஒன்னுமில்லப்பா சும்மா எப்பயாவது ரொம்ப போர் அடுச்சா இங்க வருவேன் இந்த இடத்துல உட்காந்து பழைய நினைவுகள யோசிச்சிட்டு இருப்பேனு சொன்னாரு .. Oh love matteranu கேட்டேன் .. ஆமானு சிரிசிகிடே சொன்னாரு .. Oh அப்ப காதல் கவிதைதான் எழுதுரிங்கலானு கேட்டேன் .. Ha ha ha அதெல்லாம் இல்லன்னு சொன்னாரு .. அப்பறம் collegelaye ஆரமிச்சுடிங்கலன்னு கேட்டேன் ?. இல்லபா நா வேளைக்கு செந்த கம்பெனில அவளும் வொர்க் பண்ணா , அந்த கம்பெனில ரெண்டே பொண்ணுங்கதான் , அதுல ஒரு பொண்ணு அழகா இருந்தா இன்னுமா இவள கம்பெனில கரெக்ட் பண்ணாம இருபானுங்கனு நெனச்சேன் .. இருந்தாலும் அவ நடந்து போகும்போது திரும்பிருகும் போதெல்லாம் cha கொஞ்சம் முன்னாடியே கம்பெனில சேந்திருந்தா நமக்கு கிடைச்சிருக்கும்னு தோனுச்சு .. கொஞ்ச நாளுக்கு அபரம்தான் தெரிஞ்சுது அவ இன்னும் commit ஆகலேன்னு .. First கொஞ்ச நாள் அவ senior staffnaala என்கிட்டே சரியா பேசுல அப்றம் அவளும் நல்லா பேச ஆரம்பிச்சா ......
இருந்தாலும் அவளோட phone no. வாங்குறதுக்கு நா ரொம்ப கஷ்ட பட்டேன் .. அவ கிட்ட எப்படி phone no. கேட்கலாம்னு பல விதமா யோசிச்சு பாத்தேன் ஆனா கேட்கறதுக்கு தெய்ரியம் வரல .. அப்றம் ஒரு நாள் தெய்ரியமா அவ phone no. என்னனு கேட்டேன் அவ அதுக்கு என்னோட no. உங்ககிட்ட இல்லையா ?. உங்க no. என்கிட்ட இருக்கேனு சொல்லிடு ஒரு missed call தந்தா . அப்பறம் என்ன phone no. கெடச்சிருச்சு இதுகபுரம் சொல்லவா வேணும் அடுத்த 6 மாசத்துல லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம் .. அது எப்டி சார் ?.. ரொம்ப easypaa பொண்ணோட போன் no.rum அவ msg booster மட்டும் போட்டிருந்தா போதும் .. நாம என்ன சொன்னாலும் நம்புவாங்க .. அப்படியே வர forward msgellam கொஞ்சம் கலந்து feelinga பேசுன easya லவ் பண்ண வச்சுறலாம் .. இந்த காலத்துல காதல் ஆரம்பிகிரதுகு காரணமும் போன்தான் முடியறதுக்கு காரணமும் போன்தான் .. பொதுவா சொல்றிங்களா இல்ல பர்சனல் experience ah?nu கேட்டேன் .. அவர் ரெண்டும்தானு சொன்னாரு . லவ் பண்றதுக்கு முன்னாடி அவ கிட்ட இருந்து msg வந்தா உடனே reply பண்ணிட்டுதான் மறு வேலைய பாப்போம் அனால் லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் msgku reply பண்ற ஆர்வம் கொறஞ்சுடும் அது அப்படியே லவ் failurela கொண்டு போய் விட்டுடும் என்றார் . Ha ha researche பன்னிருபிங்க போல என்று சிரித்துகொண்டே சொன்னேன் ... ஹ ஹ ஹ ஹ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் ஒவ்வொரு saturdayum ஆபீஸ் half dayla முடுஞ்சபுரம் யாருக்கும் தெரியாம இந்த ஜூகு வந்துடுவோம் இவன்குல மாதிரிதான் நாங்களும் உட்காந்து இருந்தோம் அது என்னோட வசந்த கால வாள்கைபா அத நெனச்சுதான் இங்க வந்து அப்ப நாங்க பேசுனத எல்லாம் யோசிச்சு யோசிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன் . அடுத்தவாட்டி இங்க வரும்போது இதெல்லாம் படுச்சுபாதா சந்தோஷமா இருக்கும் ...
Oh இப்ப ஏன் சார் தனியா வந்திருகிங்க ? பொண்ணு வீட்ல தெருஞ்சுருசானு கேட்டேன் .. அதெல்லாம் இல்லபா போனால என்னோட காதலும் முடுஞ்சுருச்சு .. Oh அப்ப முன்னாடி நீங்க சொன்னது உங்க கதைதானா நீங்க ஏதோ பொதுவா சொன்னிங்கன்னு நெனச்சேன் .. அப்பா சொன்னது பொதுவாத்தான் சொன்னேன் என்று கூறி விட்டு தூரத்தில் இருந்த மரங்களை பார்த்தார் ... அவருடைய முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மறைந்து கண்களை சுருக்கி பார்த்தார் .. என்னாச்சு சார் பிரிஞ்சுடின்களா ?. என்று கேட்டேன் .. இல்லபாஸ் நாலு வருஷத்துக்கு முன்னாடி .... இப்பவும் நல்லா ஞாபகமிருக்கு காலைல officeku போனவுடனே அவ வந்துடாலானு பாத்தேன் வரல போன் பண்ணி பாத்தேன் switch offnu வந்துச்சு .. என்னோட friendu என்கிட்ட வந்து நேத்து accidentla அவ இறந்துட்டா அதனால இன்னிக்கு ஆபீஸ்ல எல்லோரும் அவ வீட்டுக்கு போயிருகாங்கனு சொன்னான் .. தொண்டை அடைத்தது அவன் பேசுவது எனக்கு கேட்கல கண்ணிலிருந்து நீர் வர தொடங்கியது மயங்கி கீழே விழ போனேன் என்னை என் friend தாங்கி புதுசு என்னாச்சுட நீ ஏன்டா இவ்ளோ feel பண்ற என்னாச்சுட உனக்கு என்றான் .. ஒண்ணுமில்லன்னு சொல்லிடு bath roomkulla ஓடுனேன் எவ்ளோ நேரம் அழுதேன்னு எனக்கே தெரியல .. வெளிய வந்து பைக்க எடுத்துகிட்டு வேகமா ஒட்டிட்டு போனேன் எங்க போறதுன்னு தெரியாம அழுதுகொண்டே வேகமா போனேன் .. நாங்க லவ் பண்ணது எங்க ஆபீஸ்ல யாருக்கும் தெரியாது .... சில வாரங்கள் கழிச்சு வாழ்கையை வாழ பிடிக்காமல் parentskaaga ஆபீசெகு போனப்ப அவ போன்ல பேசிகிட்டே railway lina cross பண்ணும்போது accident ஆகிடுச்சு அதுலதான் இறந்துடதா சொன்னாங்க .. அதை கேட்ட எனக்கு நடுங்க தொடங்கியது குற்ற உணர்ச்சியில் ....
எப்பவும் சாயந்திரம் வீட்டுக்கு போறவரைக்கும் என்னோட போன்ல பெசிகிடேதான் அவ போவா .. அன்னைக்கும் அப்படிதான் பேசிட்டு இருந்தா திடீர்னு கோர கோரணு சதம் கேட்டுச்சு அப்றம் போன் கட் ஆகிடுச்சு ..மறுபடியும் போன் செஞ்சப்ப switch offnu வந்துச்சு .. Charge illama switch off ஆகிடுச்சுனு நெனச்சு நானும் விட்டுட்டேன் .. அனால் அப்பறம்தான் தெரிஞ்சுச்சு அந்த accidentuku நானும் ஒரு வகைல காரணம்னு .... சில நொடிகள் எதுவும் பேசாமல் தூரத்தில் பார்த்து கொண்டே இருந்தார் .. என்னை பார்த்து மறுபடியும் பழைய சிரிப்புடன் இதெல்லாம் நா ஏன் உன்கிட்ட சொல்றனு யோசிகிரள .. முன்பு என்னிடம் இருந்த சிரிப்பு இப்பொழுது இல்லை அமைதிக அவரை பார்த்து கொண்டே இருந்தேன் .... எங்க காதல் விஷயம் எங்க ரெண்டு பேரையும் தவிர இந்த பார்க்குக்கு வர சிலருக்கு வேணும்னா தெரிஞ்சிருக்கலாம் எங்க விஷயத்த என்னால ஆபீஸ் friendunga கிடையும் சொல்ல முடியாது .. அனால் இத யார்கிடயாச்சு சொன்ன கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு தோனுச்சு அதான் unkita சொன்னேன் என்றார் .. என்னபா ரொம்ப மொக்க போட்டுடநானு கேட்டாரு .. இல்லைங்கற மாதிரி தலைய அசச்சு கஷ்டப்பட்டு சிரிச்சேன் .. அவருடைய போன் ringtone அடித்தது எடுத்து பேசிய அவர் சாரி பா urgent byenu சொல்லிடு கேளம்பிடார் .. நா அங்கேயே உட்காந்து தூரத்துல இருந்த மரங்கள பாத்துகிட்டு இருந்தேன் .. காலேஜ் முடியிற நேரமானது பஸ்சில் அம்பதுருகு வந்து இறங்கினேன் .. Eppavum பஸ்சில் இருந்து இறங்கி பைக்கில் வீடு வரைக்கும் பாட்டு கேட்டு கொண்டே செல்வேன் ……… அன்று முதல் busai விட்டு இறங்கியதும் பைக்கில் செல்லும்போது head setai கழற்றி விட்டு செல்ல தொடங்கினேன் .......................... நா காலேஜ்ல ஏதாவது ஒரு நல்ல விஷயத்த தெருஞ்சுகிடநானு யோசிச்சு பாத்தேன் , நா அங்க கத்துகிட்ட எதுவுமே நல்ல விஷயமில்ல …….. black boardum chock-piecum மட்டும்தான் உலகமா அதையும் தாண்டி ஒரு அழகான , அசிங்கமான , ஆச்சர்யமான , சோகமான , சந்தோஷமான பல உலகமிருக்கு ……. அந்த உலகத காலேஜ்ல கத்துக்க முடியாது…
....................... இது ஒரு உண்மை கதை...............................................................
-கிஷோர் குமார்

No comments:

Post a Comment