Tuesday 3 July 2012

" "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "


அன்னகி சாயந்திரம் 6 மணி இருக்கும் என்னோட friend போன் பண்ணி ரிசல்ட் வந்துடுச்சுடா பாத்து சொல்லுனு சொன்னான்.. என்னதான் அண்ணா university மேல நம்பிக்கை  இருந்தாலும்  கொஞ்சம் பயத்தோடையே  annaa university website ஓபன்  பண்ணேன்  ஆனா  எல்லாரும்  ஒரே  நேரத்துல  ரிசல்ட் பகுரனால  website load ஆகிகிட்டே  இருந்துச்சு  அதுகுள்ள  என்னோட  இன்னொரு  friend all clear da ******* நாயேன்னு    கொஞ்சம் கெட்ட  வார்த்தைல  ஒரு  மெசேஜ்  அமுச்சிருந்தான்  அப்பதான்  எனக்கு இதய துடிப்பே சரியாச்சு  எப்டியோ  நானும்  ஒரு engineer ஆகிடேனு face bookla statuesla போட்டேன். முன்னாடி லீவ்ல இருந்தபயாச்சு யாராச்சு என்ன பண்றேன்னு கேட்டா exaam எழுதி இருக்கேன் இன்னும் ரிசல்ட் வரலேன்னு சொல்லிக்கிட்டு திருஞ்சேன் ஆனா இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம்  ஆச்சு என்ன பன்றதுனே தெரியல , போற வரவன்லாம் ஏதோ பஞ்சாயத்து t.v.ya நோன்டுரமாதிரி இன்னும் வேலைக்கு போகலையான்னு கேட்டு சாவடிகிரானுங்க. நேத்து அப்டிதான்  ஒரு  கல்யாணத்துக்கு  குடும்பத்தோட  போனோம் அப்ப  இன்னொரு  குடும்பத்த  பாத்தோம் .அந்த  குடும்பத்துல  இருக்கவங்க  பேசுறதுக்கு  எவ்ளோவோ  விஷயம்  இருக்கு  ஆனா  அதெல்லாம்  விட்டுட்டு  என்  பையனுக்கு  tcs ல  வேலை  கிடசிடுசுனு  பெருமையா  சொன்னாரு .பக்கதுல  நானும்  என்னோட  அப்பாவோட  நின்னுகிட்டு இருந்தேன் .எங்க  அப்பாவாளையும்  எதுவும்  பேச  முடியல  என்னாலையும்  எதுவும்  பேச  முடியல என்னோட  அப்பா  சின்னதா  என்ன  ஒரு  பார்வை  பாத்துட்டு  வேற  விஷயம்  பேச  ஆரம்பிசிடாறு .எங்க  நா  என்ன  பண்றேன்னு  கேட்டுடுவாங்கலோனு  அவங்க  போற  வரைக்கும்  மனசு  பயந்து  கிட்டே  இருக்கும் .எந்த  காரணமும்  இல்லாம  அந்த  french beard வச்சுகிட்டு  வெள்ளையா  broiler கோழி   மாதிரி இருக்க  tcs பையன்  மேல  உள்ள  இருந்து  அப்டி  ஒரு  கோவம்  வரும் .ஏண்டா  நீங்க  வேளைக்கு  சேருங்க  பல  லட்சம்  சம்பாருச்சு  என்ன  கருமத்தையோ  வாழ்ந்து  தொலைங்கடா  எங்ககிட்ட  ஏண்டா  சொல்றிங்க , நாங்க  என்ன  வச்சுகிட்டா  வஞ்சன  பண்றோம்  எங்களுக்கு  சேர்ந்தாபுல  நாலு  வார்த்த  கூட  englishla பேச  வராது , போன்ல  மெசேஜ்  அனுப்பும்போது  கூட  dictionary mode off pannitu  இங்கிலீஷ்  fontla தமிழ்ல எழுதியே  தமிழா  வாழ  வச்சு  கிட்டு  இருக்கோம் .சரி  இப்டி  அசிங்க  படறதுக்கு  எதாச்சு  வேலைக்குதான்  போலாம்னு  நெனச்சா  எந்த  கம்பெனிய  பாத்தாலும்  wanted b.e. Freshers skilled in java or .net nu எழுதி  இருக்கு .அந்த  coursunga படிகிரதுகு  35000 ருபாய்  ஆகுமாம் . அப்பறம்  என்ன ********** b.e நாலு  varusham  நாங்க  படுச்சோம்னு சொல்ல  மாட்டேன்  collegeku போனோம் .Maila ஓபன்  பண்ணா  apply for this job nu தினமும்  ஒரு  10 மெயில்  வருது , click பண்ணா  300rs கட்டி  online test attend பண்ணுங்கனு  சொல்றாங்க .டெஸ்ட்  எழுதி  பாஸ்  பண்ற  லெவெல்ல  இருந்தா  நா  campus interviewlaye பாஸ்  ஆகிருபனே..

அப்ப உனக்கு  என்ன  கருமந்தாண்டா  தெரியும் ,எதுவும்  theriyaadhu  ஆனா  வேலை  குடுக்க  மாட்டிகிராங்கனு கம்பெனி  காரனுங்கள  திட்டுற ,நல்லா  படுச்சு  place ஆனவங்களையும் திட்டுரனு  நீங்க  நினைக்கலாம் .அதுதாங்க  எனக்கும்  தெரியல  இன்ஜினியரிங்  படுச்சா  உடனே  வேலை  கிடைகும்னானுங்க  சரின்னு  சேர்ந்து  படுச்சேன் இப்ப  அதே நாய்ங்க இன்னும்  வேலைக்கு போகலையான்னு  கழுவி  கழுவி  ஊதுறாங்க . நம்ம  கூட  schoola பக்கத்துலையே  உட்காந்து  hotelku spelling தெரியாம  hotalnu எழுதி  டீச்சர்  கிட்ட  துப்பு  வாங்குனவன்லாம்  ரெண்டு  கம்பனில  place ஆகிட்டு  எதுல  போறதுன்னு  தெரியல  மச்சி  confusionaa இருக்கு  நீ  என்ன  சொல்ற  மச்சின்னு  கேக்குறான் .. நல்ல  வேல  அன்னிக்கு  என்  கைல கத்தி  இல்ல  இருந்திருந்தா  innerathuku  நா  புழல்  jailla சுய  சரிதை  எழுதிட்டு  இருந்திருப்பேன் .. அவன்  அப்பன்கிட்ட  காசு  இருந்துச்சு  10latcham கட்டி  பெரிய  காலேஜ்ல  சேத்து  விட்டாரு .. நம்ம  வீட்ல  படிக்கிறபுல்ல எங்க  படுசாலும் நல்லா  படிக்கும்னு  councellingla ஏதோ  ஒரு  காலேஜ்ல  சேத்து விட்டாரு .. சரி  உன்னோட  காலேஜ்ல  இருந்து  மட்டும்  பசங்க campusla place ஆகலையா   நீ  ஒழுங்கா  படிக்காம  எப்ப  பாத்தாலும்  படம்  பாத்துகிட்டு  கதை  எழுதிட்டு  இருந்தா  எப்டி  கிடைக்கும்னு  நீங்க  நினைக்கலாம்  ஆனா  interviewla H.R. சாப்டுனு குடுத்த வடை வாங்கி சாப்டதுகேல்லாம் reject பண்ணு  வாங்கனு  நா  என்ன  கனவா  கண்டேன் .. காலைல  இருந்து பையன்  wait பண்றான்  கடைசி  ஆளா  interviewku வந்திருக்கானே  வடை  சாப்டுட்டு  தெம்பா  பதில்  சொள்ளடும்னு  பாசமா  குடுதாருனு  நெனச்சு  நம்பி வாங்கி சாப்டேன் . வெளிய வந்து கேட்டா rejectednu சொல்றாங்க. ஒரு சின்ன வடை தின்னது குத்தமாங்க , ஆனா  ஒன்னு  அந்த  வடை  குடுத்தவன்  தமிழ்  நாட்டுல  எந்த ஜில்லால இருந்தாலும்  சரி  அவன்  சாவு  என்  கைலதாண்டி   என்  கைலதான்    .சரி  அதெல்லாம்  விடுங்கங்க  இப்ப  நா  என்னதான்  பண்றது   tell me?

இப்ப  எழுதினத  கதைன்னு  சொல்றதா  இல்ல  ஏதோ  நாயி  வேலை  கிடைக்காம  பொலம்பிகிட்டு  இருக்குனு  சொல்றதா .. என்ன  வேணும்னாலும்  நெனசுகங்க ஆனா  நா  என்ன  எழுதி  அமுட்சாலும்   படிகிரிங்க  பாருங்க  அதுதான்  உங்க  beauty, ஆனா  உங்களுக்கும்  இன்னும்  வேலை  கிடைக்கலன்னு  நினைக்கும்போதுதான்  மனசு  அப்டியே  லேசாகி  சந்தோஷத்துல  வானத்துல  பறக்குற  மாதிரி  இருக்கு .. நீங்களும்  என்ன  மாதிரி  வெட்டியா  உட்காந்து  tv பாத்து  கிட்டுதான்  இருபின்கன்ற நம்பிக்கைலதான்  தினமுன்  நா  நிம்மதியா  10 மணி  வரைக்கும்  தூங்க  முடியுது .. அந்த  மரியாதையா  காபாதிகிங்க  அம்புடுதான்  சொல்லுவேன் .. "இது  கதை  அல்ல  ஒரு  இன்ஜினியரிங்  பட்டதாரியின் புலம்பல் "

"என்னை போன்று படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல்  தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு  இக்கதையை சமர்பிக்கிறேன்"

" யாராச்சு வேலை இருந்தா சொல்லுங்கபா "
-கிஷோர் குமார் .

No comments:

Post a Comment