Saturday 26 January 2013

“சாந்தி – தியேட்டர் SUBWAY”

சென்னையோட  ரொம்பவும்  முக்கியமான  பரபரப்பான  ரோடு  mount road, அந்த  ரோட்ல  சரமாரியா  பஸ்சு  பைக்கு   ஆட்டோன்னு  எப்பவும்  போய்கிடேதான் இருக்கும் , பல  ஊர்  மக்களும் , வெளி  நாட்டவர்களும்  அங்க  அதிகமா  இருப்பாங்க  அதுக்கு  காரணம்  அந்த  ரோடின்  இருபுறங்களிலும்  இருக்கும்  உயர்ந்த  கட்டிடங்களும் , மால்களும்  சினிமா  தியேடர்களும்தான்.. அன்னகி  சாயந்தரம்  6 மணி  இருக்கும்  மவுண்ட்  ரோட்ல  இருந்த  சாந்தி  தியேட்டர்  ஸ்டாப்  கிட்ட  இருந்த  subwaya நோக்கி  மக்கள்  கூட்டம் நடந்து  சென்றனர் .. அங்க  நடந்து  வருபவங்கள்ள   நானும்  ஒருத்தன் , நா  சென்னைக்கு  வந்து  ஒரு  மாசம்தான்  ஆகுது , இந்த  subwaya என்னோட  வாழ்க்கைல  என்னிக்கும்  மறக்கமாட்டேன் .. ஒரு  மாசத்துக்கு  முன்னாடி  சென்னைக்கு  வந்தேன் , தமிழ்  நாடுல  இருக்க  மத்த  மாவடங்கள்ள  வசிக்கிற  மக்கள்  எல்லாருக்கும் சென்னைய  பத்தி  ஒரு  கனவிருக்கும் .. சென்னைக்கு  வந்த  முதல்  கொஞ்ச  நாட்கள்  இந்த  சென்னை  மக்களை  பாக்கும்போது  எனக்கு  ரொம்ப  விநோதமாவும்  வியப்பாவும்  இருந்துது  , நாங்க  எங்க  ஊருல  வாழ்ற  வாழ்கையே  வேற , ஆனா  எந்த  ஊர்ல  இருந்து  வந்தாலும்  வந்த  ஒரு  வாரத்துலையே சென்னைக்கு  தகுந்தமாதிரி  அவங்கள  மாத்துறதுதான் இந்த  சென்னையோட  specialality.. நா  சென்னைல  என்னோட  தூரத்து  சொந்த  கார  அண்ணன்  மூலமா  ஒரு  கம்பனிக்கு interviewku வந்திருந்தேன் .. அந்த  அண்ணனுக்கு  வேற  வேலை  இருந்தனால  நா  உனக்கு  வழி  சொல்றேன் , உனக்கு  எதாச்சு  doubt இருந்தா  போன்  பண்ணுனு  சொல்லிட்டு என்ன  அவர்  வீட்டு  பக்கதுல  இருந்த  பஸ்  ஸ்டாப்ல  இறக்கி  விட்டுட்டு , இங்க  இருந்து  23c பஸ்  புடுச்சு போய் சாந்தி  தியேட்டர்  ஸ்டாப்ல  இறங்கிடு  அங்க  இருக்க  subwayla இறங்கி  ரோட  கிராஸ்  பண்ணி  அந்த  பக்கம்  போய்டு  அங்க  இருந்து  பஸ்  no. கரெக்டா  தெரியல , திருவேற்றியுர்னு போட்டு  பஸ்  வந்தா  அதுல  போகுமான்னு  கேட்டுட்டு  ஏறுன்னு  சொன்னாரு .. 
 
சரின்னு  தலையாடுனேன் .. இத  செலவுக்கு  வச்சுகனு 100rubaa நோட்ட  பாக்கெட்ல  இருந்து  எடுத்தாரு , இல்லனா  வேணாம்னா வசிருகேனு  சொன்னேன்  அவர்  பரவால  வச்சுகனு  சொல்லி  என்னோட பாக்கெட்ல  வைக்க  வந்தாரு , நா  நகந்து  போயிடு  வேணாம்னே  இங்க  பாருங்கன்னு  சொல்லிடு  என்னோட  pantu சைடு  பாக்கெட்ல இருந்த  பர்ஸ எடுத்து  காட்டுனேன் .. பர்ஸ பின்னாடி  பாக்கெட்ல  வைக்க  வேண்டியதுதான்னு  கேட்டாரு , அங்க  வச்சா  உட்காரப்ப  கொஞ்சம்  பிரச்சனையா  இருக்குனு  சொன்னேன்  அவர்  சிரித்தபடி , சரி  interview முடுஞ்சபுரம்  போன்  பண்ணுனு  சொல்லிடு  கெலம்புனாரு.. நா  அங்க  இருந்த  பஸ்  ஸ்டாப்ல  உடகாந்து  23c பஸ்க்காக wait பண்ணிட்டு  இருந்தேன் .. எனக்கு  பக்கதுல  ஒருத்தர்  headsetla பாட்டு  கேட்டுட்டு  இருந்தார் .. இன்னொரு  பக்கதுல  ஒருவர்  புத்தகம்  படித்தபடி  உட்காந்திருந்தார் .. சிலர்  வேர்க  வியர்க்க  பஸ்சுக்காக  நின்றபடி  காத்து  கொண்டிருந்தனர் .. அந்த  நேரத்துக்கு  எல்லா  பஸ்சும்  ரொம்ப  கூட்டமா  வந்துச்சு .. பஸ்  ஸ்டாப்ல  நின்னுகிட்டு  இருந்தவரு  சில  கேட்ட  வார்த்தைகளில்  அரசியல்  வாதிகளை  திட்டி  விட்டு  நம்ம  கிட்டே  எல்லா  வரியும் வாங்கிக்கிட்டு  அவனுங்க  நிம்மதியா  AC கார்ல  siren வச்சுகிட்டு போவானுங்க , நாம  மட்டும்  பணத்தையும்  குடுத்துட்டு  பஸ்ல  படிகட்டுல  தொங்கிட்டு போனும் , அதான்  அவ்ளோவ் கொள்ளயடிகிரானுன்களே  extraa பஸ்  உட்டா  என்னவாம்  என்று  ஆவேசமாக  பேசினார் , பக்கத்தில்  இருந்த  சிலர்  அவர்  சொல்வது  சரி  என்பதுபோல்  தலை  அசைத்தனர் .. அட  பாவிங்களா  பஸ்ல  நின்னுகிட்டு  போறதுக்கு  இவ்ளோவ் பேசிரின்களே இன்னும்  எங்க  ஊருக்கு  பஸ்ஸே  விடல  அப்ப நாங்க  எவ்ளோவ்  பேசணும்னு  நெனச்சேன் .. ஒவ்வொரு  வாடியும்  பஸ்  வரதை  பாத்தா  உடனே  எந்துருச்சு  அது  23c ah nu பாத்தேன் .
 
ஆனா  வேற  நம்பர்  போட்ட  புச்சுங்கதான்  வந்துச்சு . அடுத்து  ஒரு  பஸ்  வந்ததும்  எழுந்து  சென்று  பார்த்தேன்  ஆனால்  அதுவும்  23c யாக  இல்லை .. திரும்பி  வந்து  சீட்ல  உட்காரதுகுள்ள  வேறு  ஒருவர்  அந்த  சீட்ல  உட்காந்து  கொண்டார் .முன்னாடி  என்  பக்கத்தில்  உட்காந்திருன்தவர்  இதை  கவனித்து  விட்டு  என்னை  பார்த்து  சிறியதாக  சிரித்தார்  நானும்  லேசாக  சிரித்து  விட்டு  பஸ்  வருதான்னு  பார்த்தபடி  தள்ளி  நின்றேன் .. ஒரு  பஸ்  வந்தது  அதுவும்  23c யாக  இல்லை .. முன்பு  நான்  உட்காந்திருந்த  சீட்டில்  அமர்ந்திருந்தவர்  எழுந்து  அந்த  பஸ்சில்  ஏறி  பொஇடாரு .. நா  மறுபடியும்  அதே  இடத்துல  போய் உட்காந்தேன் .. முன்பு  என்னை  பார்த்து  லேசாக  சிரித்தவர் , என்னை  பார்த்து  பெசன்ட்  நகர்  பஸ்சுக்கு  வெயிட்  பன்றிங்கலானு  கேட்டாரு .. நா  23c சாந்தி  தியேடர்னு சொன்னேன் .. அதுதான்பா  23c கடைசியா  பெசன்ட்  நகர்குதான்  போகும் , நானும்  அந்த  பஸ்சுகாகதான் வெயிட்  பண்றேன்  ஆனா  அந்த  பஸ்  தவிர  வேற  எல்லா  பஸ்சும்  போய்டுச்சு  என்றார் .. ஓஹ்  அப்டியா  சார்  நா  சென்னைக்கு  புதுசு  அதான்  சார் .. என்  கையில்  இருந்த  file பார்த்து  விட்டு , interviewvaa paa nu? கேட்டாரு .. ஆமா  சார் .. எப்பவும்  இந்நேரத்துக்கு  2 பஸ்சாச்சு வந்திருக்கணும்  ஏன்  latenu தெரியல  கடைசில  2 புச்சு  ஒரே  நேரத்துக்கு  stopku வரும்  பாரேன்  என்றார் .. நான்  லேசாக சிரித்து விட்டு  ரோடை பார்த்து  கொண்டிருந்தேன் .. அடுத்து  வேறு ஒரு  பஸ்  வர என்னையும்  பக்கத்தில்  இருந்தவரையும்  தவிர  மத்த  எல்லாரும்   ஏறி  போய்டாங்க .திடீரென்று  எங்கள்  சீட்டுக்கு  பின்னாடி  இருந்து  சத்தமாக  இங்கிலிஷில்  யாரோ  கத்தும்  மியூசிக்  கேட்டது ,திரும்பி  கீழே  பார்த்தல்  ஒரு  கருப்பு  கலர்  சாம்சுங்  போன்  கீழே  கிடந்தது , எழுந்து  போய் அதை  எடுபதற்குள்  மியூசிக்  நின்றது ..
 
என்  பக்கத்தில்  உட்காந்து  கொண்டிருந்தவர் , அந்த  பக்கம்  ஒரு  பொண்ணு  உட்காந்திருந்துசுல  அதோடதுதானு  நினைகிறேனு  சொன்னாரு .. Black chudidhaar போட்டு  கிட்டு  ஒரு  பொண்ணு  உட்காந்திருன்தது  எனக்கும்  ஞாபகம்  வந்துச்சு .. என்ன  சார்  பண்றதுன்னு  அவர்  கிட்ட  கேட்டேன் .. கடைசியா  யாருக்கு  போன்  செஞ்சிருக்கோ  அந்த  no.ku போன்  பண்ணி  சொல்லுப்பா , இல்லாட்டி  அந்த  பக்கம்  ஓரமா  வச்சிருப்பா  நமக்கு  எதுக்கு  இந்த  பொது  சேவைலாம் என்று  சொல்லிட்டு பஸ்  வருதா  என்று  பார்த்தார் .. நா  போன்ல  contacts எங்க  இருக்குனு  தேடி  பாத்தேன் , எங்க  ஊர்ல  நா  nokia1100 போன்  மட்டும்தான்  பாத்திருக்கேன்  அது  கூட  என்னோட  friendudhudhaan , இந்த  samsung போன்ல  எனக்கு  எப்டி  contacts போய்  பாக்குரதுனே  தெரியல , ஏதோ  ஏதோ  அமுக்குனதுல  ஒரு  போட்டோ  ஓபன்  ஆச்சு  அதுல  அந்த  black chudidhaar போட்டிருந்த  பொண்ணுதான்  இருந்தா.. நா  பாக்குறத  என்  பக்கதுல  இருந்தவர்  பாத்துகொண்டே  இருந்தார் , எங்க  எனக்கு  போன்  operate பண்ண  தெரியலேன்றத  அவரு  கண்டு  பிடிசிருவாரோனு  நெனச்சு  போன்  பக்கத்து சீட்ல  வச்சுட்டு  பஸ்  வருதான்னு  பாத்தேன் .. திடீர்னு  அந்த  போன்ல  இருந்து  சத்தமா  இங்கிலீஷ்  பாட்டு  கேட்டுச்சு , எடுத்து  பாத்தேன்  ரேணுகா  callingnu வந்துச்சு .. Attend பண்ணி  ஹெல்லோனு  சொன்ன  உடனே , சார்  இது  என்னோட  போன்தான்  எங்க  சார்  இருக்குனு  பதட்டதோட  ஒரு  பொண்ணு  குரல்  கேட்டுச்சு .. பஸ்  ச்டோப்லாதான்  கீழ  கடந்துச்சுனு சொன்னேன் , சார்  ஒரு 15 minutes வெயிட்  பண்ண  முடியுமா  சார்  நா  வந்து  போன்  வாங்கிகிறேனு  சொன்னா , interviewku லடே  ஆகிற்றுகுனு  தெரிஞ்சாலும்  ஒரு  பொண்ணு  ஹெல்ப்  கேட்கும்போது  முடியாதுனு  சொல்ல  நூத்துல  99% பசங்களால  முடியாது  , என்ன  பண்றது  நானும்  அந்த  99% பசங்கள  ஒருத்தன் , சரி  வாங்கனு  சொன்னேன்  
 
 
அவ  thanksnu சொல்லிட்டு  போன்  கட்  பண்ணிட்டா .. என்ன  தம்பி  என்ன  சொல்றாங்கன்னு  என் பக்கதுல  உட்காந்துட்டு  இருந்தவரு  கேட்டாரு .. பக்கத்துலதான்  இருக்காங்களாம்  வந்து  வாங்கிகிறேனு  சொன்னாங்கனு  சொல்லிகிட்டு  இருக்கும்போதே , 23c பஸ்  வந்து  கரெக்டா  நின்னுச்சு , என்  பக்கதுல  இருந்தவர்  அந்த  சனியன  தூக்கி  போட்டுட்டு  வந்து  ஏறுங்க  தம்பி  , அடுத்த  பஸ்  எப்ப  வரும்னு  சொல்ல  முடியாதுனு  சொல்லிகிட்டே  பஸ்ல  போய் எருனாறு .. மனசு  ஒரு  பக்கம்  போய்  பஸ்ல  ஏறி  போ  நு  சொல்லுச்சு  இருந்தாலும்  பாவம்  கஷ்டப்பட்டு  போன்  வாங்கி  இருப்பாங்க , அது மட்டும்  இல்லாம  அந்த  பொண்ணு  போட்டோல  கொஞ்சம்  அழகா  வேற  இருந்துச்சு  அதனால  பஸ்ல  ஏறாம உட்காந்துடே  இருந்தேன் ,  பஸ்ல  எறுனவரு என்ன  கேவலமா  பாத்தாரு  சத்தியமா  நாலாம்  உருபடவே  மாட்டேனுதான்  அவரு  நெனசுருபாரூனு  எனக்கு  அவர்  பார்வைலையே  புருஞ்சுசு .. இருந்தாலும்  மனுஷன்  மனசுக்குள்ள  இருக்கும்  நப்பாச  யார  விட்டுச்சு .. நேரம்  ஆக ஆக அந்த  பஸ்லயே  ஏறி  போய்  இருக்கலாம்னு  தோன  ஆரம்பிசுச்சு .. அவ  மறுபடியும்  போன்  பண்ணி  பக்கதுல  வந்துட்டேனு  சொன்னா .. எனக்கு  கடுப்பா  இருந்துச்சு .. அடுத்த  23c எப்ப  வரும்னு  யோசிச்சிகிட்டே வேடிக்க பாத்துகிட்டு  இருந்தேன் .. ஒரு  ஆட்டோ  எனக்கு  முன்னாடி  வந்து  நின்னுச்சு  அதுல  இருந்து  அந்த  பொன்னும்  அவளோட  friendum இறங்கி  வந்தாங்க .. ரொம்ப  thanks சார்  nu சொல்லிகிட்டே  என்  கிட்ட  வந்தா  நா  போன அவ  கிட்ட  தந்தேன் .. அவ thanksnu இன்னொருவாட்டி  சொல்லிடு  அதே  ஆட்டோல  கிளம்பிட்டா .. ச்ச இந்த  ரெண்டு  வார்தைகாகவா  இவ்ளோவ் நேரம்  வெயிட்  பண்ணோம்னு  தோனுச்சு .. ஆனா  தொலஞ்சு  போன  போன  தேடி  கண்டு  பிடிச்சு  குடுக்கறதுக்கு  நிச்சயமா  லவ்வெல்லாம்  பண்ண  மாட்டாங்கனு  எனக்கும்  தெரியும்  ஆனா  பொதுவா  நம்ம  தமிழ்  சினிமால  இந்த  மாதிரி ஒரு  சீன்  வந்துச்சுனா  அடுத்த  scenela அவங்க  ரெண்டு  பேருக்குள்ளையும்  லவ்  வந்துடும் , நா  அவள பத்தியே  நினைக்கிற  மாதிரி  அவளும்  இப்ப  என்ன  பத்திதான்  நெனச்சு  கிட்டு  இருப்பான்னு  நானே  நெனச்சு  சிரிச்சிகிட்டேன் ஆனா  நஜதுல  அதுகெல்லாம்  வாய்ப்பே  இல்லன்னு  எனக்கும்  தெரியும்  என்ன  பண்றது  நாமலாம்  சினிமா  பாத்துதான வாழ்க்கைல  முக்கால்வாசி  விஷயங்கள  கத்துகுறோம்.. 
 
கொஞ்ச  நேரம்  அந்த  பொண்ண  பத்தியே நெனச்சு  கனவு  கண்டுகிட்டு  இருந்தேன் .. திடீர்னு  23c பஸ்  கூட்டமா  வந்து  நின்னுச்சு .. ஏற்கனவே  படிகட்டுல  நின்னுகிட்டு  இருந்தாங்க .. நானும்  அந்த  பஸ்ல  பொய்  ஏறுனேன் , படிகட்டுல  ஏறி  உள்ள  போக  try பண்ணேன்  ஆனா  என்னால  ரெண்டு  படிக்கு  மேல  ஏற  முடியல .. சாந்தி  தியேட்டர்னு  சொல்லி  100 ருபாய்  நீட்டுனேன் , அந்த   கண்டக்டர்  என்ன  கோல  வெறியோட  மொறைச்சிட்டு  6 ரூபா  டிக்கெட்கு 100 ருபாய்  நீடுறியே , சில்ற  இருக்கா  பாருன்னு  சொல்லிட்டு  முன்னாடி  ஏறுனவன்களுக்கு டிக்கெட்  குடுக்க  போனாரு .. அந்த  கண்டக்டர்  அந்த  பக்கம்  போனப்புறம்  பக்கதுல  இருந்தவரு   சில்ற  வச்சிருபாங்க  சார்  எடுத்து  குடுக்கறதுக்கு  வலிக்குதுனு  சொன்னாரு ..நானும்  ஆமாங்கற மாதிரி  தலை  அசைசிட்டு  பாக்கெட்ல  இருந்த  ஒரே  பத்துரூபா  நோட்ட  எடுத்து  பாத்தேன் …
 
படிகட்டில்  தொங்கி கொண்டிருந்த  ஒருவர்  கை  நடுங்கியபடி  கம்பியை  பிடித்து  கொண்டே  உள்ள  போங்க நிக்க  முடியலன்னு  கத்துனான் .. உள்ள  மட்டும்  எங்க  இடமிருக்கு  , தொங்க  முடியாதுனு  தெருஞ்சா  எதுக்கு  ஏறுன  அடுத்த  பஸ்ல  வர  வேண்டிதான  என்றார்  ஒரு  40 வயது  மதிக்க  தக்கவர் .. தொங்கி  கொண்டிருந்தவனால்  பேச  முடியவில்லை  பல்லை  கடித்தபடி  கையை  மாற்றி  மாற்றி  பிடித்து  கொண்டு  வந்தான் , கடைசி  படிக்கு  மேல்  படியில்  நின்று  கொண்டிருந்த  ஒரு  கல்லூரி  மாணவன்  நீ  மேல  ஏறுனா  அவனுங்க  கிட்ட  சொன்னாளாம்  வேலைக்காகாது  புடிச்சு  மேல  தள்ளி  விடு  என்று  சொல்லி  கொண்டே  என்னை  உள்ளே  தள்ளினான் , நான்  பக்கத்தில்  இருந்தவரின்  காலை  மேதித்தேன் , அவர்  வலியில்  கத்தினார் , நான்  சுதாரித்துகொண்டு  நகர்ந்து  நின்றேன் , அவர்  கோவத்துடன்  என்னை  பார்த்து  சூ  போட்டு  கிட்டு  கால்  மேல  வச்சு  மெதிக்கிற அறிவில்ல  என்றார் .. சாரிணா  என்றேன்  ஆனால்  அவருக்கு  கோவம்  அடங்கவில்லை  ஏதோ  முணு முணுத்தார் .. கண்டக்டர்  டிக்கெட்  குடுத்து  விட்டு  அவரோட சீட்ல  வந்து  உட்காந்தார் .. நா  10 ரூபாயை  நீட்டி  சாந்தி  தியேட்டர்  ஸ்டாப்னு  சொன்னேன் .. அவரு  6 ரூபாய்க்கு  டிக்கெட்  குடுத்துட்டு  சில்ற  இறங்குரப்ப  வாங்கிக்கன்னு  சொன்னார் .. சாந்தி  தியேட்டர்  stop  வந்தா  சொல்லுங்கன்னு அவர்ட  சொன்னேன் , அவர்  சரின்னும்  சொல்லல  முடியாதுனும்  சொல்லாம  வேற  யாராச்சு  டிக்கெட்  வாங்கனுமா  என்று  கத்தினார் .. நா  அங்கதாம்பா  இறங்குவேன்  என்கூட  இறங்கிடுனு  என்  பக்கதுல  இருந்தவரு  சொன்னாரு  ணா  சரின்னு  தலை  ஆட்டுனேன்.. முன்னாடி  இருந்த  சீட்ல  யாரோ  போன்ல  சத்தமா  யார்  கூடயோ  சண்ட  போட்டு  கிட்டு  இருந்தாரு , பஸ்ல  இருந்த  எல்லாரும்  அவர்  பேசுறதைய  கேட்டுகிட்டு  வந்தோம் .. அவர்  பேசியதை  வைத்து  பார்க்கும்போது  ஏதோ  சொத்து  தகராறுன்னு 
 புருஞ்சுச்சு .. 
 
அடுத்த  ஒரு  பதினஞ்சு  நிமிஷத்துக்கு  பஸ்ல  இருந்த  எல்லாரும்  ஏதோ  ரேடியோல  பாட்டு  கேக்குற  மாதிரி  அவர்  குடும்ப  விஷயத்த  கேட்டு  கொண்டே  சென்றோம் ..ஒரு  டிராபிக்  சிக்னல்ல  பஸ்  நின்னுச்சு  அடுத்த  ஸ்டாப்தான்  சாந்தி  தியேட்டர்   நா  இங்கயே  இறங்கிகிறேனு  சொல்லிடு  இறங்கி  போனாரு .. நா  கண்டக்டர்  சில்ற  குடுப்பாரானு  அவரையே  பாத்துகிட்டு  இருந்தேன் .. அவர்  என்ன  பாத்தாரு  ஆனா  எந்த  reactionum இல்லாம  வேற  பக்கம்  திரும்பிட்டாரு .. இனி  வேலைகாகாதுனு  அண்ணா  எனக்கு  4rubaa சில்லற  தரணும்னு  கேட்டேன் .. எவ்ளோவ்  குடுத்தனு ? கேட்டாரு , 10 ரூபான்னு  சொல்லிகிட்டே  டிக்கெட்ட  எடுத்து  காட்டுனேன் , நா  என்னமோ  அவர்  காச  கேட்ட  மாதிரி  அப்டி  சலுச்சுகிட்டாறு அப்பறம்  அவர்  bagla இருந்து  நால்றுபா சில்றைய  எடுத்து  குடுத்தாரு .. நா  பர்சு குள்ள  அந்த  காச  வச்சுகிட்டு  இருக்கும்போதே  பின்னாடி  இருந்து  ஒரு  வயதான  பாட்டி  கொஞ்சம்  வழி விடுங்கபானு  சொன்னாங்க  , படில  இருகவன்லாம்  இறங்கி  வழி  விடுங்கயானு  கண்டக்டர்  கத்துனாரு , நானும்  என்  கூட  படில  நின்னுகிட்டு  இருந்தவங்களும்  எறங்கி  வழி  விட்டோம் .. அந்த  பாட்டி  இறங்கிய  சில  நொடிகளில்  பஸ்  புறப்பட்டது  வேகமா  ஓடி  போய் நானும்  மற்றவர்களும்  ஏறினோம் .. சாந்தி  தியேட்டர்  ஸ்டாப்  வந்ததும்  இறங்கி  அங்கிருந்த  பஸ்  ஸ்டாப்பில்  இறங்கி  நின்றேன் .. பஸ்  ச்டோபிற்கு  பின்னால்  கீழே  இருந்து  படிகட்டில்  ஏறி  மக்கள்  வந்து  கொண்டிருந்தனர் .. எதிர்  பக்கமும்  அதே  போன்று  மக்கள்  ஏறி  வருவதை  பார்த்தேன் .. அது  கிட்ட  போய்  பாத்தேன்  படிகட்டின்  ஓரத்தில்  வாட்ச் , பர்ஸ் போன்ற  பொருட்களை  விரித்து வைத்து  விற்று  கொண்டிருந்தனர் .. பரவாலையே  ரயில்வே  stationla  மட்டும்தான்  இந்த  மாதிரிலாம்  subway இருக்கும்னு  ஊர்ல  சொன்னாங்க  இங்க  ரோடு  கிராஸ்  பண்றதுக்கு  கூட  இருக்கேனு  நெனச்சேன் ..
 
Subway படிகட்டுல  இறங்குனேன்  , subwayயோட  ரெண்டு  பக்கமும்  karchief, shoe, watchnu நறைய பொருட்கள் விரித்து  வைத்து  விற்று  கொண்டிருந்தாங்க .. நா  அவங்கள  பாக்குறத  பாதாவங்க  20 ரூபாய்தான்  வாங்க  சார்  வாங்கனு  என்ன  பாத்து கூப்டாங்க ., நா  எதுவும்  சொல்லாம வேண்டாம்னு தலை அசைத்தபடி  நடந்து  போய் கிட்டே  இருந்தேன் .. Subwayla எங்க  பாத்தாலும்  paan parag துப்புன  கரையும்  சிறுநீர்  கழித்த  நாதமும்  அடிச்சுச்சு, இந்த  சிட்டில  இருகவன்களுக்கு  government இவ்ளோவ் வசதி  செஞ்சு  குடுத்தாலும்  இந்த  மக்கள்  ஏன்  இப்டி  அசிங்கம்  பண்ணி  வைகிராங்கனு  தோனுச்சு .. Subwayயோட  நடுவுல  ஒரு  கண்ணு  தெரியாத  வயசானவர்  ஏதோ  பாட்டு  பாடியபடி  பிச்சை  எடுத்து  கொண்டிருந்தார் , அவர்  பக்கத்துல  ஒரு  அழுக்கான  நாயும்  இருந்துச்சு , அவர  பார்க்க  பாவமா  இருந்துச்சு  , அவருக்கு  ஒரு  ரூபாய்  காசு  போடலாம்னு  பர்ஸ எடுக்க  பாக்கேட்குள்ள   கை  விட்டேன்   அப்பதான்  தெருஞ்சுசு  என்னோட  பர்ஸ  காணோம்னு  , எல்லா  பாக்கெட்லயும்  தேடி  பாத்தேன்  ஆனா  பர்ஸ் இல்ல .. சின்னதா  ஒரு  ஹார்ட்  அட்டாக்கே வந்துச்சு .. மனசுக்குள்ள   இனம்  புரியாத பயம் .. முதல்  முறையா  ஊரு  விட்டு  ஊரு  வந்திருக்கேன்  இந்த  ஊர்ல  எனக்கு  சூரியன்  எந்த  பக்கம்  இருக்குனு  கூட  தெரியல .. கவலை  கலந்த  பயத்துடன்  வந்த  வழியில்  தேடி  கொண்டே  சென்றேன் .. இதய  துடிப்பு  அதிகரித்தது , பயத்துல  மூச்சு  திணறியபடி  சுத்தி  பார்த்தேன்  ஆனா  பர்சு எங்கயும்  இல்ல .. அங்க  பஸ்  standla நின்னு  கிட்டு  இருந்தவர்  நா  தேட்ரத பாத்துட்டு  என்னாச்சுனு  கேட்டாரு ? பர்ஸ்  தொலஞ்சு போய்டுச்சு  சார் , black colour பர்ஸ்  எதாச்சு  கீழ  பாதிங்க்லானு  கேட்டேன் .. இல்லையே  வீட்ல  இருந்து  எடுத்து  வந்த  ஞாபகம்  இருக்கா? கேட்டார்  .. பஸ்ல  வந்தேன்  சார்  டிக்கெட்  எடுக்க  பர்ஸ்ல  இருந்துதான்  காசெடுதேன்  சார்  என்று  சொல்லியபடியே 
 
சுற்றி  எல்லா  இடத்திலையும்  பார்த்து  கொண்டிருந்தேன் .. பாக்கெட்  எதுவும்  கிளியலல எங்கயாது  கீழ்தான்  விழுந்திருக்கும்  நல்லா  தேடி  பாருங்கன்னு  சொன்னாரு .. ஆனா  எங்கயும்  பர்ஸ்  கிடைகள  , மனம்  முழுக்க  பயம் , கைகளும்  கால்களும்  லேசாக  நடுங்கின , மனதிற்குள்  அழ  தொடங்கி  விட்டேன்  ஆனால்  மற்றவர்கள்  பார்த்து  விடுவார்களோன்னு  நினைத்து  முகத்தில்  காட்டி  கொள்ளவில்லை .. அங்கு  நின்று  கொண்டிருந்தவரிடம்  போன்  தரின்களா  சார்  ஒரு  போன்  பண்ணனும்னு  கேட்டேன்  அவரும்  தந்தாரு , எனக்கு  சென்னையில்  தெரிந்த  ஒரே  மனிதர்  என்னுடைய  தூரத்து  சொந்தகார  அண்ணன்தான்  அவருக்கு  போன்  செய்தேன் .. ரிங்  அடித்து  கொண்டே  இருந்தது , அவர்  எடுக்கவில்லை .. போன்  குடுத்தவர்  என்னையே  பார்த்து  கொண்டிருந்தார் , போன்  எடுகமாடிகிராறு  சார்  பர்ஸ்  தொலஞ்சு  போச்சு  அதான்  என்று  போனின்  சொந்த  காரரிடம்  சொல்லியபடி  கால்  பண்ணேன்  ஆனா  என்னோட  நேரமோ  என்னமோ  தெரியல  அவரு  போன்  எடுக்கல, எனக்கு officeku. டைம் ஆச்சுப்பா பஸ் வந்துடுச்சு குடுப்பா என்று போனை வாங்கிகொண்டார் , நான் என்ன சொல்வதென்று புரியாமல் போனை குடுத்துவிட்டு , பக்கத்தில் நின்று கொண்டிருந்த இன்னொருவரிடம் போன் தாங்க சார்நு கேட்டேன் , அவரும் தந்தாரு , கால் போய்கிட்டே இருந்துச்சு , அபதான்  கண்டக்டர்  திருப்பி  குடுத்த  சில்லறையை  வாங்கி  பர்சுக்குள்  வைத்து  கொண்டிருக்கும்போது  பஸ்ஸில்  இருந்து  இறங்கியபோது  விழுந்திருக்குமோனு  நெனச்சு  ஒரு  நிமிஷம்  சார்நு  போன்  தந்தவர்ட  சொல்லிட்டு  வேகமா  roada கிராஸ்  பண்ணேன் , நா  போன  தூக்கிட்டுதன்  ஓட்றேனு  நெனசிகிட்டு  அவர்  எனக்கு  பின்னாடி  வந்து  என்னோட  சட்ட  collara புடுச்சு சில  கெட்ட  வார்த்தைகளில்  திட்டி  கொண்டே  என்னிடமிருந்த  போனை  புடுங்கினார் , நா  என்ன  நடந்துச்சுன்னு  சொல்லுங்காடி  அவர்  என்  சட்டையை  பிடித்தபடி  போலீஸ்  கிட்ட  புடுச்சு  குடுத்தாதான்  அடங்குவிங்க,  பாவம்னு  போன்  குடுத்தா  தூக்கிட்டு  ஓட்ரியானு  கத்துனாரு  நா  பரசே  தொலஞ்சுடுச்சு  சார் நு  சொல்லிகிட்டே  இருந்தேன்  ஆனா  அவர்  எதையுமே  கேட்கல , அங்க  இருந்த  எல்லாரும்  என்னையே  பாத்துகிட்டு  இருந்தாங்க  , அவர்  வாடா  அங்கதன்  போலீஸ்  நிப்பாங்க  வா  நு  என்னோட  சட்டைய  புடுச்சு  இழுத்தாரு , நான்  அவமானம்  தாங்காமல் 
 
அழதொடன்கினேன் , நா  இன்னிக்குதான்  சார்  சென்னைக்கே  வந்தேன்  please சார்  நம்புங்க  சார்  பர்ஸ்  தொலஞ்சிடுச்சு என்று  வாழ்க்கைல  முதல்  முறையா  இன்னொருதரு  காலுல  விழாத  குறையா  அழுது    கெஞ்சி  கேட்டேன் .. அவர்  சரி  போய் தொல ஆனா  இன்னமேலு  இந்த  மாதிரி  திருட்டு  தொழிலாம்  வச்சுகாதனு  சொல்லிட்டு  போனார் .. அந்த  சில  நொடிகள்ள  இப்ப  நெனச்சு  பாக்கும்போது  கூட  செத்துரலாம்னு  தோணுது , அங்க  ரோட்ல  நின்னு  கிட்டு  இருந்தவங்கலாம்  என்ன  ஏதோ  ஒரு  கேவலமான  உயிரினம்  மாதிரி  பாத்தாங்க , நா  என்னோட  தலை  குனிந்தபடி  எங்க  போறோம்னு  தெரியாம  அழுதபடி  தலை  குனிந்தபடி  தரையை  பார்த்து  கொண்டே  நடந்தேன் , எனக்கு  அப்ப அந்த  இடத்துல  இருந்து  போனா  போதும்னு  இருந்துச்சு , அழுதபடி  ரோடை  பார்த்து  கொண்டே  subway   நோக்கி  நடந்தேன் , அங்கு  subway படிகட்டில்  என்னை  மற்றவர்களிடம்  இருந்து  மறைத்து  கொண்டு  படிகட்டில்  உட்காந்து  என்  முகத்தை  இரண்டு  கால்களுக்கு  நடுவிலும்  கையை  வைத்தும்  மறைத்து  கொண்டேன் .. எவ்வளவு  நேரம்  அழுதேன்னு  கூட  தெரியல  அடுத்து  இந்த  இரக்கமில்லாத  சென்னைல  என்ன  பண்ண  போரென்ற  பயத்த  விட  நா  பட்ட  அசிங்கம்தான்  என்னோட  மனசு  முழுக்க  இருந்துச்சு  ஏன்  இந்த  சென்னைக்கு  வந்து  தொலச்செனு  தோனுச்சு .. அந்த  கூட்டத்துல  ஒருத்தர்கூட  என்ன  சப்போர்ட்  பன்னலஎனு  தோனுச்சு .. இனி  இந்த  ஊர்ல  எப்டி  வாழ  போறேன்  பேசாம  ஊருக்கே  போய்டலாம்னு  கூட  தோனுச்சு .. ஆனா  இப்ப  என்கிட்டே  அஞ்சு  பைசா  கூட  இல்ல .. நாம  ஒருத்தருக்கு  உதவி  செஞ்சா  நமக்கு வேற  யாராச்சு  உதவி  செய்வாங்கன்னு  சொல்றாங்க  ஆனா  அதெல்லாம்  சுத்த  பொய்  நு  தோணுது , காலைல  அந்த  phona அங்கேயே  விட்டுட்டு  போய்  இருக்கலாம்  ஆனா  பாவம்  காசு  போட்டு  வாங்குனவுங்க  எவ்ளோ  கஷ்ட  படுவாங்கனு  நெனச்சு  அவங்களுக்கு  உதவி  செஞ்சேன் ,
 
ஆனா  இப்ப  எனக்கு  யாராச்சு  உதவி  செஇவாங்க்லானு  ஏங்கிகிட்டு  இருக்கேன் , ஆனா  ஒருத்தன்  கூட  என்ன  திரும்பி  பாக்கள எல்லாரும்  அவன்  அவன்  வேலைய  பாத்துகிட்டு  போறாங்க .. பர்ஸ  திருடிடான்களா  இல்ல  நா  எங்கயாச்சு  தொலசுடநானு  யோசிச்சு  பாத்தேன்  ஆனா  எதுவுமே  ஞாபகத்துக்கு  வரல  அவர்  என்ன  ஒரு  திருடன்  மாதிரி  சட்டய  புடுச்சதுதான்  மனசுக்குள்ள  வந்து  வந்து  போச்சு  .. கொஞ்ச  நேரம்  கழுச்சு  எந்துருச்சு  பாத்தேன் , மக்கள்  வேகம்  வேகமா  போய் கிட்டு  இருந்தாங்க , ஆனா  ஒருத்தன்  கூட  என்ன  திரும்பி  பாக்கள  எல்லாரும்  அவன்  அவன்  வேலைய  பாத்துகிட்டு  போறாங்க ... ஒரு  காலேஜ்  படிக்கிற  பையன்  வந்தான் , கொஞ்சம்  போன்  தர  முடியுமான்னு  கேட்டேன் .. இல்ல  பாஸ்  என்கிட்டே  போன்  இல்லன்னு  சொல்லிடு  நடந்து  கொஞ்சம்  தூரம்  போன  உடனே  அவரோட  போன்  ரிங்டனே  அடுசுசுது   அவனும்  எடுத்து  பேசி  கிட்டே  போனான் .. அவன்  என்ன  திரும்பி  பாத்தான்  நானும்  அவனையே  பாத்து கிட்டு  இருந்தேன்  அவன்  வேறு  பக்கம்  பார்த்த  படி  போன்  பேசிகிட்டே  நடந்து  போனான் .. இனி  யார்கிட்ட  கேட்டும்  பிரயோஜனம்  இல்லன்னு  தோனுச்சு .. அந்த  படிகட்டுலையே  உட்காந்திருந்தேன்  , படிகட்டோட  இன்னொரு  மூலைல  ஒரு  நாய்  படுத்திருந்துச்சு , இப்ப  நானும்  அந்த  நாயும்  ஒரே  நிலைமைலதான்  இருக்கோம்னு  தோனுச்சு .. அந்த  நாய்  பக்கத்துல  ஒரு  கண்ணு  தெரியாதவர்  ஒரு  துண்டு  விருட்சு  உட்காந்திருந்தாறு  மக்கள்  நடந்து  வர  சத்தம்  கேட்டா தன்னோட  ரெண்டு  கையாளும்  கும்பிட்டாரு  சில  பேரு  சிள்ளரைங்கள  போட்டுட்டு  போனாங்க .. ஒருத்தர்  போட்ட  காசு  அங்க  இருந்த  காசு மேல  பட்டு  எகுறி  அந்த  துண்ட  தாண்டி  கொஞ்சம்  தூரம்  தள்ளி  போய்  விழுந்துச்சு .. நா  அந்த  காசையே  பாத்து  கிட்டு  இருந்தேன் , என்னோட  மனசுக்குள்ள  பெரிய  குழப்பம் , கடைசில  நானும்  ஒரு  கேவலமானவனா  மாருனேன்  அந்த  காச  யாருக்கும்  தெரியாம   எடுத்துகிட்டு  அந்த  subwayla இருந்து  வேகமா  ஓடுனேன் , subwayla இருந்து  மேல  ரோடுக்கு  வந்தேன்  அந்த  காச  bathuramaa என்னோட  கைக்குள்ள  இருக்கமா  புடுச்சிருந்தான்  .. கொஞ்ச  தூரம்  போனப்புறம்  அங்க  coin போன்  இருந்துச்சு  ,அப்பதான்  அந்த  காச  எடுத்து  பாத்தேன்  அது  2 ரூபாய்  coin, அந்த கடைகாரர்ட  குடுத்து  ரெண்டு  ஒரு  ரூபாய்  வாங்கிகிட்டேன் , ஒரு  coina போட்டு  நும்பெற  அழுத்துனேன் , ரிங்  அடித்தது , இந்த  முறை  அடித்த  உடனே  அவர்  எடுத்தார் ,, ஹலோ  யாருன்னு  கேட்டாரு ? நா  தான்  செந்தில்னே  இங்க  சாந்தி  தியேட்டர்  கிட்ட  இருக்கேன்  உடனே  வாங்க  பர்ஸ்  காணம் போய்டுச்சுன்னு  கத்துனேன்  , எப்டின்னு  கேட்டாரு  நா  அந்த  ஓடிகிட்டு  இருந்த  secondsa பாத்துகிட்டே  தெரியலனா  என்கிட்டே  இப்ப  சுத்தமா  காசில்லன்னு  கத்துனேன் , சரி  சரி  கவலைபடாத வரேன்  , நீ  போய் அந்த  சாந்தி  தியேட்டர்  கிட்ட  நில்லு வந்துடறேன்னு  சொன்னாரு .. எனக்கு  அபதான்  உயிரே  வந்துச்சு  மனசுக்குள்ள  ஒரு  தெஇரியமும்  வந்துச்சு .. 
 
சாந்தி  தியேட்டர்  வாசல்ல  போய் நின்னேன் .. சரியா  43 நிமிஷம்  கலுச்சு  அவர்  பைக்ல  வந்தாரு .. நடந்த  எல்லாத்தையும்  சொன்னேன்  அந்த  கண்ணு  தெரியாதவர்ட  திருடுனத  தவிர .. சரி வா  நானே  உன்ன  அந்த  கம்பெனில  விட்டுடறேன்னு  சொன்னாரு .. வேணாண்ணா  நா  ஊருக்கே  போய்டுறேன்  என்னால  இங்க  வாழ  முடியாது .. என்ன  பைக்ல  ஏற  சொல்லி  முதல  எல்லா  அப்டிதான்  இருக்கும்  அபாரம்  பழகிடும்  நீ  நெஞ்சு  பாக்க  முடியாத  அளவுக்கு  நல்லவங்களும்  இந்த  ஊர்ல  இருக்காங்க  அதே  மாதிரி  கெட்டவங்களும்  இருப்பாங்கனு  சொன்னாரு .. எனக்கு  அவர்  நல்லவங்கனு  சொன்னப்ப  அந்த  கண்ணு  தெரியாதவர்தான்  ஞாபகத்துக்கு  வந்தாரு .. அன்னிக்கு  interview அட்டெண்ட்  பண்ணேன்  recommendationaala உடனே  வேலை  கிடைச்சிடுச்சு …
 
அடுத்தநாள்  காலைல  வேளைக்கு  போறதுக்கு  அதே  மாதிரி  பஸ்ல  போய்  இறங்குனேன்  , பஸ்ல  இருந்து  இறங்குன  உடனே  பர்ஸ்  இருக்கானு  அடிகடி  தொட்டு  பாதுகுவேன் .. அதே  subwaykku போனேன்  அவர்  அதே  இடத்துல  உட்காந்திருந்தாறு .. நேத்து  வாங்குன  புது  பார்ச  எடுத்து  பாத்தேன்  மொத்தமாவே  என்கிட்டே  1000 ரூபாய்தான்  இருந்துச்சு  இந்த  மாசம்  fullaa ஓட்டனும் , மனசுக்குள்ள  100 ரூபாய்  அந்த  கண்ணு  தெரியாதவருக்கு  குடுக்கலாம்னு manasukkulla  தோணுனாலும்  , இந்த  மாசம்  fullaa எப்டி  சமாளிகிரதுனு  யோசிச்சு  பாத்துச்சு  என்னோட   மூளை , என்ன பண்றது  நானும்  சராசரி   மனுஷந்தான   .. 10 ரூபாயா  அவரோட  கைல  குடுத்துட்டு  நடந்து  வேலைக்கு  போனேன் ...
 
இன்னிக்கு  என்னோட  முதல்  சம்பளம்  8000 ரூபாய்  வந்திருக்கு  அவருக்கு  1000 ரூபாய்  குடுத்து   நன்றி  சொல்லலாம்னு  நடந்து  அந்த  subwaykulla போனேன் .. ஆனா  இனிக்கு  அந்த  இடத்துல  அந்த  நாய்  மட்டும்தான்  இருந்துச்சு  அவர  கானம் .  வேற  இடத்துக்கு  போய்டாரானு  பக்கத்துல  shoe வித்துகிட்டு  இருந்தவர்ட  கேட்டேன்  , அவர்  நேத்து  nightu செத்து  பொஇடாரு  corporation காரங்க  body ya காலைலதான்  எடுத்துட்டு  போனாங்கன்னு  சொன்னாரு , எனக்கு  அதிர்ச்சியா  இருந்துச்சு , எதுக்கு  கேக்குரிங்கனு  அவர்  கேட்டாரு  நா  எதுவும்  பதில்  சொல்லாம  அந்த  கண்ணு  தெரியாதவர்  எப்பவும்  உட்காந்திருக்கும்  இடத்தை  பார்த்தபடி  நடந்து  போனேன் .. அன்னைக்கு  அவர்கிட்ட  இருந்து  எடுத்த  2 ரூபாய்  காசுல  மிச்சம்  ஒரு  ரூபாய்  என்கிட்டதான்  இருக்கு  அதா  இன்னமும்  என்னோட  பர்சுலயெதான் வச்சிருக்கேன் , ஒவ்வொருவாட்டி  பர்ஸ  திறக்கும்போதும்  அந்த ஒரு ரூபாய்  அவர  எனக்கு ஞாபக  படுதிடே  இருந்துச்சு ..
இப்பவும்  ஒவ்வொரு  முறை  அந்த  சாந்தி  தியேட்டர்  subway ya கிராஸ்  பண்ணும்  போதும்  அந்த  கண்ணு  தெரியாதவர்  உட்காந்திருந்த  அந்த  இடத்தை  ஒரு  முறை  திரும்பி  பார்த்துவிட்டுதான்  செல்வேன்...............………………………..
                                                                            - கிஷோர் குமார் .

No comments:

Post a Comment