Thursday 30 June 2011

தவிப்பு


அந்த குடும்பம் முதல் முறையாக சென்னைக்கு பொட்டி படுகயுடன் வந்து இறங்கியது .. கணவனுக்கு சென்னைக்கு ற்றன்ச்பிர் செய்ய பட்டுள்ளது .. மனைவிக்கு இனி அந்த மாமியார் நாதனார் தொல்லைகள் இல்லை ., தனது குடும்பத்தை எப்படியும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் வாடகை வீடுகாரரிடம் அட்வான்ஸ் பணத்தை குடுத்து விட்டு வீட்டின் கதவை திறந்தனர் உள்ளே ஒரு ஹால் ஒரு கிட்சேன் மட்டும் இருந்தது கண்டு மனைவியின் முகம் மாறியது அதை கண்ட கணவன் சென்னில் 750 ரூபாய்க்கு இந்த வீடு கிடைபதே அதிஷ்டம் என்று அவளிடம் கூறிவிட்டு பொருட்களை ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து சென்றான் .. அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பெரியவன் 5 வது படிக்கிறான் சின்னவன் இந்த வருடம் தான் முதல் வகுப்பு .. அடுத்த நாள் அவர்கள் இருவரையும் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர் .. தினமும் காலையில் அந்த தாய்தான் இருவரையும் பள்ளிகூடத்துக்கு சென்று விட்டுவிட்டு மாலை சென்று அழைத்து வருவாள் இரண்டு நாள் கழிந்தது அன்று சனிகிழமை பள்ளி பாதிநேரம் மட்டும்தான் இயங்கும் . முதலில் சின்னவனை கூட்டிகிட்டு பிறகு பெரியவன் class கு போகலாமென்று நினைத்து முதல் வகுப்புக்கு சென்றால் அங்கு பாடம் முடியாததால் டீசெரிடம் அவனை விடவேண்டாம் என்று சொல்லிவிட்டு பெரியவனை கூப்பிட சென்றால் .. பெரியவனை கூடிக்கொண்டு முதல் வகுப்புக்கு வந்த பொழுது அவளுக்கு பெரிய இடி காத்திருந்தது ...
அவளுடைய சின்ன பயனை காணவில்லை .. அந்த வகுப்பில் மொத்தம் 50 பேர் அதனால் அந்த டீசெரையும் குறை சொல்ல முடியாது .. அவன் காணவில்லை என்று தெரிந்ததும் அவளுடைய எதிர்காலமே முடங்கியதுபோல் உணர்தால் அவன் பள்ளியை விட்டு தாண்டி இருக்க மாட்டான் என்று நினைத்து பள்ளி முழுவதும் தேடினால் அவன் எங்குமில்லை .. பள்ளியை விட்டு வீட்டுக்கு தான் போகி இருப்பான் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து பெரிய பயனுடன் வீடு வரைக்கும் ரோட்டில் மற்றவர்கள் பார்கிறார்கள் என்று கூட நினைக்காமல் அழுது கொண்டே ஓடினால் . தன கணவன் கேட்டல் என்ன பதில் சொல்வது அதை விட அந்த 6 வயசு பயன் எங்க அழுதுகொண்டு இருக்கிறானோ,அல்லது யாராவது கடத்திக்கொண்டு பொய் வித்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ என நினைத்து அழுதுகொண்டே வீட்டை அடைந்தால் ஆனால் அவன் அங்கும் இல்லை .. ஊரிலுள்ள அனைவரும் உனக்கு இரண்டும் ஆண் குழந்தை இனி உன் வாழ்கை பற்றி பயபடதே என்றார்கள் ஆனால் தான் சென்னையில் வந்து தன்னுடைய வல்கயவே துளைத்து விட்டேன் என்று நினைத்து கொண்டே மறுபடியும் பள்ளிக்கு ஓடினால் , அவன் கிடைத்து விட்டால் குடும்பத்துடன் பலனில் மொட்டை அடித்து கொள்வதாகவும் வேண்டினால் ., யாராவது தன்னுடைய மகனை கூடி கொண்டு வருவார்கலா என எண்ணி அணைத்து கடவுளையும் வேண்டினால் . பள்ளியின் அருகில் வரும்போது அவளுக்கு தன்னுடைய வாழ்க்கையே திரும்ப கிடைத்தது போல் உணர்ந்தால் ....
தூரத்தில் தன்னுடைய மகன் ஒரு 30 வயது மிக்க இளைங்கனுடன் நடந்து வருவதுபோல் தோன்றியது .. தன்னை மறந்து அருகில் வேகமாக ஓடினால் அது அவளுடைய மகன்தான் அவனை இறுகி கடிபிடிதுகொண்டல் இனி ஒரு பொழுதும் உன்னை விடமாட்டேன் என்று கதறினால் அந்த இளைஞன் அவளுக்கு இறைவனுக்கும் மேலாக தோன்றினான் .. அவனுக்கு அழுது கொண்டே தன் இரு கையையும் கூப்பி நன்றி சொன்னால் .. அந்த இளைஞன் தான் அந்த சிறுவனை பஸ் ஸ்டாண்டில் பார்த்ததாகவும் அவன் வழி தெரியாமல் அழுது கொன்று நின்றான் , அவனுடைய பள்ளி பெயர் கூட அவனுக்கு சொல்ல தெரிய வில்லை அதனால் அவனை அந்த பள்ளிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொண்டு விட்டு விடலாம் என்று கூட்டி வந்ததாக சொன்னான் .. அவனுக்கு வேலைக்கு நேரமானதால் அந்த சிறுவனின் கன்னத்தை கிள்ளி விட்டு அங்கிருந்து சென்றான் .. அவளுக்கு அந்த இளைஞனின் பெயர் கூட தெரியவில்லை அவளை பொறுத்த வரையில் அவன் இறைவன் ... அன்றிலிருந்து அவள் அந்த சிறுவனின் பாக்கெட்டில் என்றும் ஒரு காகிதத்தில் வீட்டின் முகவர்யும் பள்ளி பெயரும் எழுதி வைத்தல் ஆனால் அதன் பிறகு அவனை அவள் ஒரு நாலும் விட்டு பிரியவில்லை . வேண்டியபடியே கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் முடி காணிக்கை கொடுத்தால் . தன்னுடைய வாழ்நாளில் அந்த நாள் மறுபடியும் வரகூடாது என்று நினைத்தால் இன்று இருபது வருடம் கழித்தும் அந்த நாளை நினைக்கும் பொழுது அவளுடைய கண்ணில் நீர் தேங்குகிறது .............. "சில நேரத்துல கடவுள் இருக்குறாருன்னு கூட தோனுதுல "
-கிஷோர் குமார்
0

No comments:

Post a Comment