Thursday 28 July 2011

பட்டு பாவாடை


அன்று மாலை 7 மணிக்கு மக்கள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வேகமாக வெளியே வந்து கொண்டிருந்தனர் .. அங்கு ஆட்டோ காரர்கள் நின்று கொண்டு எங்க போகணும் sir, எங்க போகணும்மா என்று கையில் luggage உடன் வருபவர்களை கேட்டு கொண்டிருந்தார்கள் ... அந்த ரயில்வே ஸ்டேஷன்கு வெளியில் இருந்த மார்க்கெட்டில் வீட்டுக்கு செல்பவர்கள் காய் கறிகளை வாங்கி கொண்டிருந்தனர் ... அந்த தெருவின் இருபுறமும் காய்கறி கடைகளும் , சில நகை கடைகளும் புடவை கடைகளும் இருந்தன .. Ambika jewellerers கடைக்கு முன் ஒருவர் கோனிகளை விரித்து பர்சுகளை வரிசையாக அடுக்கி வைத்து விற்று கொண்டிருந்தார் ... இருவர் அந்த பர்சுகளை எடுத்து பாது கொண்டிருந்தனர் .. 35 ரூபாய்ல இருந்து 85 ருபாய் வரைக்கும் பர்சுங்க இருக்குனே .. இந்த பர்சை பாருங்கனே நல்லா ஒலைகும்னே .. ஜிப் எல்லாம் போய்டாதிள்ள.?. நல்லா ஒலைகும்னே நம்பி வாங்கிட்டு போலாம் .. சரி எவ்ளோவ் சொல்ற ?. 85 ரூபாய்னே .. ௭௫ ருபாய் வாங்கிகப்பா என்றார் .. இல்லனே கட்டுபடியாகாதுனே .. என்னப்பா இவ்ளோவ் கறாரா பேசுற .. இல்லனே ஒரு பரசு வித்தா எனக்கு 5 ரூபாய்தானே கிடைக்கும் .. சரி கடைசியா 80 ரூபாய்க்கு தரியா என்றார் .. சரி தான்கனே என்று கூறிவிட்டு அந்த பர்சை திறந்து அதில் ஒரு ரூபசி போடான் , என்னோடது கரை படாத கைனே இந்த ஒரு ருபாய் எப்பவும் இந்த பர்ஸ்ல இருந்து எடுகாதின்கனே எப்பவும் இந்த பர்ஸ்ல பணம் இருந்துகிட்டே இருக்கும் என்று கூறிவிட்டு பர்சை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிகொண்டான் .. இதை பார்த்து கொண்டிருந்தவர் சிரித்துகொண்டே இந்த பர்ஸ் எவ்ளோவ்பா என்றார் .. 35 ரூபாய்னே என்னனே சிரிகிரிங்க .. ஒன்னுமில்லப்பா நல்லா பேசுற எந்த ஊருப்பா .. குளித்தளைனே எப்படினே வெளி ஊர்னு கண்டுபுடுசிங்க .. உன்னோட பேச்சுலையே தெரியுதேபா என்று சொல்லிக்கொண்டே 50 ருபாய் எடுத்து நீட்டினார் ...
5 ருபாய் சில்ற இருக்கானு பாருன்கனே.. இல்லப்பா 50 ருபாய் நோட்டுதான் இருக்கு பரவால 10 ருபாய் கொடுப்பா போதும் என்றார் .. இல்லனே ஒரு நிமிஷம் இருந்கனே என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த வாழைபழ கடையில் சில்லறை வாங்கி கொண்டு வந்தான் .. அந்த பர்சில் ஒரு ருபாய் போட்டு விட்டு என்னோடது கரை படாத கைனே இத செலவு பன்னாதின்கனே உங்க பர்ஸ்ல எப்பவும் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்றான் .. உனக்கே ஒரு பர்சு வித்தா 5 ரூபாய்தான் கிடைக்கும்னு சொல்ற அப்பறம் எதுக்குப்பா இப்படி ஒரு ருபாய் செலவு பண்ற .. அது என்னோட மன த்ரிப்திகுனே நீங்க 5rubai கொடுத்ததும் நா வேணாம்னதுகு காரணம் நா என்னோட கைய கரைபடாம வச்சுக்கணும்னு நினைக்கிறன் அதான் இன்னிக்கு நீங்க 5 ருபாய் குடுத்து வாங்கிட அடுத்து வரவங்களும் 5 ருபாய் குடுபாங்கனு மனசு எதிர்ப்பாக ஆரம்பிச்சிரும் அதானே .வேணாம்னு சொன்னேன்..... சரிப்பா அப்பா முன்னாடி வித்தவர் கிட்ட 5 ருபாய் கம்மியா வாங்குனியே அப்பா அதுல உனக்கு நஷ்டம்தானபா என்று கேட்டார் .. ஆமானே நஷ்டம்தான் ஒரு வாரமா உடம்பு சரி இல்லாம கடையே போடல இன்னிக்குதான் போட்டேன் இன்னும் கொஞ்ச நாட்கள்ல மழை வேற ஆரம்பிச்சுரும் அதான் வந்தவரைக்கும் லாபம்னு வித்துட்டேன் .. மக்களுக்கு கடைக்காரங்க சொல்றத விட கொஞ்சமாவது கம்மியா வாங்குனாதான் அவங்களுக்கு நிம்மதி .. இத புருஞ்சு வச்சுக்கிட்டு கடைகாரங்களும் ஒரிஜினல் விளைய விட 20 ருபாய் ஏற்றி விகிறாங்க மக்களும் பேரம் பேசி 10 ருபாய் குறைத்து வாங்கிகிறாங்க அது மக்களுக்கும் நிம்மதி கடைகாரனுகும் லாபம்தான் அனால் எனக்கு அப்படி விற்பதற்கு மனசு வரலைனே அப்படி பொய் சொல்லி வித்தா என்னோட கை கரை பட்டுடும்னே என்று அவன் அப்பாவித்தனமாக பேசினான் ... அவர் சிரித்துகொண்டே சரிப்பா வரேன் என்று கூறி விட்டு நகர்ந்தார் .. இவன் எப்படி இந்த ஊர்ல போலைகபோறான் என்று மனதில் நினைத்துகொண்டே நடந்து சென்றான் ....
மணி 10 ஆனதும் பர்சுகளை எடுத்து கோணி பையில் போட்டு கொண்டு கிளம்பினான் .. வழியில் ஒரு கடையில் காராபூந்தி வாங்கிகொண்டு சென்றான் ..வீட்டுக்குள் சென்றதும் அவனுடைய மகள் ஓடி வந்து அவன் கையில் வைத்திருந்த காராபூந்தியை வாங்கி கொண்டால் .. அவன் தான் சம்பாரித்த பணத்தை தன்னுடைய மனைவியிடம் குடுத்து சுவாமி படத்தின் முன்பு வைக்க சொன்னான் .. அவனது மனைவி அவனுக்கு சாதம் எடுத்து வைத்தால் .. இன்னிக்கி கொடுத்த பணத்த நாளைக்கு மளிகை கடைல குடுத்துரு அவரும் எவ்வளவு நாளைக்குதான் பொறுமையா இருபாரு அவரு கேட்குற மாதிரி வச்சுக்க கூடாது என்றான் ... உங்களுக்கு உடம்பு சரியான உடனே பழனி முருகனுக்கு 500 ருபாய் முடுஞ்சு போடறேன்னு வேண்டிகிட்டேன் .. அதனால தினமும் வர காசுல 100 ரூபாய அதுல முடுஞ்சு போட்டுடறேன் இப்ப ரெண்டு துணி தச்சுகிட்டு இருக்கேன் அதா தச்சு குடுத்தா காசு கிடைக்கும் அதை வச்சு அவருக்கு குடுதடலாம் என்றால் .. மறுநாள் காலையில் கோணியை தூக்கி கொண்டு கடைக்கு சென்றான் .. இரவு 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது .. பர்சுகளை எடுத்து கோணிக்குள் வைத்துகொண்டு ஒதுங்கி நின்றான் .. மழை மேலும் அதிகமாக பெய்ய தொடங்கியது , மழை நிக்கிற மாதிரி தெரியல அதனால் அவன் ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து தலைக்கு மாடி கொண்டு வீட்டுக்கு சென்றான் .. வீட்டில் அவனுடைய மகள் படித்து கொண்டிருந்தால் அவனை பார்த்த உடனே ஓடி வந்து என்ன இவ்ளோவ் சீக்கிரமா வந்துட்ட , எனக்கு ஏதும் வாங்கிகொண்டு வரலயான்னு கேட்டால் ?.. மழை பெயுதுல அதான் நாளைக்கு உனக்கு மைசூர் பாக்கு வாங்கி தரேன் இப்ப பொய் படி என்றான் .. துணி தைத்து கொண்டிருந்த அவனது மனைவியிடம் பணத்தை குடுத்து இன்னிக்கு இவ்ளோவ்தான் கெடச்சுது .. மழை இப்படியே பேஞ்சுகிட்டு இருந்தா என்ன பண்றதுன்னு தெரியல என்று கவலையுடன் உட்கார்ந்தான் ..
அவனது மகள் அவனிடம் வந்து தன்னுடைய பள்ளியில் நடந்தவற்றை சொல்லி கொண்டிருந்தால் .. பள்ளியின் ஆண்டு விழாவில் தான் டான்ஸ் ஆட போவதாக கூறி அவனுக்கு அவள் டான்ஸ் ஆடி காட்டினாள் .. அதை பார்த்து அவன் தன்னுடைய கவலையை மறந்து சிரித்தான் .. ஆடி முடித்ததும் நா எப்டி ஆடுறேன் நல்லா ஆடுறேனா என்றால் ? சூப்பரா டான்ஸ் ஆடறேன்னு சொன்னான் .. இதை கவனித அவனது மனைவி டான்ஸ்ல ஒன்னும் வேணாம் ஒழுங்கா படி அது போதும் என்றால் .. ஏன் அப்படி சொல்ற அவ நல்லாதான் டான்ஸ் ஆட்றா நீ பொய் உன்னோட வேலைய பாரு என்னோட பொண்ணு படிப்பு டான்ஸ் ரெண்டுத்துலயும் first வருவா என்று தன்னுடைய மகளின் தலை முடியை தடவி கொண்டே கூறினான் .. நல்லாதான் அடுரால் ஆனா அந்த டான்ஸ் ஆடும்போது பட்டு பாவாடை போட்டு கொண்டுதான் ஆடனுமாம் உங்கள வாங்கி தர முடியுமா என்று அவனை பார்த்து கேட்டால் .. அவனுடைய மகள் ஆமாம்பா அதை போட்டுகிட்டுதான் டான்ஸ் ஆடனுமாம் வாங்கி தாங்க என்றால் .. ஆண்டு விழா வர ஞாயற்று கிழமைதான அதுக்குள்ள எப்படியாவது வாங்கித்தரேன் என்றான் ... அவனுடைய மனைவி அது 300 ரூபாய்க்கு மேல இருக்கும் வீனா அவ மனசுல ஆசையா வளகாதிங்கனு சொன்னால் .. இன்னும் மூணு நாள் இருக்குல எப்படியாவது வாங்கிடலாம் என்றான் .. நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க இன்னிக்கு காச நா பழனி முருகனுக்கு முடுஞ்சு போட்டுட்டேன் .. அதுல 500 ருபாய் முடுஞ்சு போட்டபரம் அவளுக்கு என்ன வேணும்னாலும் வாங்கி கொடுங்க என்றால் .. அடுத்தநாள் மழை பெய்ய வில்லை அனால் மேக மூட்டமாக இருந்தது வேலைக்கு சென்றவனிடம் அவனுடைய மகள் மறக்காம பட்டு பாவாடை வாங்கிட்டு வர சொன்னால் .. சரி நா பாத்துக்குறேன் நீ கவலை படாம schooluku போ என்று கூறி விட்டு கோணியை தூக்கி கொண்டு கிளம்பினான் ..
அன்று முழுவதும் மழை பெய்ததால் அவனால் ஒரு பர்சு கூட விற்க முடியவில்லை .அடுத்தநாள் மேக மூட்டமாக இருண்டது .மாலை 5 மணியளவில் ஒருவர் பைக்கில் முன்னாடி தன்னுடைய மகளை உட்கார வைத்து விட்டு அவர் பூ வாங்க சென்றார் .. அவள் சிவப்பு கலர்ல பட்டு பாவாடை போட்டிருந்தால் .. அந்த ட்ரஸில் அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தால் .. தன் மகளுக்கும் அதே போன்று வாங்க வேண்டும்னு யோசித்தான் ... மாலை 6 மனியளவில் மழை பெய்ய தொடங்கியது ... பக்கத்தில் இருந்த துணி கடைக்கு சென்று பட்டு பாவாடை எவ்வளவு என்று கேட்டான் .. எந்த அளவில் வேணும் ? என்று கடைக்காரன் கேட்டான் .. இரண்டாவது படிக்கிற குழந்தைகுனு சொன்னான் .. நல்லதா எடுத்தா 350 ஆகும்னு சொன்னான் .. சரி நா நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் என்று கூறி விட்டு வீட்டுக்கு சென்றான் .. வீட்டிற்குள் சென்றதும் அவள் ஓடி வந்து அவன் பட்டு பாவாடை வாங்கி கொண்டு வந்துள்ளான என்று பார்த்தல் .. அவன் கையில் எதுவும் இல்லாததை கண்டு அவளுடைய முகம் வாடியது .. நாளைக்கு வாங்கிட்டு வரேன் நீ பொய் தூங்கு என்று கூறினான் .. இன்று சம்பாதித்த 80 ரூபாயை அவன் அவனது மனைவியிடம் குடுக்காமல் அவனே வைத்து கொண்டான் .. நாளைக்கு எப்படியும் 4 பர்சையாவது விக்கணும் அந்த காச வச்சு அவளுக்கு பட்டு பாவாடை வாங்கி குடுக்கலாம் என்று முடிவு செய்தான் .. அடுத்தநாள் காலையில் அவனது குழந்தையிடம் இன்னிக்கு வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா வீட்டுல பட்டு பாவாடை இருக்கும் என்றான் .. அவனுடைய மகள் சந்தோஷமாக சிரித்துகொண்டே தன்னுடைய பையை எடுத்து கொண்டு பள்ளிக்கு ஓடினால் .. அவனும் தன்னுடைய கோணியை எடுத்து கொண்டு கிளம்பினான் .. மணி 11 இருக்கும் அவனது கையில் சிறிய மழை துளி விழுந்தது வானத்தை பார்த்தான் கருப்பு மேகங்கள் சூழ்ந்து இருந்தது ..
காலைல இருந்து ஒரு பர்சு கூட விற்கள மழை வந்தால் என்ன செய்வது என்று யோசித்து முடிக்கும் முன்பு மழை கொட்ட தொடங்கியது .. பர்சுகளை எடுத்து கோணியில் வைத்து விட்டு ஒதுங்கி நின்றான் .. 3 மணி நேரமாகியும் மழை நிற்க வில்லை .. தன்னுடைய மனைவி தான் தைத்து கொண்டிருக்கும் துணிக்கு இரண்டு நாளில் பணம் கிடைக்கும் என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது .. அந்த பணத்தை வைத்து பட்டு பாவாடை வாங்கி கொள்ளலாம் பிறகு மளிகை கடை கச்றருக்கு பணம் குடுக்கலாம் என்று நினைத்து வீட்டிற்கு நடந்தான் .. வழியில் அந்த துணி கடையை பார்த்தான் திறந்திருந்தது .. மலையில் நனைதபடியே வீட்டுக்கு வேகமாக நடந்தான் .. வீட்டில் அவனது மனைவி துணி தைத்து கொண்டிருந்தால் .. துணி தைத்த பணம் எங்கே என்று கேட்டான் .. ஏன் கேக்குறிங்க ? பிளாஸ்டிக் கவர எடுத்து தலைல மாடிகாம ஏன் இப்படி நனைந்து கொண்டே வந்திங்க என்று கேட்டால் .. அதெல்லாம் விடு பணம் என்னாச்சு என்றான் .. காலையில்தான் மளிகை கடை காரரிடம் குடுத்ததாக சொன்னால் .. கோணியை கீழே போட்டு விட்டு அமைதியாக இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு கீழே பார்த்து கொண்டு நின்றான் .. எதுக்கு பணம் கேக்குறிங்க என்று கேட்டு கொண்டே துண்டை எடுத்து குடுத்தால் .. எப்படியாவது அவளுக்கு பட்டு பாவாடை வாங்கிடலாம்னு நினச்சேன் ஆனா இப்படி ஆகிடுச்சே என்றான் .. இதுக்குதான் நா அப்பவே அவ மனசுல ஆசையா வளகாதிங்கனு சொன்னேன் நீங்கதான் கேட்கல .. சரி விடுங்க அவள நா பாத்துக்குறேன் நீங்க சாப்டுங்க என்றால் .. இல்ல பசிகள என்று கூறிவிட்டு அவனுடைய வீடு வாசல் படியில் உட்கார்ந்தான் .. இடிகளுடனும் மின்னல்களுடனும் சேர்ந்து மழை வேகமாக பெய்து கொண்டு இருந்தது ...
எதிரில் இருந்த தென்னை மரத்தை சுற்றி இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்க தொடங்கியது .. அதை வெறித்து பார்த்து கொண்டே தன்னுடைய கையாளாக தனத்தை நினைத்து வருந்தினான் .. இன்னும் மூன்று மணி நேரத்தில் தன்னுடைய மகள் வந்து விடுவாள் .. இன்று எப்படியும் நான் பட்டு பாவாடை வாங்கி வருவேன் என்று நினைத்து கொண்டு சந்தோஷமாக பள்ளிக்கு சென்றால் .. வீட்டிற்கு வந்து இல்லை என்று தெரிந்தால் அவள் எப்படி அழுவாள் என்று நினைத்தான் .. தான் சிறு வயதில் திருவிழா கடைகளில் பலூன் கேட்டு தன்னுடைய தந்தை வாங்கி தராதபோது தனக்கு எவ்வளவு வலித்தது இப்போலோது அந்த வழியை தன்னுடைய மகளுக்கும் குடுக்க போகிறேன் என்று நினைத்தான் .. கஷ்டப்பட்டு உழைக்கிற எல்லாமே அவளுக்காகத்தான் ஆனால் அவளுக்கு இந்த சின்ன சந்தோஷத்த கூட குடுக்க முடியலையே .. இதுக்கு யார் காரணம் ஒழுங்கா படுசிருந்தா பெரிய வேலைக்கு போகி இருக்கலாம் அவள் நினைத்ததெல்லாம் வாங்கி தந்திருக்கலாம் அனால் சின்ன வயசுலேயே தன்னுடைய தந்தை இறந்ததால் பள்ளியை விடவேண்டிய நிலைமை .. இந்த பாலா போன மழை ரெண்டு நாள் தள்ளி பெய்திருந்தால்கூட பணம் கிடைத்திருக்கும் .. இந்த கடவுள் தனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறான் என்று நினைத்து தன்னுடைய வீட்டிலிருந்த சாமி படத்தை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான் திடீரென்று அவனுடைய முகம் மாறியது .... அவனுடைய கண்களில் நீர் தேங்கியது அது அழுகையால் அல்ல ஆனந்த கண்ணீர் அங்கு அவன் கண்டது ...................................................................... தன்னுடைய மனைவி பழனி முருகனுக்கு துணியில் முடிந்து வைத்திருந்த பணம் .............. ……………………………………………….
-கிஷோர் குமார் .

No comments:

Post a Comment