Saturday 23 July 2011

Hero honda splender


அன்று Hero honda splenderil அசினுடன் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது என்னுடைய போன் ringtone அடிகின்ற சத்தம் கேட்பது போன்று தோணியது,தூக்கத்தில் இருந்து விழித்த நான் போனை தேடினேன் .. ஒரு வழியாக கண்டுபிடித்து எடுத்து பார்த்த போது என்னுடைய சித்தப்பாவின் no. Attend பண்ணி சொல்லுங்க சித்தப்பா என்ன இந்த நேரத்துல பண்ணி இருகிங்கனு கேட்டேன் .. எதிர்முனையில் பேசியது என்னுடைய சித்தி அழுது கொண்டே அவருக்கு heart attack, r.k. Hospitaluku போய்டு இருக்கோம் , நீ உடனே கிளம்பி வானு சொன்னாங்க .. சரி சித்தி நா உடனே வரேன் இப்ப எப்டி இருகாரு என்று கேட்டேன் ?.. மயக்கமாதான் இருக்காருப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீ உடனே வாப்பா... சரி நீங்க பயபடாதிங்க நா உடனே வரேன் என்று கூறி விட்டு கிளம்பினேன் .... அந்த நேரத்தில் பஸ் எதுவும் இல்லை ஆட்டோவில் சென்றேன் .. Hospitalil சித்தி மட்டும் அழுது கொண்டே யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தாங்க என்ன பார்த்த அவர் என்னிடம் டாக்டர் ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்கப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா நீ டாக்டர்ட ஒரு முறை பேசுபானு சொன்னாங்க ......
சிதப்பாவ i.c.u. வில் வைத்து treatement செய்து கொண்டிருந்தனர் .. நீங்க பயபடாந்திங்க ஒன்னும் பிரச்சன இல்ல எப்டி ஆச்சு என்றேன் ?.. தூங்கிட்டுதான் இருந்தாரு திடீர்னு என்ன எழுப்பி உனக்கு போன் பண்ண சொன்னாரு என்னாச்சுனு கேகரதுக்குள்ள அப்படியே மயக்கம்போட்டு விளுந்துடாறு .. சரி ராணிகிட்ட சொல்லிடிங்கள ?.. இப்ப அவ கிட்டதான் பேசுனேன் அவ புருஷன் நைட்-ஷிப்ட் போயிருகாரம் அவரை கூட்டி கொண்டு வரேன்னு சொன்னா .. சரி டாக்டர் ரூம் எங்கனு கேட்டு அவருடைய ரூமுக்கு சென்றேன் .. இப்ப நார்மல் ஆகிட்டாரு ஒரு mild heart attackdhan ஆனா இன்னொரு வாடி வந்துச்சுனா கஷ்டம்னு சொன்னாரு , ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிட்டா பிரச்சன இல்லன்னு சொன்னாரு ..
ஆபரேஷன் பண்ணிரலாம் டாக்டர் அதுக்கு எவ்ளோவ் செலவாகும் ?.. ஒரு 2 and half lakh ஆகும் எதுக்கும் நீங்க அவரோட wife கிட்டையும் daughter கிட்டையும் கேட்டு சொல்லுங்க என்றார் .. என் சித்தியிடம் இதை கூறியபோது , ஆபரேஷன் பண்ணிடலாம் ஊர்ல இருக்க அந்த நிலத்த அடகு வச்சா ரெண்டரை லட்சம் கெடைக்கும்னு சொன்னாங்க .. கொஞ்சம் weaka இருகாரு அதனால ஒரு ரெண்டு நாள் கழித்து ஆபரேஷன் வச்சுக்கலாம் நு டாக்டர் சொன்னாரு ... evening wardku ஷிப்ட் பண்ணாங்க கொஞ்ச நேரத்துல ராணியும் அவளோட புருஷனும் வந்தாங்க .. கண் விழித்த சித்தப்பா டாக்டர் என்ன சொல்றாரு என்றார் .. ஒண்ணுமில்ல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா சரியாகிடும் என்றேன் .. கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு ராணியின் கணவன் ராணியை மட்டும் இங்கே இருக்க சொல்லிவிட்டு கிளம்பினான் .. எங்க சித்தப்பாவுக்கும் ராணியின் கணவருக்கும் கொஞ்சம் ஒத்துவராது அதான் ... என்ன சித்தபாவ பாத்துக்க சொல்லிட்டு சித்தியும் ராணியும் சொந்த ஊர்ல இருக்க நிலத்த அடகு வைகருத்துகாக ஊருக்கு கிளம்பி போனாங்க ....... சித்தப்பா தூங்கிட்டு இருந்தாரு ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பாத்துகிட்டு இருந்தேன் .. Hospitalku பக்கதுல இருந்த வீட்ல splendor bike நின்னு கிட்டு இருந்துச்சு ...................... .........................................................................................எங்கப்பாவும் splendor bikedhan வச்சிருந்தாரு .. தினமும் ஸ்கூல் முடுஞ்சு வந்த உடனே அந்த பைக்ல ஏறி ஒக்காந்து விளையாடறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு .. என்ன பாக்க வரும்போதெல்லாம் என்னோட சித்தப்பா ஒரு 5star choclate வாங்கிட்டு வருவாரு ..போகும்போது என்னோட பாக்கெட்ல பணம் வைப்பாறு ... அந்த வயசுல எல்லார போல நானும் ஸ்சூலு வீட்டுக்கு வந்த உடனே பைக்ல விளையாடுன்னு எதை பத்தியும் யோசிக்காம tension இல்லாத வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்தேன் .....
இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு அன்னக்கி schoola first period தமிழ் , என்னோட சித்தப்பா classuku வந்து தமிழ் டீசர்ட ஏதோ சொன்னாரு . அப்பறம் என்ன சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு .. எங்க போறோம்னு கேட்டதுக்கு என்னோட சித்தப்பா ஒண்ணுமே சொல்லாம வந்தாரு .. அங்க என்னோட வீட்ல ஒரே கூட்டமா இருந்துச்சு .. என்னோட மனசுக்குள்ள ஏதோ ஒரு விதமான பயம் வந்துச்சு .. என்னாச்சு சித்தப்பான்னு கேட்டேன் .. என்னுடைய சித்தப்பா அழுகையை அடக்க முடியாமல் என்னை கட்டி பிடித்து அளதொடன்கினார் ...... என்னோட அப்பாவும் அம்மாவும் காலைல officeku பைக்ல போற வழில accidentaye அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க ...... ஒரு நாளில் என்னுடைய வாழ்கையே சுனாமி அடுச்ச மாதிரி மாறி போனது ...... அடுத்த மாதம் என்னுடைய சித்தப்பா என்னை school hostelil சேர்த்து விட்டார் .. ஊரில் இருந்த அனைவரும் என்னுடைய சித்தப்பாவை என்னை அவர் வீட்டில் வைதுகொல்லாமல் hostelil சேர்த்து விட்டதை கண்டு கடுமையாக திட்டினார்கள் ........ அனால் என்மீது அவருக்குள்ள பாசத்தில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை ... அவர் செய்தது சரிதான் என்னுடைய சித்தப்பாவுக்கு என்னை அவருடன் வைத்துகொள்ள விருபமிருந்தாலும் அவருடைய மனைவியும் குழந்தைகளும் விரும்பமாட்டார்கள் .. அவரால் 24 மணி நேரமும் என்னுடன் இருக்க முடியாது .. என்னை சித்தியோ மற்றவர்களோ கொடுமை படுத்தி விட வாய்ப்புள்ளது அதனால்தான் hostelil சேர்த்து விட்டார் அதுதான் எனக்கு நல்லது என்று அவர் நினைத்தார் . ஒவ்வொரு வாரமும் அவர் என்னை hostelil பார்க்க வருவார் போகும்போது என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்து விட்டு செல்வார் ... அந்த accidentil அந்த splendor bikum நொறுங்கிப்போனது ... Hostelil நான் யாரிடமும் அதிகமாக பேச வில்லை அழுது கொண்டே இருந்தேன் .. ஒரு மாதத்தில் என் அழுகை நின்றது மற்றவர்களை போல இயல்பாக மாறினேன் ..
சின்ன வயதிலிருந்து இப்ப வரைக்கும் splendor bika பாத்தாலே எனக்கு என்னோட அப்பா அம்மாவும் நாங்க சந்தோஷமா இருந்ததுதான் ஞாபகத்துக்கு வரும் .. பெருசான உடனே என்னோட சொந்த காசுல splendor bike வாங்கனும்னு ஆசை பட்டேன் ... கேகுரவன்களுக்கு இதென்னட சின்னபுள்ள தனமா இருக்கு splendor bike மேலபோய் செண்டிமென்ட்னு தோணும் .. இந்த உலகத்துல எல்லாருக்கும் செண்டிமேண்டிருக்கு .. நம்ம frienduko தெருஞ்சவருக்கோ ஒரு கஷ்டம்னா நாம அவனுக்காக வருதபடலாம் ஆனா உண்மையான கஷ்டம் அவனுக்குதான் தெரியும் , செண்டிமெண்டும் அந்த மாதிரிதான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னுதுல செண்டிமேண்டிருகும் அது அவங்குளுக்கு மட்டும்தான் புரியும் ............ கடவுள் இருக்காருன்னு சொல்றவன்ல இருந்து கடவுள் இல்லன்னு சொல்றவனுகும் கடவுள் இருகார இல்லையான்னு கேட்டா தெரியலன்னு சொல்றவன் வரைக்கும் எல்லாருக்கும் செண்டிமெண்ட் இருக்கும் ஆனா அந்த செண்டிமெண்ட் ஒவ்வொருத்தனுக்கும் வேறுபடும் ........... அந்த மாதிரி என்னோட சின்ன வயசுல இருந்து splender bike மேல ஒரு செண்டிமெண்ட் .....News paperla 2000rubai குடுத்துட்டு பைக்க எடுத்துட்டு போங்க மீதிய மாசம் மாசம் கட்டலாம்னு போட்டிருக்கும் .. வேளைக்கு சேந்து மோத மாச சம்பளத்த எடுத்துகிட்டு கடைல போய் கேட்டேன் .. அவங்க சூரிட்டி வேணும் வேளைக்கு சேந்து ஒரு 3 வருஷமாவது ஆகணும்னு அப்பதான் e.m.i.poda முடயும்னு சொன்னாங்க ... இதெல்லாம் வேலைக்காகாது என்று முடிவு செய்து மாதம் மாதம் 4000rubai பாங்கில் போட்டு வைத்தேன் ... இதுவரைக்கும் ஒரு 44000 சேது வச்சிட்டேன் .. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் என்னோட பைக்க வாங்கிடுவேன் என்று நினைக்கும்போது என்னை அறியாமல் உதடோரத்தில் ஒரு சிறிய புன்னகை ..... அடுத்தநாள் காலையில் சித்தப்பாவும் நானும் பேசி கொண்டிருந்தோம் அப்பொழுது சித்தியிடம் இருந்து போன் வந்தது ......
போனை எடுத்த உடன் சித்தப்பா இப்ப எப்படி இருக்காருன்னு கேட்டாங்க .. நல்லா இருகாரு சித்தி காசு ரெடி ஆகிடுச்சா டாக்டர் இன்னிக்கு evening ஆபரேஷன் பண்ணிடலாம்னு சொல்றாரு என்றேன் ... நம்ம அவசரத்துக்கு எதுவும் நடக்க மாட்டிக்குது அடகு வச்சா ஒன்ற லட்சத்துக்கு மேல கிடைக்காதுன்னு சொல்றாங்கபா .. ராணியோட புருஷன் 50000 ரெடி பண்ணி தரேன்னு சொல்றாரு .. அப்பகூட இன்னும் 50000 வேணும் .. அதான் பேசாம நிலைத்த விதுரலாம்னு பாக்குறேன் .. இப்ப ஒருத்தர்கிட்ட பணம் கேட்க போறோம் பணம் கிடைகலேன நிலத்த விதுர வேண்டியதுதான் .. நா எப்படியும் பணம் கொண்டு வந்துருவேன் நீ இன்னக்கி eveninge ஆபரேஷன் பண்ணலாம்னு டாக்டர்ட சொல்லுபான்னு சொன்னாங்க .. சித்தி சொல்ல சொல்ல நான் என்னிடம் 50000 இருக்குனு சொல்லலாமா வேண்டாமான்னு யோசிசிகிட்டே இருந்தேன் .. கடைசியில் சொல்லாமலே சரி சித்தி சீக்கிரம் வாங்க என்று சொல்லி விட்டு போனை கட் செய்தேன் ... சித்தப்பா உன்னோட சித்தி என்ன சொல்றா என்றார் ?...ஒண்ணுமில்ல சித்தப்பா பணம் ரெடி ஆகிடுசான் கிளம்பி வராங்கனு சொன்னேன் ... என்ன இந்த நெலமைக்கு கொண்டு வந்த சித்தப்பாக்கு பணம் குடுக்காம இவளா சுயநலமா இருக்கோமேன்னு தோனுச்சு .. எவ்ளோவோ பிரச்சனை இருந்த போதும் ராணியின் கணவர் 50000rubai தரேன்னு சொல்லி இருகாரு அனால் நா இவளா கேவலமா இருகநேனு தோனுச்சு .. எங்க சித்தப்பாவையே ஒரு நிமிஷம் பாத்துகிட்டு இருந்தேன் ... ரூமை விட்டு வெளிய வந்து சித்திக்கு போன் பண்ணி நா 50000rubai ரெடி பண்ணிட்டேன் நீங்க நிலத்த விக்கவேண்டாம்னு சொன்னேன் .. சித்தி ரூம்க்கு பணத்தோட வந்தாங்க .. அவங்க வந்த பிறகு naa பாங்க்ல போய் பணத்த எடுக்க போனேன் .. பந்த எடுத்துட்டு ரூம்க்கு போய் சித்தியிடம் கொடுத்தேன் அதற்குள் சிதபவிடம் சித்தி எல்லாத்தையும் சொல்லிடாங்க ........................
சித்தியும் ராணியும் பணத்தை கட்டுவதற்காக கீழே சென்றனர் ... என்னுடைய சித்தப்பா என்னை பார்த்து என்னால உனக்கு ரொம்ப கஷ்டமல என்றார்? ..... இவ்ளோவ் வருஷமா நீங்க என்னோட பாக்கெட்ல பணத்த வச்சிங்க இப்ப இது என்னோட முறை என்றேன் .. அவர் என் தலையில் கை வைத்து நா உன்ன hostela செத்து படிக்க வச்சேன்னு உனக்கு கோவமிள்ளயானு கேட்டார் ... நான் இல்லை என்று தலையாட்டினேன் .. நா உன்னோட நல்லதுகாகதான் அப்படி பண்ணுனேன் என்று சொன்னார் ... எனக்கு தெரியும் சித்தப்பா நீங்க எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க என்றேன் ... என் கன்னத்தை தட்டி குடுத்தார் ... ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது ... அடுத்தநாள் என்னுடைய சித்தப்பா நீ officeku நிறைய லீவ் எடுத்துட்ட இப்பத்சன் நாச நல்லாகிடேன்ல நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து ஒழுங்கா office போ.. வீட்டுக்கு நா போய்கிரேன் நீ கிளம்பு என்றார் .. சரி கிளம்புறேன் பாது கூட்டிட்டு போங்க சித்தி என்று கூறி விட்டு கிளம்பினேன் .... Hospitaluku பக்கத்திலிருந்த வீட்டில் இருந்த splender bikai ஒருவர் துடைத்து கொண்டிருந்தார் ............ அந்த baikaiye சில நொடிகள் உற்று பார்த்து கொண்டிருந்தேன் நான் பார்பதை கவனித்த துடைத்து கொண்டிருந்தவர் என்ன? என்பது போல் தலையாட்டினார் நான் சாரி ஒண்ணுமில்ல என்று கூறிவிட்டு திரும்பினேன் ..... .......எனக்கே தெரியாமல் என்னுடைய உதடோரத்தில் ஒரு சிறிய புன்னகையுடன் நடக்க தொடங்கினேன் .................................
-கிஷோர் குமார்

No comments:

Post a Comment